• Tag results for கடை

விநாயகர் சதுர்த்தி விழா - அலைமோதிய கூட்டம்

இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றானது விநாயகர் சதுர்த்தி. இதையொட்டி பூஜை பொருட்கள் வாங்க நேற்று கடைவீதியில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. மேலும் சிறிய மற்றும் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை பொதுமக்கள் பார்வையிட்டு வாங்கி சென்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  உலகம் முழுவதும் விழா கோலம் பூண்டது.

published on : 3rd September 2019

அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் வாங்க குவிந்த மக்கள்

சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. அட்சய திருதியை நாளையொட்டி, நகை வாங்குவதற்கு மக்கள், காலை முதலே நகை கடைகளில் குவிந்தனர். எல்லா நலன்களையும் குறைவில்லாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நாளன்று, தானங்கள் செய்து புண்ணியத்தைப் பெறுவது மிகவும் சிறப்பு.

published on : 8th May 2019

தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடங்கியது

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக கையாளப்பட்டு தீயணைப்பு வண்டி, ஆம்புலன்சுகள், தீயணைப்பு கருவிக ஆகியவற்றுக்கான தனி இடங்கள் ஒதுக்கப்பட்டன.  அனைத்து பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் பட்டாசு விற்பனை தொடங்கியது.  பண்டிகையையொட்டி, தீவுத்திடலில் சுமார் 70 கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

published on : 31st October 2018

கடைக்குட்டி சிங்கம்

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'கடைக்குட்டி சிங்கம்'. சயிஷா சேகல், பிரியா பவானி சங்கர், அர்த்தனா பினு, சூரி மற்றும் பொன்வண்ணன் ஆகியோர் நடித்து உள்ளனர். சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்துள்ளது.

published on : 12th July 2018

கடைக்குட்டி சிங்கம்

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் கடைக்குட்டி சிங்கம். இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை நடிகரும் கார்த்தியின் சகோதரருமான சூர்யா தயாரிக்கிறார். சத்யராஜ், சூரி, சயீஷா, ப்ரியா பவானிசங்கர் ஆகியோர் நடித்து உள்ளனர்.

published on : 6th July 2018

ஸ்ரீதேவி எடுத்துக் கொண்ட கடைசி புகைப்படங்கள்

நடிகை ஸ்ரீதேவி, கணவர் போனி கபூர், இளைய மகள் குஷியுடன் தனது நாத்தனார் மகனான மோஹித் மர்வாவின் திருமணத்தில் கலந்து கொள்ள துபாய் சென்றார். இறக்கும் முன்பு கடைசியாக எடுத்து கொண்ட புகைப்படங்கள்.

published on : 25th February 2018

கீர்த்திசுரேஷை காண ரசிகர்கள் தள்ளுமுள்ளு

சேலத்தில் ஓமலூர் சாலையில் உள்ள பிரபல நகைக்கடை துவக்க விழாவில் நடிகை கீர்த்திசுரேஷ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். இதனைத்தொடர்ந்து கடைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் தன்னுடைய திரை அனுபவங்களை பகிர்ந்துகொண்ட அவரை காண ரசிகர்கள் குவிந்ததால், போலீஸாருக்கும், ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, ரசிகர்கள் மீது போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.

published on : 15th April 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை