• Tag results for திருமலை

திருமலையில் ஏழுமலையான் தரிசனம் தொடங்கியது - புகைப்படங்கள்

திருமலையில் 79 நாள்களுக்கு பிறகு இன்று தேவஸ்தான ஊழியர்களுடன் ஏழுமலையான் தரிசனம் தொடங்கியது. 79 நாள்களுக்கு பின் கோயிலில் பக்தர்களுக்கு தரிசன அனுமதி கிடைத்ததால் கோயில் முழுவதும் மலர்களாலும், மின் விளக்குகளாலும் அழகுற அலங்கரிக்கப்பட்டது. 

published on : 8th June 2020

மோகினி அவதாரத்தில் மலையப்ப சுவாமி

திருமலையில் நடந்து வரும் ஏழுமலையானின் பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாளான காலை மலையப்ப சுவாமி தாயாரின் உருவத்தைத் தாங்கி மூக்கல் மூக்குத்தி, நத்து, புல்லாக்கு தரித்து மோகினி அவதாரத்தில் முகத்தில் நாணம் மிளிர வெண்ணெய் உருண்டையை கையில் ஏந்திய கிருஷ்ணன் அருகில் வர பல்லக்கில் மாடவீதியில் வலம் வந்தாா்.

published on : 5th October 2019

 உழவாரப்பணி

மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் 12 நாள் தெப்பத்திருவிழா வரும் 21 ம்தேதி வண்டியூர் மாரியம்மன் கோவில் மற்றும் முக்தீஸ்வரர் கோவில் எதிரில் உள்ள 22 ஏக்கர் தெப்பத்தில் நடைபெறுகிறது. மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த நட்சத்திரமான பூசம் தினத்தன்று. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் நடைபெறுகிறது. அன்று,  சுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சி ஆகியோர் கோவிலில் இருந்து முக்தீஸ்வரர் கோவில் வந்து, அங்கு பூஜை முடிந்து பின் மைய மண்டபத்தில் எழுந்தருளி, பிறகு அலங்கரிக்கப்பட்ட மிதவையில் 3 முறை காலை‌ மாலை இரவில் சுற்றி வந்து, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலித்தபின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் இரவில் கோவிலுக்குத் திரும்புவார்கள்.  மைய மண்டபத்திற்கு மீனாட்சி - சுந்தரேஸ்வரர் வருகையை முன்னிட்டு ஜனவரி 6ஆம் தேதி  அன்று  மதுரை அன்னை மீனாட்சி உழவாரப்பணி குழுவின் தலைவர் முருகானந்தம் சுவாமிகள் (ராமகிருஷ்ணா மடம்‌) மற்றும் ஓம் நமசிவாய உழவாரப்பணி குழு தலைவர் வெள்ளியம்பலம் இணைந்து  சண்முகம் சாமி தலைமையில் மைய மண்டபத்தை சுத்தம் செய்யும்  உழவாரப்பணி மிக சிறப்பாக நடைபெற்றது. உழவாரப்பணி தொடர்புக்கு : முருகதாஸ் 7373730396.

published on : 8th January 2019

அனிருத் இசை வெளியீட்டு விழா

பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிப்பில், மகேஷ்பாபு, காஜல், சமந்தா, பிரணிதா நடிக்கும் ‘அனிருத்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. படத்தின் பாடல்களை பாடல்கள் – திருமலை சோமு, கம்பம் கர்ணா, பாசிகாபுரம் வெங்கடேசன், அம்பிகா குமரன், திருமலை சோமு, முருகானந்தம், யுவகிருஷ்ணா, குலராஜா. ஆகியோர் எழுதியுள்ளனர்.

published on : 21st December 2017

செ‌ன்னை‌யி‌ல் ‌திரு‌ப்ப‌தி குடை ஊ‌ர்வல‌ம்

ஆண்டுதோறும் பிரமோற்சவத்தின்போது உற்சவர் வீதி உலா செல்லும் போது முன்னும் பின்னும் அலங்கரிக்கப்பட்ட குடைகளை கொண்டு செல்வது வழக்கம். இதையொட்டி வெங்கடேசப் பெருமாளுக்கு சமர்ப்பிப்பதற்காக சென்னையில் இருந்து திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. இவை திருப்பதி-திருமலை தேவஸ்தானத்தை சென்றடைந்தபின் அவை பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படும்.

published on : 21st September 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை