• Tag results for சென்னை

முடங்கியது சென்னை - புகைப்படங்கள்

கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் தொற்று கட்டுக்குள் கொண்டு வர சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில்,  சென்னை மாநகர சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

published on : 19th June 2020

களைகட்டும் பறவைகள் சரணாலயம்

சென்னை பல்லிகாரனை சதுப்பு நிலத்தில் வருகை தந்த நாரைகள். இப்பறவைகள் குளங்களில் உள்ள மீன்களையும், புல்வெளிகளில் உள்ள வெட்டுக்கிளி போன்ற பூச்சி இனங்களையும் உணவாக உட்கொள்ளும்.

published on : 16th June 2020

சென்னையை மிரட்டும் மேகங்கள்

சென்னையில் பகலை இரவாக்கும் வகையில் சூழ்ந்த கருமேகங்கள். இதனால் வெப்ப காற்று தளர்ந்து, குளிர்ந்த காற்று வீசியதால், மக்கள் சற்றே இளைப்பாறினர்.

published on : 15th June 2020

சென்னையில் பனிமூட்டத்துடன் புகைமூட்டம்

சென்னையில் போகி பண்டிகையை முன்னிட்டு அதிகாலையில் பழைய பொருட்கள் எரித்ததால் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. அதிகாலை முதல் சாலையே தெரியாத அளவுக்கு பனிமூட்டம் மற்றும் புகை மூட்டம்  சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணித்தனர். பனிமூட்டத்துடன் இந்த புகையும் சேர்ந்ததால் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது.

published on : 14th January 2020

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை சிந்தாதிரிப்பேட்டை சத்தியவானி நகரில் உள்ள ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடிக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து வந்தனர். பிறகு மாநகராட்சி அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து தரைமட்டமாக்கினர்.

published on : 29th December 2019

சென்னை பல்கலைக்கழக மாணவர்களுடன் கமல் சந்திப்பு

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் சென்னை பல்கலைக்கழக மாணவர்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து அவர்களுடன் நுழைவாயிலில் நின்றபடியே பேச்சுவார்த்தை நடத்தினார்.

published on : 18th December 2019

சென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்

17-ஆவது சென்னை சா்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி வரும் 19-ஆம் தேதி வரை உள்ள இந்த விழாவில் 55 நாடுகளில் இருந்து 130-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. ரூ.7 லட்சம் ரொக்கப் பரிசு கொண்ட, தமிழ்ப் படங்களுக்கான போட்டிப் பிரிவில் 12 தமிழ்ப் படங்களும், தமிழக அரசின் எம்ஜிஆா் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சிக் கல்லூரி மாணவா்களின் டிப்ளமோ குறும்படங்களும் திரையிடப்பட உள்ளன.

published on : 12th December 2019

சென்னையை வெளுத்து வாங்கிய மழை

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. கனமழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனத்தில் செல்லும் பயணிகள் சற்று சிரமப்பட்டனர்.

published on : 28th November 2019

தரமற்ற தார் சாலை

சென்னை கோயம்பேடு மார்க்கெட் செல்லும் சாலை குண்டும், குழியுமாக பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டடு போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. எனவே உயர் அதிகாரிகள் சாலையை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

published on : 13th November 2019

சென்னையில் மழை

சென்னையில் கன மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  இலங்கையை ஒட்டி நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது குமரிக் கடல் பகுதியில் நகர்ந்து வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இதனால் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கடுத்து வரும் 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக் கூடும் என தெரியவந்துள்ளது.  இதனால் தமிழகத்தின் சென்னை, கன்னியாகுமரி,  திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சி, திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் கன மழை பெய்யும் என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

published on : 30th October 2019

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை

சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்தது வருகிறது. இந்நிலையில் முகப்பேர், அம்பத்தூர், ஆவடி, திருவல்லிக்கேணி, ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, பெசன்ட் நகர், கோடம்பாக்கம்,  கிண்டி, போரூர், வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர், தாம்பரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்னனர்.

published on : 17th October 2019

பாதுகாப்பு பணியை எளிமையாக்க

காந்தியின் 150 வது பிறந்த நாள் முன்னிட்டு, சென்னை சென்ட்ரலில் ரயில் நிலையத்தில் கண்காணிப்பை பணியை எளிமையாக்க ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு ஃப்ரீகோ மொபைல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. படங்கள் உதவி: அஸ்வின் பிரசாத்

published on : 2nd October 2019

சென்னயில் பலத்த மழை

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் பலத்த மழை பெய்ததால் குளிர்ச்சியான காலநிலை நிலவியது. சென்னையின் திருவல்லிக்கேணி, வடபழனி, கிண்டி, தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், ராயபுரம், ஐஸ்ஹவுஸ், பூந்தமல்லி, தாம்பரம், மேடவாக்கம், பெருங்களத்தூர், அயப்பாக்கம், ஆவடி, கந்தன்சாவடி உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால் சாலைகளிலும், நகரிலுள்ள சுரங்கப் பாதைகளிலும் மழை நீர் தேங்கியது. இதனால், பல்வேறு பகுதிகளில்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், வாகனங்கள் சாலையில் ஊர்ந்து சென்றன.

published on : 22nd September 2019
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை