• Tag results for திருமணம்

நடிகை வித்யுலேகா ராமன் - சஞ்சய் திருமண ஆல்பம்

நகைச்சுவை நடிகை வித்யுலேகா - சஞ்சய திருமணம் சென்னை ஈ.சி.ஆரில் உள்ள ரிசார்ட்டில் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

published on : 21st September 2021

நடிகர் சதீஷ் -  சிந்து திருமணம்

காமெடி நடிகர் சதீஷ் - சிந்து திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, ஜீவா, உதயநிதி ஸ்டாலின், ராதரவி உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

published on : 11th December 2019

காமெடி நடிகர் சதீஷ், சிந்து திருமணம்!

நடிகர் சதீஷ், சிந்து திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, ஜீவா, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

published on : 11th December 2019

திடீர் திருமணம் செய்த அனிதா சம்பத்

தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தின் திடீர் திருமணம் இனிதே முடிந்தது. இவரின் தோற்றம், தமிழ் உச்சரிப்பு காரணமாகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில் அனிதாவின் திருமணத் தகவல் குறித்து பல இளைஞர்கள் அதிர்ச்சி கலந்த சோகத்துடன் பகிர்ந்தும் வாழ்த்தியும் வருகின்றனர். 

published on : 28th August 2019

கோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த எட்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நிலையில் 10ஆம் நாள் விழாவான நேற்று மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் காலை 9:05 மணி முதல் 9:29 மணிக்குள் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. திருக்கல்யாணத்தை காண திருப்பரங்குன்றத்தில் இருந்து ஸ்ரீ சுப்பிரமணியர், வள்ளி தெய்வானை சமேதராக திருக்கல்யாண மேடையில் தோன்றினார். திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெண்கள், தங்கள் கழுத்தில் புதுத் தாலி அணிந்தனர். திருமணம் முடிந்த ஸ்ரீ மீனாட்சி – சுந்தரேஸ்வரர், திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

published on : 18th April 2019

நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II

தமிழ் திரையுலகில் பல முன்னணி நகைச்சுவை நடிகர் மனோபாலாவின் மகன் ஹரிஷ் - பிரியா திருமணம் சென்னையில் இனிதே நடைபெற்றது. இதனையடுத்து கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் திரை நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

published on : 20th February 2019

நடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்

இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான மனோ பாலாவின் மகன் ஹரிஷ் - பிரியா திருமணம் சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் இனிதே நடைபெற்றது. தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், என பன்முகம் கொண்டு விளங்குபவர்  மனோ பாலா. இவர் பல முன்னணி  இயக்குனர்களுடன் துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். 

published on : 18th February 2019

ரஜினி - அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம், திக்குமுக்காடும் திரையரங்கம்

ரஜினி நடித்த பேட்ட படமும் அஜித்தின் விஸ்வாசம் படமும் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளன. அதிகாலை 4 மணிக்கு சிறப்புக் காட்சியாக பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், பேட்ட படம் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க இருக்க, சென்னை ராயப்பேட்டையில் உள்ள திரையரங்கு வளாகத்தில் வைத்து காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்தைத் தொடர்ந்து தென் சென்னை கிழக்கு மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் மணமக்களுக்கு சீர்வரிசை வழங்கப்பட்டது.

published on : 10th January 2019

ரமேஷ் கண்ணா மகன் திருமணம்

நடிகரும், இயக்குனருமான ரமேஷ் கண்ணாவின் மகன் ஜஸ்வந்துக்கும் - ப்ரியங்காவுக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய திருமண வரவேற்பில் நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ஹரி, சேரன், எஸ்.பி.முத்துராமன், சுரேஷ் கிருஷ்ணா, கே.பாக்யராஜ், பாண்டியராஜன். ஆர்.கே.செல்மணி, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.பி.ஜனநாதன், அட்லி, மோகன்ராஜா, நடிகர்கள் சிவகுமார், ராஜ்கிரண், நிழல்கள்ரவி, மனோபாலா நடிகைகள் கே.ஆர்.விஜயா, சச்சு, ஊர்வசி சாரதா, மீனா, தேவயானி, ஜெயசித்ரா. திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், தொழில் அதிபர் நல்லி குப்புசாமி, தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், ஜி.கே.ரெட்டி, எடிட்டர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர் மணமக்களை வாழ்த்தினர்.

published on : 3rd December 2018
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை