- Tag results for எடப்பாடி பழனிசாமி
![]() | ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் கொண்டாட்டம்மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனையடுத்து 71 கிலோ எடைகொண்ட பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார். விழாவில் அமைச்சர்கள் வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், கருப்பணன், தங்கமணி, செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்றனர். |
![]() | எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாமதுரை தோப்பூரில் சுமார் 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 202 ஏக்கரில், 750 படுக்கை வசதியுடன் அமைய உள்ளது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும் மதுரை – பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, தஞ்சாவூர் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, திருநெல்வேலியில் அமைக்கப்பட்ட அரசு மருத்துவமனையின் சிறப்பு பிரிவுகளையும் திறந்து வைத்தார். இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். |
![]() | ஜெயலலிதா உருவச்சிலை திறப்புமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் ஜெயலலிதா அவர்களின் முழு உருவச் சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திறந்து வைத்தனர். தொடர்ந்து அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது புரட்சித்தலைவி அம்மா' என்ற பத்திரிகையைும் இருவரும் தொடங்கி வைத்தனர். |
![]() | துணை ஜனாதிபதியாக வெங்கய்ய நாயுடு பதவியேற்புநாட்டின் 13-வது துணை ஜனாதிபதியாக வெங்கய்ய நாயுடு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, அமித்ஷா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். |
![]() | போரூர் மேம்பாலம் திறப்புகடந்த 7 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த போரூர் மேம்பாலப்பணிகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கென தமிழக முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பச்சைக் கொடி அசைத்து போக்குவரத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிச்சாமி. |
![]() | தொடங்கியது மெட்ரோ ரயில் சேவைசென்னை திருமங்கலம்-நேரு பூங்கா இடையிலான மெட்ரோ ரயில் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். சுரங்க வழித்தடத்தின் முதல் பகுதியான 7.4 கி.மீ. தூரம் உள்ள கோயம்பேடு முதல் நேரு பூங்கா வரையிலான பயணிகள் சேவை இன்று முதல் துவக்கியது. |