• Tag results for குடிநீர்

புத்துயிர் பெறும் தாமரை குளம்

பல ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தாமரை குளம், ஒரு காலத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வந்தது. மேலும், மழைக்காலத்தில் சுற்று வட்டாரத்தில் இருந்து வரக்கூடிய தண்ணீர் இந்த குளத்தில் தேங்கி, சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கியது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த குளத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சரியாக பராமரிக்காததால், எங்கு பார்த்தாலும் குப்பை குவியலாக காட்சியளித்தது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றாக இணைந்து தாமரை குளத்தை தூர்வாரி கரையை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

published on : 22nd August 2019

குடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள் 

ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்குக் குடிநீர் கொண்டு வரப்பட்டது. குடிநீரை சென்னைக்கு விநியோகம் செய்யும் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, பி. பென்ஜமின், க.பாண்டியராஜன் உள்ளிட்டோர்.

published on : 13th July 2019

சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்

தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை நகரில் நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்துக்குச் சென்றதால் குடிநீர் வாரியம் விநியோகிக்கும் தண்ணீரையே அனைவரும் நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த அசாதாரணமான சூழ்நிலையில், சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க தமிழக அரசு, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாக நீரைப் பெறும் திட்டத்தைத் தொடங்கவுள்ளது.

published on : 26th June 2019

வறண்டு போகும் நிலையில் போரூர் ஏரி!

சென்னை நகரத்தின் தாகத்தை தணித்து வரும் ஏரிகளில் ஒன்று போரூர் ஏரி. ஏரிகள் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிப்பதுடன், குடிநீர் வழங்கும் அட்சய பாத்திரமாகவும் விளங்கி வருகிறது. பெருகி வரும் மக்கள்  தொகை, வீட்டு மனைப் பெருக்கம் , சென்னை நகரின் குடிநீர் தேவையை ஆண்டுக்காண்டு அதிகரித்து வரும் நிலையில், வருண பகவானை நினைத்து  ஏங்க  வைக்கும்  நிலையில் தற்போது உள்ள போரூர் ஏரி.

published on : 5th March 2019
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை