• Tag results for கோயில்

ஸ்ரீ சௌந்தரேஸ்வரர் கோவில் - திருநாரையூர்

விநாயகருக்கே முக்கியத்துவம் அதிகம் உள்ள ஒரு சிவாலயத்தைப் பற்றி நாம் இதில் தெரிந்து கொள்ளப் போகிறோம். பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 33-வது தலமாக விளங்குவது திருநாரையூர்.  படங்கள்: கடம்பூர் விஜயன் 

published on : 22nd June 2020

தமிழக கோயில்களில் தரிசனம் ரத்து

கரோனா வைரஸ் எதிரொலியாக தமிழகமெங்கும் திருக்கோயில்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதையொட்டி ராஜகோபுரம் கதவுகள் மூடப்பட்டுள்ளது. கோயில் வளாகத்துக்கு வெளியே நின்று பக்தர்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர். மேலும் அனைத்து சந்நிதிகளிலும் ஆகம விதிகளுக்கு உட்பட்டு வழிபாடுகள் வழக்கம்போல் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

published on : 20th March 2020

சத்தி அருள்மிகு பவானிஈஸ்வரர் கோயில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பவானி ஆற்றங்கரையோரம் பழமை வாய்ந்த, பிரசித்திபெற்ற பவானிஈஸ்வரர் திருக்கோவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தின் காரணமாக கோவிலின் சுற்று சுவர் இடிந்து விழுந்தது. இதனையடுத்து சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்றுது. இந்நிலையில் இன்று அதிகாலை புதிதாக கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் 63 நாயன்மார்கள் சிலைகளும் சேதமடைந்தன.

published on : 10th March 2020

தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு தமிழ் மற்றும் சம்ஸ்கிருத வேதங்கள் முழங்க வெகு விமரிசையாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுர குடமுழுக்கும், பெரியநாயகி உடனுறை பெருவுடையார் மற்றும் அனைத்து மூலவர்களுக்கு குடமுழுக்கும், மஹா தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்கியருளல் ஆகியவை நடைபெற்றன. 23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடப்பதால் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

published on : 5th February 2020

அயோத்தியில் ராமர் கோயில்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷண், டி.ஒய்.சந்திரசூட், எஸ்.அப்துல் நஸீர் ஆகியோரை கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. இனி விரைவில் ஸ்ரீ ராமர் கோயில் கட்டப்படும்.

published on : 10th November 2019

கடலூர் வட்ட சிவன் கோயில்கள் - பகுதி II

கடலூர் வட்ட சிவன் கோயில்கள் பற்றி நாம் தற்போது பார்ப்போம். இந்த வட்டத்தில் கெடிலக்கரை நாகரீகம் அன்று சிறப்புற்று இருந்தது. நாயன்மார்கள், ஞானிகள் உள்ளிட்ட பல பெரியோர்கள் பிறந்த மண். தலைநகர் உள்ள வட்டம் என்றாலும் இங்கும் பல சிவாலயங்கள் போதிய பராமரிப்பின்றியே தற்போது உள்ளது. படங்கள் உதவி: கடம்பூர் விஜயன்

published on : 25th October 2019

கடலூர் வட்ட சிவன் கோயில்கள் - பகுதி I

கடலூர் வட்ட சிவன் கோயில்கள் பற்றி நாம் தற்போது பார்ப்போம். இந்த வட்டத்தில் கெடிலக்கரை நாகரீகம் அன்று சிறப்புற்று இருந்தது. நாயன்மார்கள், ஞானிகள் உள்ளிட்ட பல பெரியோர்கள் பிறந்த மண். தலைநகர் உள்ள வட்டம் என்றாலும் இங்கும் பல சிவாலயங்கள் போதிய பராமரிப்பின்றியே தற்போது உள்ளது. படங்கள் உதவி: கடம்பூர் விஜயன்

published on : 25th October 2019

கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங்   

மாமல்லபுரம் கடற்கரை கோயிலின் சிற்பங்களை  குறித்து சீன அதிபருக்கு பிரதமர் மோடி விளக்கினார். பிறகு கடற்கரை கோயிலில் லிங்க வடிவில் சோமாஸ்கந்தர், பள்ளிக்கொண்ட நிலையில் உள்ள ஜலசயன பெருமாள், வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்து ரதம் பகுதியில் சிற்ப வேலைப்பாடுகள் குறித்தும்,  குடைவரைக் கோயில்களின் தொன்மை குறித்தும் விளக்கினாா். இதனை முன்னிட்டு மாமல்லபுரத்தில் ஒரு வரலாற்று நிகழ்வு நடைபெற்றது.

published on : 12th October 2019

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் (2019) - விழா கோலாகலம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின்  போது மலையப்ப சாமி 4 மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவிந்தா, கோவிந்தா என்று கோஷங்கள் எழுப்பியபடி பக்தர்கள் மலையப்ப சாமியை தரிசனம் செய்தனர். 

published on : 4th October 2019

வந்தாரை வாழ வைக்கும் சென்னை - பகுதி II | #Madrasday 

சென்னை - பழமையும் புதுமையும் கலந்த ஒரு அபூர்வ நகரம். பீச், கோயில்கள், பழமை வாய்ந்த கோபுரங்கள், சர்ச்சுகள், மசூதிகள் என்று புராதனம் ஒரு புறம், விதவிதமான மால்கள், மெட்ரோ ரயில்கள், நான்கு வழிச் சாலைகள், இரண்டு அடுக்கு பாலங்கள், வானளாவிய கட்டடங்கள் என்று புதுமை ஒரு புறம் என தன்னுடைய வளர்ச்சியை விரிவுபடுத்திக் கொண்டேயிருக்கிறது.

published on : 21st August 2019

அத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII

திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில், உள்ள அனந்த புஷ்கரணியில் இருந்து எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ ஆதி அத்தி வரதர். இந்த வைபவம் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17 வரை நடைுபெற்று வருகிறது. இதில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் ஸ்ரீ அத்தி வரதரை தரிசனம் செய்த வருகின்றனர்.

published on : 16th August 2019

கடலூர்அருங்காட்சியகத்தில் அரிய சிலைகள்

அகழாய்வில் கிடைத்த திமிங்கல எலும்பு முதல் ஆதிமனிதனின் ஈமத்தாழி, சோழ பல்லவ பாண்டிய கோயில் சிலைகள் கடலூர் அருங்காட்சியத்தில் பொதுமக்கள் பார்வைக்கு உள்ளன. படங்கள் உதவி: கடம்பூர் விஜயன்.

published on : 16th August 2019
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை