• Tag results for சரஸ்வதி

நவராத்திரி கொண்டாட்டம்

நவம் என்றால் ஒன்பது என்று பொருள். ராத்திரி என்றால் இரவு என்று பொருள். ஒன்பது இரவுகளில் அம்பிகையைக் கொண்டாடி, விரதம் இருந்து வழிபட்டு வந்தால் பொன், பொருள்கள் குவியும் என்கிறது  சாஸ்திரம்.  மலை மகள், அலை மகள், கலை மகள் என்று துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரை வணங்குகின்றனர். இதில்  துர்க்கை வீரத்தை அளிப்பவளாகவும், திருமகள் செல்வத்தை அருள்பவளாகவும், சரஸ்வதி கல்வியை அருள்பவளாகவும் விளங்குகின்றனர். தேவியை வணங்க நவராத்திரியே ஏற்ற காலமாகக் கருதப்படுகிறது.

published on : 18th October 2018

களைகட்டும் ஆயுதபூஜை வியாபாரம்

நவராத்திரி பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகைகள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பூக்கள் பழங்கள் விற்பனை, பூஜை பொருட்களின் விற்பனை களைகட்டியுள்ளது. இதையொட்டி கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பொதுமக்கள் திரண்டு ஆர்வத்துடன் பூ, பூசணிக்காய் மற்றும் பழங்கள் வாங்கி சென்றனர்.  கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை அதிகரித்துள்ளதாகவும் அதிக அளவிலான மக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கி வருவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதேபோல் வாழை கன்று, மாவிலை தோரணம் மற்றும் பூஜை சாமன்கள் உள்ளிட்டவற்றின் விற்பனையும் சூடு பிடித்துள்ளது.

published on : 18th October 2018

ஸ்ரீ ஜயேந்திரர் உடல் நல்லடக்கம்

காஞ்சி காமகோடி பீடத்தின் 69ஆவது மடாதிபதி, காஞ்சி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று சித்தியடைந்தார். இந்நிலையில் வேத மந்திரங்கள், அபிஷேக ஆராதனைகளுடன் ஸ்ரீ ஜயேந்திரரின் உடல் இன்று காலை நல்லடக்கம் செய்யப்பட்டது. 

published on : 1st March 2018

69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி மறைவு

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் எல்லோராலும் போற்றி வணங்கப்படும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உடல் நலக்குறைவால் காலமானார். ஜெயேந்திரர், 1935ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் இருள்நீக்கியில் பிறந்தார். 1954ஆம் ஆண்டு இளைய மடாதிபதியாக ஜெயேந்திரர் நியமிக்கப்பட்டார். காஞ்சிபுரம் மடத்தின் 69-வது தலைவராக 1994ல் ஜெயேந்திரர் பொறுப்பேற்றார். இவரின் இயற்பெயர் சுப்ரமணியம் மஹாதேவா.

published on : 28th February 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை