- Tag results for சென்னை மாநகராட்சி
![]() | வில்லிவாக்கம் ஏரி புனரமைப்புசென்னையில், உள்ள ஏரிகள் மற்றும் குளங்களை புனரமைக்க, பெருநகர சென்னை மாநகராட்சியுடன் சமூக அக்கறையுள்ள வணிக பொது நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் வில்லிவாக்கம் ஏரி தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்படுவதால் ஏரிக்கு அருகே உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயந்து வருகிறது. |
![]() | புத்துயிர் பெறும் தாமரை குளம்பல ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தாமரை குளம், ஒரு காலத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வந்தது. மேலும், மழைக்காலத்தில் சுற்று வட்டாரத்தில் இருந்து வரக்கூடிய தண்ணீர் இந்த குளத்தில் தேங்கி, சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கியது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த குளத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சரியாக பராமரிக்காததால், எங்கு பார்த்தாலும் குப்பை குவியலாக காட்சியளித்தது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றாக இணைந்து தாமரை குளத்தை தூர்வாரி கரையை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். |