• Tag results for திருமண வரவேற்பு

ரஜினி மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவின் திருமண வரவேற்பு சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விசாகன், சௌந்தர்யா ஜோடியின் இந்த திருமண வரவேற்பில், நடிகர் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்தின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினர். மேலும் பிப்ரவரி 11ஆம் தேதி திருமணமும் அன்று, மாலை நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

published on : 10th February 2019

பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸின் திருமண வரவேற்பு

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா திருமணம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் அரண்மனையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதையடுத்து, தில்லியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் மோடி உள்பட பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.  இந்நிலையில், பாலிவுட் பிரபலங்களுக்காக மும்பையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே, அனில் கபூர், அனுஷ்கா சர்மா, சல்மான் கான், அனுபம் கெர் என பலக் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

published on : 21st December 2018

தீபிகா படுகோன்- ரன்வீர் சிங் திருமண வரவேற்பு

பாலிவுட்டின் காதல் ஜோடியான தீபிகா படுகோன்- ரன்வீர் சிங் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உறவினர்கள் திரைப்பட நட்சத்திரங்கள் மற்றம் நண்பர்கள்  பங்கேற்றனர். 

published on : 29th November 2018

நடிகர் சிவகுமார் - சுஜா வருணி திருமண வரவேற்பு

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நடிகை சுஜா வருணிக்கும் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம் குமாரின் மகன் சிவாஜி தேவ் என்ற சிவக்குமாருடன் திருமணம் நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோலிவுட் பிரபலங்கள்.

published on : 25th November 2018

நடிகர் சிவகுமார் - சுஜா வருணி திருமண வரவேற்பு

நடிகை சுஜா வருணியுடன், சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாரின் திருமணம் சென்னையில் இனிதே நடைபெற்றது. இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோலிவுட் பிரபலங்கள்.

published on : 24th November 2018

சோனம் கபூர் திருமண வரவேற்பு

பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர், தனது நீண்ட நாள் காதலரான தில்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவுக்கும் மும்பையில் இனிதே திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் லீலா ஹோட்டலில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பும் நடைபெற்றது. திருமண விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். மேலும், இரவு நடந்த சிறப்பு விருந்திலும் அனைவரும் கலந்து கொண்டனர்.

published on : 10th May 2018

நடிகை சோனம் கபூரின் திருமணம்

பிரபல பாலிவுட் நடிகையும் கபூர் குடும்பத்தைச் சேர்ந்தவருமான சோனம் கபூர் தனது காதலரும் தொழிலதிபருமான ஆனந்த் அஹூஜா திருமணம் மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. மாலை லீலா ஹோட்டலில் பிரமாண்ட திருமண வரவேற்பும் நடைபெற்றது. திருமண விழாவில் அமிதாப் பச்சன், போனி கபூர், ஸ்ரீதேவி மகள்கள், கரீனா கபூர், கரீஷ்மா கபூர். ராணி முகர்ஜி உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

published on : 8th May 2018

நடிகர் இசக்கி கிஷோர் திருமண வரவேற்பு

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் இசக்கி சுந்தர் மகனான நடிகர் இசக்கி கிஷோருக்கும் சந்திர ரோஷினிக்கும் சென்னையில் சமீபத்தில் திருமணம் நடைப்பெற்றது. இதில் TTV தினகரன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு, நடிகர் சிவகுமார், விவேக், விஜயகுமார் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

published on : 28th March 2018

நடிகர் ரமேஷ் திலக் - நவலட்சுமி திருமண வரவேற்பு

நகைச்சுவை நடிகர் ரமேஷ் திலக், சன் மியூசிக் ஆர்ஜே நவலட்சுமியை திருமண வரவேற்பு சென்னையில் இனிதே நடைபெற்றது. இதில் திரை நட்சத்திரங்கள், நண்பர்கள் என பலர் கலந்துகொண்டு மனமக்களை வாழ்த்தினர்.

published on : 6th March 2018

ஏவிஎம் சரவணனின் பேத்தியின் திருமண வரவேற்பு

ஏவிஎம் சரவணனின் பேத்தியும், எம்.எஸ்.குகனின் மகளுமான அபர்ணா, பிரபல திரைப்படத்தயாரிப்பாளர் எம்.ரகுநாதன் மகன் ஷ்யாம் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட கோலிவுட் பிரபலங்கள் பலர் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். எம்பிஏ படித்துள்ள மணமகன் ஷ்யாம், இயக்குனர் மிஷ்கின் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

published on : 11th November 2017

அபினேஷ் இளங்கோவன் நந்தினி திருமண வரவேற்பு

தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் ராஜ் டி.வியின் இயக்குனர்களில் ஒருவரான எம்.ரவீந்திரன், ஆர் விஜயலட்சுமி தம்பதிகளின் மகள் நந்தினியின் திருமண வரவேற்பு ஸ்டில்ஸ். இவ்விழாவில் சின்னத்திரை, பெரிய திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.  

published on : 27th October 2017

இசையமைப்பாளர் தரன்குமார் - தீக்ஷிதா திருமணம்

இளம் இசையமைப்பாளர்களில் தமிழ் ரசிகர்கள் இதயத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவரும், பாரிஜாதம் படத்தில் முலம் இசையமைப்பாளராக அறிமுகமான தரன் குமாருக்கும் சென்னையை சேர்ந்த மாடல் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் தீக்ஷிதாவுக்கும் திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது.

published on : 21st September 2017

ஆனந்த கிருஷ்ணன் திருமண வரவேற்பு

’மெட்ரோ’ புகழ் இயக்குநர், தயாரிப்பாளர் ஆனந்த கிருஷ்ணன் - ஸ்ரீலேகா திருமண வரவேற்பு நிகழ்ச்சி மதுரை பி.டி.ஆர். ஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் சேகர், தயாரிப்பாளர், இயக்குநர் குகநாதன், நடிகர்கள் அசோக் செல்வன், கிரிஷ், இசையமைப்பாளர் ஜோகன் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

published on : 30th August 2017

நிழல்கள் ரவி மகன் திருமண வரவேற்பு

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நிழல்கள் ரவி மகன் ராகுல் ராஜ் மற்றும் முத்துப்ரியா திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள துவாரகா பேலஸில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தே.மு.தி.க. மகளிரணி தலைவி பிரேமலதா விஜயகாந்த், இளையராஜா, அபிராமி ராமநாதன், நடிகர் விஜய குமார், அருண் விஜய், சந்தான பாரதி, இயக்குனர் விக்ரமன், இயக்குனர் சுந்தர் சி, சதீஷ், சரண்யா, பொன் வண்ணன், ரேகா, மதன் பாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

published on : 1st June 2017
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை