• Tag results for சிலை

சிங்கப்பூரில் காஜல் அகர்வாலுக்கு மெழுகுச்சிலை

தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால்.  சிங்கப்பூரில் உள்ள மேடம் டூஸாட் மெழுகுச்சிலை மியூசியத்தில், நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. இம்மெழுகுச் சிலையின் திறப்பு விழாவில் காஜல் அகர்வாலும் கலந்து கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

published on : 5th February 2020

காந்தி சிலைக்கு கவர்னர் - முதல்வர் மலர்தூவி மரியாதை

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

published on : 2nd October 2019

மீட்கப்பட்ட கல்லிடைக்குறிச்சி பஞ்சலோக நடராஜர் சிலை

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட கல்லிடைக்குறிச்சி நடராஜர் சிலையுடன் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர்.

published on : 14th September 2019

விநாயகர் சதுர்த்தி விழா - அலைமோதிய கூட்டம்

இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றானது விநாயகர் சதுர்த்தி. இதையொட்டி பூஜை பொருட்கள் வாங்க நேற்று கடைவீதியில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. மேலும் சிறிய மற்றும் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை பொதுமக்கள் பார்வையிட்டு வாங்கி சென்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  உலகம் முழுவதும் விழா கோலம் பூண்டது.

published on : 3rd September 2019

வந்தாரை வாழ வைக்கும் சென்னை - பகுதி I - பழைய படங்கள்

தமிழகத்தின் தலைநகரம். இந்தியாவின் நான்காவது பெரிய நகரம். உலகின் 35 பெரிய மாநகரங்களில் ஒன்று என எண்ணற்ற பெருமைகளை தன்னகத்தே கொண்டது இன்றைய சென்னை. இது, 1996-ஆம் ஆண்டுக்கு முன்புவரை 'மெட்ராஸ்' என்றே அழைக்கப்பட்டு வந்தது. இப்படி வந்தோரை வாழ வைக்கும் சென்னையின் பெருமைகளை ஒருசில நிமிடங்களில் சொல்லிவிட முடியாது. காணந்தோறும் ஒரு அற்புதத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் சிங்காரச் சென்னைக்கு இன்று சிறப்பான நாள். வாழ்த்துவோம், வாழுவோம்.

published on : 21st August 2019

கடலூர்அருங்காட்சியகத்தில் அரிய சிலைகள்

அகழாய்வில் கிடைத்த திமிங்கல எலும்பு முதல் ஆதிமனிதனின் ஈமத்தாழி, சோழ பல்லவ பாண்டிய கோயில் சிலைகள் கடலூர் அருங்காட்சியத்தில் பொதுமக்கள் பார்வைக்கு உள்ளன. படங்கள் உதவி: கடம்பூர் விஜயன்.

published on : 16th August 2019

அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அண்ணா அறிவாலயத்தில் 9 அடி உயரத்தில் வெண்கல சிலையை, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் நடிகர் ரஜினிகாந்த், பிரபு, வடிவேல், விவேக் உள்பட பலரும் பங்கேற்றனர். திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில், பொதுச்செயலாளர் க.அன்பழகன் வரவேற்றார். துரைமுருகன், ஜெ.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

published on : 17th December 2018

 ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு

அதிமுக அலுவலகத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலையை கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.இந்த நிகழ்ச்சியில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இச்சிலையானது, 8 அடி உயரத்தில் 800 கிலோ எடையில் வெண்கலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

published on : 15th November 2018

கொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே குரு ஸ்தலமான சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில் பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவி மற்றும் சீனிவாச பெருமாள் ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் கொள்ளை போனது. புகாரின் பேரில்  3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டி அருகில் உள்ள கல்யாணிபட்டி பிரிவில் உள்ள ஒரு தோட்டத்தில் 4 சிலைகளும் போலீஸார்  மீட்டனர். மீட்கப்பட்ட சித்திர ரத வல்லப பெருமாள் கோயில் ஐம்பொன் சிலைகளை பார்வையிடுகிறார் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல்.

published on : 17th October 2018

துர்கா பூஜைக்கு தயாராகும் சிலைகள்

புரட்டாசி மாதம், அமாவாசைக்கு அடுத்த நாள் அதாவது பிரதமை திதியில் இருந்து நவராத்திரி துவங்குகிறது. தொடர்ந்து வரும் ஒன்பது நாட்களும் நவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது. முப்பெரும் தேவியரை வணங்கும் நவராத்திரி பண்டிகை இன்று முதல் ஆரம்பமாகிறது. நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் லட்சுமி உரியவை. அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கு உகந்தவை. கடைசி மூன்று நாட்களும் சரஸ்வதியின் நாட்கள்.  துர்கை சிலைக்கு வர்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி.

published on : 10th October 2018

பெண் தொழிலதிபர் வீட்டில் சிலைகள் மீட்பு

தொழிலதிபர்கள் தீனதயாளன் மற்றும் ரன் வீர் ஷா ஆகியோர் வீடுகளைத் தொடர்ந்து போயஸ் கார்டன் பகுதியில் உள்ள கிரண் ராவ் என்ற  பெண் தொழிலதிபர் வீட்டில் சிலை கடத்தல் தடுப்புப் போலீஸார் நடத்திய சோதனையில் வீட்டின் வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த தொன்மையான  சிலைகள் மற்றும் கோவில் தூண்களை கைப்பற்றினர்.

published on : 7th October 2018

சன்னி லியோனுக்கு மெழுகு சிலை

பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக கலக்கி வரும் நடிகை சன்னி லியோனுக்கு தில்லியில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள் பலருக்கும் வைக்கப்படும் மெழுகு சிலை தற்போது சன்னி லியோனுக்கும் வைக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த அழகான சிலையை செய்தவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

published on : 19th September 2018

சென்னையில் விநாயகர் சிலைகள் கரைப்பு

விநாயகர் சதுர்த்தியையொட்டிக் சென்னையில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இந்த விநாயகர் சிலைகள் 5 நாட்களுக்கு வழிபாடு நடத்தப்பட்டு பின்னர் கடலில் கரைக்கப்படுவது வழக்கம்.  இந்நிலையில் சென்னையில் திருவொற்றியூர், காசிமேடு, எண்ணூர், நீலாங்கரை, பட்டினப்பாக்கம் ஆகிய 5 இடங்களில் சிலைகளைக் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க முக்கியமான சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

published on : 17th September 2018

விதவிதமான விநாயகர் சிலைகள்

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் விநாயகர் சிலைகள் 3 அடி முதல் 15 அடி உயரம் வரையிலான ஐந்து முக விநாயகர், வீரசிவாஜி விநாயகர், விஷ்ணு விநாயகர்,  நடன விநாயகர், சிவன்-பார்வதியுடன் விநாயகர், ரதத்தில் செல்லும் விநாயகர், ஆஞ்சநேயர் சுமந்து செல்லும் விநாயகர், பாகுபலி விநாயகர், ஜல்லிக் கட்டு விநாயகர், சிங்கத்தின் மீது அமர்ந்து செல்லும் விநாயகர், 3 தலைகள் கொண்ட விநாயகர், முருகர், கிருஷ்ணருடன் விநாயகர் உள்ளிட்ட பல்வேறு விதமான சிலைகளை சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.  மேலும் விநாயகர் சிலைகள் தமிழகத்தின் மட்டுமன்றி ஆந்திரம், கர்நாடகம், கேரளம் போன்ற பிற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. 

published on : 12th September 2018

விராட் கோலிக்கு மெழுகு சிலை

தில்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்றவற்றில் ஈடுபட்டு வரும் பிரபலங்களுக்கு மெழுகினால் ஆன ஆள் உயர சிலை வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வரிசையில் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.

published on : 7th June 2018
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை