• Tag results for இந்தியா

சந்திர கிரகணம்

இந்தியாவில் பெனும்ப்ரல் சந்திர கிரகணம்,  ஜூன் 5ம் தேதி இரவு சரியாக 11.15 மணி தொடங்கி 2.34 மணி வரை ஏற்பட்டது. கிரகணம் உச்சம் அடையும் நேரத்தில், பூமியின் புறநிழல் மட்டுமே சந்திரனின் மீது விழுவதால், சந்திரன் ஸ்ட்ராபெரி பழ வண்ணத்தில் தெரியும்.  இந்த கிரகணம் சுமார் 3 மணி நேரம் 18 நிமிடங்கள் நீடித்தது. 

published on : 6th June 2020

நாடு முழுவதும் தீபம் ஏற்றி மக்கள் ஆதரவு

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று நாட்டு மக்கள் அனைவரும் வீடுகளிலும், கட்டடங்களிலும் விளக்கேற்றினர். நன்றி: ANI

published on : 5th April 2020

சபர்மதி ஆசிரமத்தில் டிரம்ப்

1917ம் ஆண்டு ஜூன் மாதம் 17ம் தேதி முதல் மகாத்மா காந்தியடிகளின் இந்த சபர்மதி ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இந்தியா வரும் பல்வேறு உலகத் தலைவர்களும் இந்த ஆசிரமத்துக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில், சபர்மதி ஆசிரமத்துக்கு வருகை தந்த டொனால்ட் டிரம்ப்புக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

published on : 24th February 2020

தொடரை வென்று இந்தியா அபாரம்

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான தொடரைத் தீர்மானிக்கும் 3வது ஒருநாள் ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவுடனான 3வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

published on : 19th January 2020

முப்படைகள் அணிவகுப்புடன் கோத்தபாயவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ மூன்று நாள் அரசுமுறை பயணமாக, இந்தியா வருகை தந்துள்ள நிலையில் அவருக்கு முப்படைகள் அணிவகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடியை கோத்தபாய ராஜபக்சே ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தார்.   

published on : 29th November 2019

இந்தியா - தென் ஆப்பிரிக்கா போட்டி

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பிறகு ஆடிய தென்ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் 431 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆனது.  இதன் 4-ஆம் நாள் ஆட்டத்தின் புகைப்படங்கள்.

published on : 5th October 2019

ராதிகாவின் பறவைக் காதல் புகைப்பட வரிசை (டீப் லவ் ஆக்‌ஷன் ஃபோட்டோகிராபி)

மனிதக்காதலை விட பறவைக் காதல் காணக் காண கொள்ளை அழகு. இந்தப் புகைப்படங்களின் மற்றொரு சிறப்பு.. இவற்றை மிகுந்த ஆவலுடன் எடுத்துப்பதிவிட்டிருப்பவர் இந்தியாவின் முதல் பெண் கானுயிர் புகைப்பட வல்லுநர் ராதிகா ராமசாமி என்பதே!

published on : 26th September 2019

போர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணித்து ஆய்வு செய்தார். இதில் விமானியை போன்று முழு சீருடையில் ராஜ்நாத் சிங் உடன் விமானப்படை துணை மார்ஷல் திவாரி பயணித்தார். 

published on : 20th September 2019

தனிஷ்கா போஸ்லேவுடன் மிஸ் சர்வதேச கேரளா 2019 போட்டியாளர்கள்

2018ல் நடைபெற்ற கேரளா மிஸ் இந்தியா சர்வதேச போட்டியில் வென்ற தனிஷ்கா போஸ்லேவுடன், மிஸ் சர்வதேச கேரளா 2019 கிராண்ட் இறுதிப் போட்டியின் போட்டியாளர்கள். இடம்: கொச்சியில் உள்ள ஹோட்டல் ஹில் பேலஸ்

published on : 4th August 2019

ரசிகையைிடம் ஆசிப்பெற்ற இந்திய அணி கேப்டன்

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்தியா அணியை 87 வயதான மூதாட்டி சாருலதா பட்டேல் உற்சாகமூட்டினார். போட்டிக்கு பிறகு கோலியும், ரோகித் சர்மாவும்  மூதாட்டி சாருலதா பட்டேல் சந்தித்து ஆசி பெற்றனர். இப்படியொரு உற்சாகமான, உணர்வுப்பூர்வமான ரசிகரை நான் கண்டதில்லை. வயது என்பது வெறும் எண் தான், உற்சாகத்துக்கு அது தடையல்ல. அவரின் ஆசியுடன் அடுத்தகட்டத்தில் அடியெடுத்து வைக்கிறோம் என்று இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

published on : 3rd July 2019

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

உலகக் கோப்பை 2019 தொடரில், கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றிப் பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது சரியாக பயன்படுத்திக் கொண்டது.

published on : 10th June 2019
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை