• Tag results for கனமழை

வெள்ளக்காடாக மாறிய சென்னை புறநகர்!

வங்க கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி, காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் தொடங்கிய தொடர் கனமழையால் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் எழும்பூர், புரசைவாக்கம், அடையாறு, மயிலாப்பூர், கிண்டி, தாம்பரம், முடிச்சூர், பெருங்களத்தூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழையும்  சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

published on : 2nd December 2019

மேட்டுப்பாளையத்தில் சுற்றுச் சுவர் இடிந்து 17 பேர் பலி  

தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்ற நிலையில், கோவை மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக நடூர் கிராமத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்த குரு (45), ராம்நாத் (20), ஆனந்த்குமார் (40), ஹரிசுதா (16), சிவகாமி (45), ஓவியம்மாள் (50), நதியா (30), வைதேகி (20), திலகவதி (50), அருக்கானி (55), ருக்குமணி (40), நிவேதா (18), சின்னம்மாள் (70), அக்‌ஷயா(7), லோகுராம் (7) உள்ளிட்ட 17 பேர்களின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

published on : 2nd December 2019

சென்னையை வெளுத்து வாங்கிய மழை

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. கனமழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனத்தில் செல்லும் பயணிகள் சற்று சிரமப்பட்டனர்.

published on : 28th November 2019

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை

சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்தது வருகிறது. இந்நிலையில் முகப்பேர், அம்பத்தூர், ஆவடி, திருவல்லிக்கேணி, ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, பெசன்ட் நகர், கோடம்பாக்கம்,  கிண்டி, போரூர், வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர், தாம்பரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்னனர்.

published on : 17th October 2019

வானில் ஏற்பட்ட மாற்றம்

சென்னை திடீரென வானிலை மாறி மழை மேகங்கள் சூழ வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. காலையில் வெயில் காய்ந்த நிலையில் தற்போது திடீரென வானம் இருட்டிக் கொண்டு இருப்பதால் இதமான சூழல் நிலவுகிறது. மேலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

published on : 14th August 2019

தில்லியில் கனமழை

கடந்த சில நாட்களாக தில்லியில் தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இடம்: தில்லி பார்லிமென்ட்.

published on : 6th August 2019

கனமழையால் தத்தளிக்கும் மும்பை

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழையால், மும்பை மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. ரயில்வே தண்டவாளங்கள் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்தில் ஓடு தளத்தினுள் வெள்ள நீர் புகுந்து பாதையை மூழ்கடித்துள்ளது.  இதை ஒட்டி அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. தொடர் மழையால் சாலைகளில் மழை நீர் சேர்ந்து ஆறுபோல் காட்சியளித்தது. 

published on : 2nd July 2019

சென்னையில் கனமழை

தண்ணீர் தட்டுப்பாட்டால் தவித்து வந்த நிலையில் சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகப்பேர், அம்பத்தூர், ஆவடி, தேனாம்பேட்டை, ஆழ்வார்ப்பேட்டை, தியாகராய நகர், கிண்டி, ஈக்காட்டுத் தாங்கல், அசோக் நகர், வளசர வாக்கம், ராமாபுரம், கே.கே. நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வேளச்சேரி, குரோம்பேட்டை, தரமணி, திருவான்மியூர், எழும்பூர் உள்ளிட்ட சென்னையின் பெரும்பாலான பகுதியில் கனமழை வெளுத்து வாங்கியது. பலத்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

published on : 27th June 2019

கருமேகங்கள் திரண்டு சென்னையில் கனமழை

கஜா புயலைப் தொடர்ந்து வங்கக் கடலில் உருவாகியுள்ள வலுவான காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் குளிர்காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.  தொடர்ந்து மழை பெய்வதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

published on : 22nd November 2018

கேரளாவில்  தொடரும் கனமழை - வெள்ளம் - நிலச்சரிவி

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு  மழை வெள்ள பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையால் நிரம்பிய  அணைகள் பாதுகாப்பு கருதி திறக்கப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது தண்ணீர். இந்நிலையில் நீரானது மலை பகுதிகள், சாலைகள், கிராமங்கள் என எல்லாமும் தனது காட்டுப்பாட்டில் வைத்துள்ளது. 

published on : 18th August 2018

வெள்ளத்தில் மிதக்கும் கேரளா மாநிலம்

கேரளாவில் இவ்நூற்றாண்டில்  இல்லாத அளவு கொட்டித்தீர்த்து வரும் கனமழை, நிலச்சரிவில் சிக்கி பலர் பலியாகியுள்ளனர். இந்நிலையில்  மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. தொடர் மழை மற்றும் அணைகளிலிருது வெளியாகும் தண்ணீர் காரணமாக கண்ணூர், இடுக்கி, எர்ணாகுளம், கோழிக்கோடு மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஓடுபாதை நீரில் மூழ்கி உள்ளதால் விமான சேவையும்,  ரயில் போக்குவரத்தும் மூடப்பட்டுள்ளது. படங்கள் உதவி: ஏஎன்ஐ

published on : 16th August 2018

கேரளாவில் மீண்டும் கனமழை

கடந்த 50 ஆண்டுகளுக்கு பின்னர் வரலாறு காணாத வகையில் கனமழை  கொட்டி வருவதால், இதுவரை ஏராளமானோர் பலியானார்கள். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. சாலை, பாலம், ரெயில் தண்டவாளம், மின் கம்பங்கள் சேதமடைந்தன. அணைகள் திறப்பால் நீர் ஆர்பரித்து எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

published on : 14th August 2018

கேரளாவில் கனமழை

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 15 வருடங்களில் இல்லாத அளவுக்கு கடும் கனமழை பெய்து வருவதால் அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் மாநிலம் முழுவதும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

published on : 10th August 2018

மும்பையில் கனமழை

கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில், நேற்று இரவு முதல் இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஒடியது. சில இடங்களில் மரங்கள் விழுந்தன. கிழக்கு மற்றும் மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகளின் சில பகுதிகளில் நீரில்மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில்கள்  போக்குவரத்து தாமதமாகியுள்ளது.

published on : 25th June 2018

மும்பையில் கனமழை

பருவமழை தொடங்கியதையொட்டி, மும்பையில் கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்ன, ரயில்கள் சேவை தாமதமாகியுள்ளன. பருவமழை முன்கூட்டியே தொடங்கியிருப்பதால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

published on : 11th June 2018
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை