• Tag results for கேரளா

கேரளத்தில் கனமழை, நிலச்சரிவு - புகைப்படங்கள்

கேரளத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

published on : 17th October 2021

ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களின் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்

கேரளாவில் ஓரே பாலினத்தைச் சேர்ந்தவர்களின் சமீபத்திய திருமணத்திற்கு முந்தைய காதல் படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

published on : 19th December 2019

தனிஷ்கா போஸ்லேவுடன் மிஸ் சர்வதேச கேரளா 2019 போட்டியாளர்கள்

2018ல் நடைபெற்ற கேரளா மிஸ் இந்தியா சர்வதேச போட்டியில் வென்ற தனிஷ்கா போஸ்லேவுடன், மிஸ் சர்வதேச கேரளா 2019 கிராண்ட் இறுதிப் போட்டியின் போட்டியாளர்கள். இடம்: கொச்சியில் உள்ள ஹோட்டல் ஹில் பேலஸ்

published on : 4th August 2019

திருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் உள்ள திருநெல்லி கோயிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் சிறப்பு வழிபாடு.  அங்கு அவரது தந்தை ராஜீவ் அஸ்தியை கரைத்து பித்ரு வழிபாடு செய்தார்.

published on : 17th April 2019

தத்தளிக்கும் கேரளா

கனமழை, நிலசரிவு மற்றும் பெருவெள்ளத்தால் தத்தளித்து வந்த நிலையில், பருவமழை சற்று குறைந்தும் வெள்ளக்காடாய் காட்சி  அளிக்கும் கேரளா மாநிலம்.

published on : 21st August 2018

கேரளாவில்  தொடரும் கனமழை - வெள்ளம் - நிலச்சரிவி

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு  மழை வெள்ள பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையால் நிரம்பிய  அணைகள் பாதுகாப்பு கருதி திறக்கப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது தண்ணீர். இந்நிலையில் நீரானது மலை பகுதிகள், சாலைகள், கிராமங்கள் என எல்லாமும் தனது காட்டுப்பாட்டில் வைத்துள்ளது. 

published on : 18th August 2018

மிதக்கும் கேரளா

கேரளாவில் தொடர் கனமழையால் ஆறுகள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன. மொத்தம் உள்ள 39 அணைகளில் 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், தொடர் மழையால் கேரளாவின் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கை சீற்றத்தில் இருந்து மீட்க, மத்திய அரசு உட்பட பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

published on : 17th August 2018

வெள்ளத்தில் மிதக்கும் கேரளா மாநிலம்

கேரளாவில் இவ்நூற்றாண்டில்  இல்லாத அளவு கொட்டித்தீர்த்து வரும் கனமழை, நிலச்சரிவில் சிக்கி பலர் பலியாகியுள்ளனர். இந்நிலையில்  மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. தொடர் மழை மற்றும் அணைகளிலிருது வெளியாகும் தண்ணீர் காரணமாக கண்ணூர், இடுக்கி, எர்ணாகுளம், கோழிக்கோடு மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஓடுபாதை நீரில் மூழ்கி உள்ளதால் விமான சேவையும்,  ரயில் போக்குவரத்தும் மூடப்பட்டுள்ளது. படங்கள் உதவி: ஏஎன்ஐ

published on : 16th August 2018

கேரளாவில் மீண்டும் கனமழை

கடந்த 50 ஆண்டுகளுக்கு பின்னர் வரலாறு காணாத வகையில் கனமழை  கொட்டி வருவதால், இதுவரை ஏராளமானோர் பலியானார்கள். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. சாலை, பாலம், ரெயில் தண்டவாளம், மின் கம்பங்கள் சேதமடைந்தன. அணைகள் திறப்பால் நீர் ஆர்பரித்து எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

published on : 14th August 2018

கேரளாவில் கனமழை

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 15 வருடங்களில் இல்லாத அளவுக்கு கடும் கனமழை பெய்து வருவதால் அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் மாநிலம் முழுவதும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

published on : 10th August 2018

ஓணம் பண்டிகை கோலாகலம்

ஆவணி மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் திருவோண திருவிழா சித்திரை, சுவாதி, விசாகம், அனுசம், கேட்டை, மூலம், பூராடம், உத்ராடம், திருவோணம் என பத்து நட்சத்திர நாட்களிலும் கொண்டாடப்படுகிறது. மலையாள மக்களின் வசந்த விழாவான ஓணம் பண்டிகை வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மக்கள் தங்கள் வீடுகளில் பூ கோலமிட்டு கொண்டாடுகின்றனர்.

published on : 5th September 2017

பாவனா வழக்கு: நடிகர் திலீப் கைது

பாவனாவை கடத்தியது, மானபங்கம் செய்தது, அதை வீடியோவாகப் பதிவு செய்தது போன்றவற்றின் பின்னணியில் நடிகர் திலீப்பைக் போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்துப் கேரள காவல்துறை தலைவர் லோக்நாத் பெஹ்ரா தெரிவிக்கையில் விசாரணையின்போது காவல்துறை திரட்டிய ஆதாரங்களின் அடிப்படையில் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.

published on : 11th July 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை