• Tag results for தமிழ்

சைமா விருதுகள் 2019 - பகுதி II

சைமா எனப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி கத்தாரில் நடைபெற்றது. நான்கு மொழி திரை பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி இரண்டு நாட்களாக பிரிக்கப்பட்டு, ஆகஸ்ட் 15-ஆம் தேதி தெலுங்கு மற்றும் கன்னடம் படங்களுக்கும், ஆகஸ்ட் 16-ஆம் தேதி தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கு விருது வழங்கப்பட்டது. இவ்விழாவில் சிரஞ்சீவி மற்றும் மோகன்லால் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொன்டனர்.

published on : 16th August 2019

திமுகவில் இணைந்தார் தங்கத்தமிழ் செல்வன்

அமமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தங்க தமிழ்செல்வன், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டாா். 

published on : 29th June 2019

நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II

தமிழ் திரையுலகில் பல முன்னணி நகைச்சுவை நடிகர் மனோபாலாவின் மகன் ஹரிஷ் - பிரியா திருமணம் சென்னையில் இனிதே நடைபெற்றது. இதனையடுத்து கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் திரை நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

published on : 20th February 2019

மெரினா மைகேல் குரிசிங்கல்

நடிகை மெரினா மைகேல் குரிசிங்கல் ஸ்டில்ஸ்.

published on : 16th January 2019

தமிழ்படம் 2

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் சிலவருடங்களுக்கு முன்பு தமிழ்ப்படம் வெளியானது. இப்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதிலும் சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.   

published on : 12th July 2018

தமிழ்படம் 2.O

2010ஆம் ஆண்டு சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'தமிழ்ப் படம்'. தற்போது அதன் இரண்டாம்  பாகத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் படப் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில் நாயகனாக சிவா, நாயகியாக ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். அவர்களோடு சதீஷ், திஷா பாண்டே, சந்தான பாரதி, கலைராணி, மனோபாலா, சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், சுந்தர், அஜய் ரத்னம் மற்றும் ஜார்ஜ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். படத்தின் முதல் பார்வை ஸ்டில்ஸ்.

published on : 1st February 2018

மாஸ்டர் ப்ளாஸ்டரும் உலகநாயகனும்

புரோ கபடி லீக்கில் சச்சின் டெண்டுல்கர் உரிமையாளராக உள்ள தமிழ் தலைவாஸின் விளம்பர தூதராக நடிகர் கமல்ஹாசன் பொறுப்பேற்றிருக்கிறார். முன்னோர்களின் வழிவந்த விளையாட்டில் எனக்கும் பங்கு இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். விழாவில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ராம் சரண் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டார். தமிழ் தலைவாஸ் என இவர்கள் பன்மையில் பெயர் வைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது எனறார். மேலும் கோட்டை தாண்டி புகழை சூடுங்கள் என தமிழ் தலைவாஸ் அணியின் வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

published on : 25th July 2017

சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிப்பு

தீ விபத்தால் உருக்குலைந்த சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை முழுவதும் இடித்து தரைமட்டமாக்க பொதுப்பணித்துறை கட்டுமானப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ஜெயசிங் தலைமையில் 5 பேர் குழு அமைக்கப்பட்டு, ஜா கட்டர் என்ற நவீன இயந்திரம் மூலம் கட்டிடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

published on : 4th June 2017

கில்லி பம்பரம் கோலி

ஸ்ரீசாய் ஃபிலிம் சர்க்யூட் பட நிறுவனம் சார்பில் டி.மனோஹரன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘கில்லி பம்பரம் கோலி’. இதில் தமிழ், பிரசாத், நரேஷ் ஆகிய புதுமுகங்கள் நாயகர்களாக நடிக்க, புதுமுகம் தீப்தி ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, விஜய், மலேசிய நடிகர் ஜோ, கே.ஆர்.விமல், ராஜசேகரன், சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

published on : 31st May 2017

தொடங்கியது ஏற்காடு மலர்க் கண்காட்சி

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 42-ஆவது கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கிவைத்தார். விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, அமைச்சர்கள், அரசுத் துறை செயலர்கள் கலந்து கொண்டனர். மேலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த உருவ பொம்மைகளின் முன் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

published on : 28th May 2017

மாயவன் ஆடியோ விழா

சி.வி.குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘மாயவன்’. வித்தியாசமான ஒரு த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன், நாயகியாக லவண்யா த்ரிபாதி நடித்துள்ளனர். இவர்களுடன் டேனியல் பாலாஜி, பகவதி பெருமாள், ஜேபி, மைம் கோபி, பாபு ஆண்டனி உட்பட பலர் நடித்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற இதன் ஆடியோ வெளியீடு விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர்.

published on : 19th April 2017

தமிழ் புத்தாண்டு கோலாகலம்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். தமிழ்ப் புத்தாண்டையொட்டி, தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து திருக்கோயில்களில்,  சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

published on : 14th April 2017

அண்ணா சாலையில் திடீர் பள்ளம்

ஜெமினி பாலம் அருகே மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வரும் நிலையில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது, இதில் மாநகர பேருந்து, காரும் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது. சம்பவயிடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் காரையும், பேருந்துந்தையும் கிரேன் மூலம் மீட்டனர். இந்நிலையில் பாதுகாப்புடன் மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான சுரங்கப்பாதையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

published on : 10th April 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை