• Tag results for ஆடியோ விழா

கொரில்லா படத்தின் ஆடியோ விழா

ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் ராகவேந்திரா தயாரிப்பில், டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா - ஷாலினி பாண்டே நடிப்பில் குழந்தைகள் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரையும் திருப்தி படுத்தும் விதமாக உருவாகி இருக்கும் படம் `கொரில்லா'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்.

published on : 28th May 2019

முடிவில்லா புன்னகை ஆடியோ விழா

குட்சன் கிரியேஷன்ஸ் சார்பில் ஆரோக்கியசாமி க்ளெமன்ட் தயாரித்து இசையமைத்து இயக்கியிருக்கும் படம் ‘முடிவில்லா புன்னகை’. இதில் நாயகனாக டிட்டோ என்ற பல் மருத்துவர் அறிமுகமாக, நாயகியாக பெங்களூரை சேர்ந்த ரக்‌ஷா நடிக்கிறார். இவர்களுடன் இயக்குநர் ஆரோக்கியசாமி க்ளமென்ட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, கூல் சுரேஷ் வில்லனாக நடித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகை கஸ்தூரி, இயக்குனர் வேலு பிரபாகரன், நடிகர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

published on : 16th April 2019

பிரேக்கிங் நியூஸ் படத்தின் ஆடியோ விழா

ஆண்ட்ரோ பாண்டியன் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் படம் ‘பிரேக்கிங் நியூஸ்’. படத்தை ராகுல் பிலிம்ஸ் சார்பாக கே. திருக்கடல் உதயம் தயாரிக்கிறார். இதில் நாயகியாக பானு அறிமுகமாக உள்ளார். மேலும் இப்படத்தில் தேவ்கில், வேதாளம் வில்லன் ராகுல் தேவ், மந்திரா பேடி, இஷா கோபிகா, பழ. கருப்பையா, ராதா ரவி, கிருதுவாரகீஷ் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர். படத்தின் ஆடியோ விழா சென்னையில் உள்ள AVM ஸ்டூடியோவில் சமீபத்தில் நடைபெற்றது.

published on : 27th February 2019

களரி ஆடியோ வெளியீட்டு விழா

கிரண் சந்த் இயக்கத்தில், செனித் கெலோத் தயாரித்திருக்கும் படம் ‘களரி’. இந்தப் படத்தில் கிருஷ்ணா, வித்யா ஃப்ரதீப், சம்யுக்தா மேனன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பின்னணி பாடகராக இருக்கும் பிரசன்னா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இதன் ஆடியோ வெளியீட்டு விழா ஸ்டில்ஸ்.

published on : 23rd June 2018

மெர்சல் ஆடியோ வெளியீட்டு விழா

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'மெர்சல்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.. மூன்று வேடங்களில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

published on : 22nd August 2017

ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் ஆடியோ விழா

அதர்வா, ரெஜினா கஸாண்ட்ரா, ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரணிதா சுபாஷ், அதீதி என நான்கு நாயகிகளும், சூரி, ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் 'ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்' படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை உள்ள கலைவாணர் அரங்கத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

published on : 28th June 2017

அதாகப்பட்டது மகாஜனங்களே ஆடியோ விழா

நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாகனாக அறிமுகமாகும் படம் 'அதாகப்பட்டது மகாஜனங்களே'. டி இமான் இசையமைக்க, பாடல்களை யுகபாரதி எழுதி உள்ளார். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பிரபலங்களின் புகைப்படத் தொகுப்பு.

published on : 16th June 2017

கோம்பே படத்தின் ஆடியோ விழா

ழுக்க முழுக்க புதுமுகங்களால் உருவாக்கப்பட்டுள்ள படம் தான் ‘கோம்பே’. தேனி, கம்பம் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது, விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினரின் புகைப்படத் தொகுப்பு.

published on : 3rd May 2017

மாயவன் ஆடியோ விழா

சி.வி.குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘மாயவன்’. வித்தியாசமான ஒரு த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன், நாயகியாக லவண்யா த்ரிபாதி நடித்துள்ளனர். இவர்களுடன் டேனியல் பாலாஜி, பகவதி பெருமாள், ஜேபி, மைம் கோபி, பாபு ஆண்டனி உட்பட பலர் நடித்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற இதன் ஆடியோ வெளியீடு விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர்.

published on : 19th April 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை