• Tag results for கண்காட்சி

கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி

சென்னை பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி பண்டிகையையொட்டி கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி தொடங்கியது. இதில் ராமர்பாலம், சுக்ரீவர் பட்டாபிஷேகம், கீதா உபதேசம், மோட்டு பட்லு என பல வகையான பொம்மை செட்டுகள் இந்த கண்காட்சியில் இடம் பெற்று உள்ளன.

published on : 4th September 2019

ஏற்காட்டில் 44-வது கோடைவிழா மலர்க் கண்காட்சி

ஏற்காட்டில் 44-வது கோடைவிழா மலர் கண்காட்சி தொடங்கியது. தோட்டக்கலைத்துறை சார்பில் ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்காவில் ரோஜா, டேலியா, சால்வியா, மேரிகோல்டு, அஸ்டர், பெண்டஸ், கேலக்ஸ், ஜெனியா, கோழிக்கொண்டை உள்ளிட்ட 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மலர்கள் மூலம் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி பணிகளை மாவட்ட கலெக்டர் ரோகிணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

published on : 31st May 2019

பெங்களூரில் விமான கண்காட்சி

பெங்களூரில் விமான தொழில் கண்காட்சியை பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடக்கி வைத்தார். இதில் உள்நாட்டு போர் விமானங்கள், வெளிநாட்டில் இருந்து வர வைக்கப்பட்ட போர் விமானங்கள் உள்ளிட்ட பல வகை விமானங்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. விமான தொழில் கண்காட்சி நடைபெறுவதையொட்டி பலூன், டிரோன் உள்ளிட்டவை பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

published on : 21st February 2019

விமானத் தொழில் கண்காட்சி 2019

பெங்களூரில் நாளை நடைபெறும் விமானத் தொழில் கண்காட்சி நடைபெறும். இதில், முதல் 3 நாள்கள் வெளிநாட்டு பிரதிநிதிகள், உள்நாட்டு தொழில் விமானத் தொழில் முனைவோர்களுக்காக விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும். 23 மற்றும் 24ஆம் தேதிகளில் பொதுமக்கள் விமானக் கண்காட்சியைக் காண அனுமதிக்கப்படுவார்கள். இதனையொட்டி, பெங்களூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

published on : 19th February 2019

ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்தார் மோடி

திருவிடந்தையில் பாதுகாப்புத் துறை சார்பில் ராணுவ தளவாட கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார்.  சென்னை விமான நிலையத்தில் அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்யநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன்பிறகு, திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

published on : 12th April 2018

ராணுவ தளவாட கண்காட்சியை பார்வையிட்டார் தோனி

சென்னையை அடுத்த மகாபலிபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் ராணுவ தளவாடக் கண்காட்சியில், இந்தியாவில் தயாரான நவீன ரக பீரங்கிகள், டாங்குகள், நவீன ராடார்கள், போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்களின் மாதிரிகள் ஆகியவையும் இடம் பெற்றன. இந்நிலையில் மகேந்திரசிங் தோனி கண்காட்சியை நேரில் சென்று பார்வையிட்டு, ராணுவ அதிகாரிகளிடம் அதன் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார்.

published on : 12th April 2018

திருவிடந்தையில் தொடங்கியது ராணுவ தளவாடக் கண்காட்சி

மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் ராணுவ தளவாடக் கண்காட்சி தொடங்கி வைத்தார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். கண்காட்சியில், 539 இந்திய நிறுவனங்கள், 162 வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்றன. தொடக்க விழாவை முன்னிட்டு ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ராணுவ தளவாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து இந்திய விமானப் படை, கப்பல் படை, ராணுவத்தினரின் சாகச நிகழ்ச்சிகள் அரங்கேறின. இந்தக் கண்காட்சியை பிரதமர் மோடி இன்று ஏப்ரல் 12ல் பார்வையிட உள்ளதை முன்னிட்டு கண்காட்சி நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

published on : 12th April 2018

தீவுத்திடலில் ஏழு அதிசயங்களின் பிரதிபலிப்பு

சென்னை தீவுத்திடலில் உலகில் உள்ள ஏழு அதிசயங்களின் பிரதிபலிப்பு கண்காட்சி நடைபெற்று வருகிறது. இத்தாலி நாட்டின் பைசா நகரில் உள்ள சாய்ந்த கோபுரம். அமெரிக்காவின் எழில் கொஞ்சும் நியூயார்க் நகரின் லிபர்டி தீவில் அமையப்பெற்ற சுதந்திர தேவி சிலையும். இத்தாலி நாட்டில் ரோம் நகரில் அமைக்கப்பட்ட மிகச் சிறப்பான ஒரு நீள்வட்ட வடிவமான அரங்கமும். இந்தியாவில் யமுனை ஆற்றின் கரையில் முழுதுவதும் பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட நினைவுச் சின்னமான தாஜ்மகாலும், ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சீனப்பெருஞ்சுவரும், பிரேசில் நாட்டில் திறந்த கரங்களோடு இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ள ஏசு கிருஸ்துவின் உருவச்சிலையும், மெக்சிகோ நாட்டின் யுகட்டான் என்னுமிடத்திலுள்ள, கொலம்ஸுக்கு முற்பட்ட காலத் தொல்பொருளியற் களம் அமையப்பெற்றது.

published on : 16th January 2018

பிஎம்டபிள்யூ சி400எக்ஸ்

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டர் மாடல் மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பிஎம்டபிள்யூ சி400எக்ஸ் ஸ்கூட்டரில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 350சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு, அதிகபட்சமாக 33 பிஎச்பி பவரையும், 35 என்எம் டார்க் வழங்கும் திறன் கொண்டது. சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெருத்தப்பட்டு அதிகபட்சமாக மணிக்கு 138 கிமீ வேகத்தை தொடும் வல்லமை கொண்டது. டிபியூலர் ஸ்டீல் ஃப்ரேமில் கட்டமைக்கப்பட்ட இந்த ஸ்கூட்டரில் 35 மிமீ ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பு பயன்படுத்தப்பட்டு உள்ளதால் மிக சொகுசான பயணத்தை வழங்கும். முன்சக்கரத்தில் 4 பிஸ்டன் ஃப்ளோட்டிங் காலிபர்களுடன் கூடிய 265மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் சிங்கிள் பிஸ்டன் காலிபர் பொருத்தப்பட்ட டிஸ்க் பிரேக்கும் உள்ளது. மேலும் புதிய பிஎம்டபிள்யூ சி400எக்ஸ் ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட்டுகளும், 6.5 அங்குல டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

published on : 8th November 2017

தொடங்கியது ஏற்காடு மலர்க் கண்காட்சி

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 42-ஆவது கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கிவைத்தார். விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, அமைச்சர்கள், அரசுத் துறை செயலர்கள் கலந்து கொண்டனர். மேலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த உருவ பொம்மைகளின் முன் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

published on : 28th May 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை