• Tag results for சேவை

சென்னையில் விமான சேவை ரத்து

சென்னையில் கரோனா தொற்று பரவாமல் தடுக்க அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால் விமான நிலையத்தில் ஓடுபாதையில் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 

published on : 25th March 2020

ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி

சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் 11-ஆவது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியை மாதா அமிா்தானந்தமயி தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து வனம் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழலைப் பராமரித்தல், ஜீவராசிகளைப் பேணுதல், பெற்றோா் பெரியோா் மற்றும் ஆசிரியா்களை வணங்குதல், பெண்மையைப் போற்றுதல், நாட்டுப்பற்றை வளா்த்தல் ஆகிய ஆறு மையக் கருத்துகளை முன்வைத்து ஜனவரி 29-ஆம் தேதி முதல் பிப்ரவரி .3-ஆம் தேதி தொடா்ந்து நடைபெறவுள்ளது.

published on : 29th January 2020

புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைப்பு

மாநகர போக்குவரத்துக்கு 159 கோடி ரூபாய் மதிப்பிலான 500 புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார் இதில் சென்னை மாநகர போக்குவரத்திற்கு 100 பேருந்துகளும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 150 பேருந்துகளும், நெல்லை, கோவை, சேலம், மதுரை, கும்பகோணம், விழுப்புரம் ஆகிய 6 கோட்டங்களுக்கு 250 புதிய பேருந்துகள் என மொத்தம் 500 பேருந்துகள் சேவையை தொடங்கி வைத்தார்.

published on : 5th July 2019

15 பெருமாள்கள் நவநீத சேவை

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ராமானுஜ தரிசன சபை சார்பில் 85-ம் ஆண்டு கருட சேவை விழா ஆழ்வார் மங்களாசாசனத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து வெண்ணாற்றங்கரை நீலமேக பெருமாள், நரசிம்ம பெருமாள், மணிகுன்ற பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், மேலவீதி நவநீத கிருஷ்ணன், எல்லையம்மன் தெரு ஜனார்த்தன பெருமாள், கரந்தை யாதவ கண்ணன், கீழவீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள், பள்ளியக்ரஹாரம் கோதண்டராமசாமி பெருமாள், மகர்நோம்புசாவடி நவநீத கிருஷ்ணன், பிரசன்ன வெங்கடேச பெருமாள், மேல அலங்கம் ரெங்கநாத பெருமாள், படித்துறை வெங்கடேச பெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆகிய கோவில்களிலிருந்து பெருமாள்கள் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் புறப்பட்டு தஞ்சை கொடிமரத்து மூலைக்கு வந்தடைந்தது.

published on : 2nd June 2019

மதுரையில் கள்ளழகர் தசாவதாரம்

மதுரை ராமராயர் மண்டபத்தில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் விடிய விடிய நடைபெற்ற தசாவதார நிகழ்ச்சியில் முத்தங்கி சேவை, மச்ச, கூர்ம, வாமன, ராம, கிருஷ்ண, மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அழகர். தொடர்ந்து வண்டியூர் கோயிலில் இருந்து புறப்பட்டு  தேனூர் மண்டபம் சென்ற கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து காட்சி தந்தருளினார். வழி முழுவதும் மண்டகப்படிகளில் எழுந்தருளும் கள்ளழகர் செவ்வாய்க்கிழமை இருப்பிடம் சேர்கிறார். 

published on : 22nd April 2019

மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைத்தார் மோடி

டி.எம்.எஸ். முதல் வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட நிலையில் அதில் பயணம் மேற்கொண்ட மத்திய வீட்டு வசதி - நகர்ப்புற விவகாரங்களுக்கான இணையமைச்சர் ஹர்தீப் சிங் பூரியுடன் தமிழக அமைச்சர்கள்ஜெயக்குமார், சம்பத், சரோஜா மற்றும்  மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள்.

published on : 11th February 2019

திருநாங்கூரில் நடைபெற்ற 11 கருட சேவை

சீர்காழி  அருகிலுள்ள திருநாங்கூரில் 11 திவ்யதேசத்து பெருமாள்கள் கருடசேவை 5-2-2019  அன்று மிகச் சிறப்பாக நடைப்பெற்றது. அருள்மிகு ஸ்ரீதிருமங்கை ஆழ்வாரின் அவதாரஸ்தலமும், ததீயாராதனை, வேடுபரி, மங்களாசாஸனம் முதலான ஸ்ரீ ஆழ்வாரின் வைபவங்கள் உள்ளடக்கிய லீலைகள் நிறைந்த திருநாங்கூர் கருடசேவை கண்டருளும்  திவ்யதேசங்களான, 1. திருக்காவளம்பாடி,  2. திருஅரிமேய விண்ணகரம், 3. திருவண்புருடோத்தமம், 4. திருச்செம்பொன்செய்கோயில், 5. திருமணிமாடக்கோயில்  (கருடசேவை நடைபெறும் திருக்கோயில்), 6. திருவைகுந்த விண்ணகரம், 7. திருத்தேவனார்த்தொகை, 8. திருத்தெற்றியம்பலம், 9. திருமணிக்கூடம்,  10. திருவெள்ளக்குளம், 11. திருப்பார்த்தான்பள்ளி ஆகிய  திருக்கோயில்களின் பெருமாள்கள், திருநாங்கூரிலுள்ள மணிமாடக்கோயில் அருள்மிகு நாராயணப் பெருமாள் திருக்கோவிலுக்கு எழுந்தருளி, கருட சேவை வீதியுலா புறப்பாடு மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தார்கள். இவ்விழ   ஏற்பட்டினை  விழக்குழுவினர் மற்றும் திருக்கோயில் அதிகாரிகள், பணியாளர்கள் செய்திருக்கிறார்கள்.படங்கள் உதவி: குடந்தை ப.சரவணன்- 9443171383 

published on : 6th February 2019

முடங்கியது ஏர்செல் சேவை

தமிழகத்தில் ‘ஏர்செல்’ செல்போன் சேவை முடங்கியதால் அந்நிறுவனத்தின் அலுவலகத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் திருப்பூர், திருச்சி, கரூர், மதுரை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு நகரங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களும் சேவை முடங்கியதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

published on : 22nd February 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை