- Tag results for தமிழகம்
![]() | தில்லியில் பாரத் ஜோடோ யாத்திரை - புகைப்படங்கள்ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய பாரத் ஜோடோ நடைபயணம், தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களைக் கடந்த இன்று (சனிக்கிழமை) தில்லி வந்தடைந்தது. |
![]() | தமிழகத்தில் சமூக நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டம் - புகைப்படங்கள்தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள் கட்சிகள் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்று வருகிறது. |
![]() | ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள் - புகைப்படங்கள்தமிழகத்தில் கரோனா பரவி வருவதை கட்டுப்படுத்த தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியதால், மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடியது. |
![]() | தடுப்பூசி சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்தமிழகம் முழுவதும் மூன்றாவது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றுது. இதில் 15 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. |
![]() | முழு ஊரடங்கால் வெறிச்சோடிய தமிழக சாலைகள் - புகைப்படங்கள் |
![]() | இயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள் |
![]() | வந்தாரை வாழ வைக்கும் சென்னை - பகுதி IVதமிழகத்தின் தலைநகரம். இந்தியாவின் நான்காவது பெரிய நகரம். உலகின் 35 பெரிய மாநகரங்களில் ஒன்று என எண்ணற்ற பெருமைகளை தன்னகத்தே கொண்டது இன்றைய சென்னை. இது, 1996-ஆம் ஆண்டுக்கு முன்புவரை 'மெட்ராஸ்' என்றே அழைக்கப்பட்டு வந்தது. இப்படி வந்தோரை வாழ வைக்கும் சென்னையின் பெருமைகளை ஒருசில நிமிடங்களில் சொல்லிவிட முடியாது. கடந்த 1963ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை உருவாக்கப்பட்ட நாளை நினைவூட்டும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ம் தேதி மெட்ராஸ் டே கொண்டாடப்பட்டு வருகிறது. |
![]() | வந்தடைந்தது தண்ணீர் ரயில்போதிய மழைப்பொழிவு இல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் காவிரி உபரி நீரைக் கொண்டுவந்த சிறப்பு தண்ணீர் ரயில். |
![]() | ஆவடி மாநகராட்சியாக உதயம்தமிழகத்தின் 15-வது மாநகராட்சியாக ஆவடியை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதியதாக உதயமாகும் ஆவடி மாநகராட்சியில் ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகளும், திருநின்றவூர் பேரூராட்சியும் வரும். மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் குடிநீர், கழிவுநீர் வடிகால், சாலை போன்றவைகளின் கட்டமைப்புகள் தரம் உயரும் அதேபோல் சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகள் அதிகரிக்க வாய்ப்புண்டு. ஆவடி வடசென்னை பகுதியில் வளர்ந்து வரும் மாநகராட்சியாக உள்ளது. |
![]() | தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலிதமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டு நிலவி வரும் நிலையில், பல இடங்களில் ஹோட்டல்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் முடக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. கடும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னை உள்ள ஒரு உணவகம், 'தண்ணீர் இல்லாததால் உணவு தயாரிக்கமுடியாத நிலை ஏற்படலாம். வாடிக்கையாளர்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம்' என்ற அறிவிப்பை வைத்து உள்ளது. |
![]() | திமுக எம்.எல்.ஏக்கள் பதவியேற்புதமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுகவை சேர்ந்த 13 பேர் வெற்றி பெற்றதால் சட்டமன்றத்தில் திமுக கூட்டணியின் பலம் 101ஆக உயர்ந்து. இந்நிலையில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்.எல்.ஏக்கள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சபாநாயகர் அறையில் பதவியேற்றனர். |
![]() | மக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 17 ஆவது மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலோடு 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக காலை முதலே பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலர் வாக்களித்தனர். |
![]() | முன்னோர்க்கு தர்ப்பணம்ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கானோர் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் புனித நீராடி திதி கொடுத்து வழிபாடு நடத்தினர். இதேபோல் முக்கடல் சங்கமம் உள்ளிட்ட நீர்நிலைகளில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்க்கு தர்ப்பணம் செய்து வந்தனர். |
![]() | கருணாநிதிக்கு இறுதி மரியாதைதமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்துவந்த, கருணாநிதி உடல் நலக்குறைவால் காலமானார். இதை தொடர்ந்து அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரையுலகினர் மற்றும் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். |
![]() | கோபாலபுரம் இல்லம் முன்பு குவியும் தொண்டர்கள்திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டு, அவரது உடல்நிலை சிறிது நலிவு ஏற்பட்டதால் தமிழகம் முழுவதும் சற்று பரபரப்பு தென்பட்டது. தமிழக துணை முதல்வர், தமிழக அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்கு சென்று அவருடைய உடல்நலம் குறித்து விசாரித்தனர். இதை தொடர்ந்து, கருணாநிதி உடல்நிலை குறித்து விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்