• Tag results for திருவிழா

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மின்னொளியில் ஜொலிக்கும் திருவண்ணாமலை கோயில்!

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழா நடைபெறுவதையொட்டி, தென்னிந்தியாவிலேயே 2-வது உயரமான அருணாசலேஸ்வரா் கோயில் ராஜகோபுரம் மற்றும் கிளிகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் உள்ளிட்ட 9 கோபுரங்களுக்கும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.

published on : 27th November 2019

முதல்வர் வழங்கிய அத்திவரதர் பதக்கங்கள்

காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தை சிறப்பாக நடத்தியதற்காக, காவல் துறை தலைமை இயக்குநர் முதல் காவல் நிலையிலான அலுவலர்கள் வரை அத்திவரதர் திருவிழாப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. காவல்துறை தலைமை இயக்குநர் ஜே.கே. திரிபாதிக்கு அருள்மிகு அத்திவரதர் சிறப்புப் பணிக்கான பதக்கம் வழங்குகிறார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி. உடன் தலைமைச் செயலாளர் க. சண்முகம் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள்.

published on : 24th October 2019

கொளத்தூர் வரசித்தி விநாயகர் கோயிலில் நவராத்திரி விழா

கொளத்தூர், வெற்றிவேல் நகர் எக்ஸ்டென்ஷனில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

published on : 9th October 2019

அருள்பாலிக்கும் ஸ்ரீ ஆதி அத்திவரதர்

காஞ்சிபுரத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த, திவ்ய தேசங்களில் ஒன்றாக வரதராஜப்பெருமாள் கோயில் திகழ்கிறது. இங்கு மூலவர் வரதர் மேற்கு பார்த்தவாறு திருநின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். தாயார் பெருந்தேவியார் கிழக்கு நோக்கிஎழுந்தருளியுள்ளார். பக்தர்கள் கேட்கும் வரங்கள் அனைத்தையும் அளிப்பவராகையால் இந்தப் பெருமாள், `வரதர்’ என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் மிகச்சிறப்பாக போற்றப்படுவது அத்தி வரதர். அனந்தசரஸ் திருக்குளத்தின் அடியில் வீற்றிருக்கும் அத்திவரதர் பெருமாளை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். வெள்ளித் தகடுகள் பதித்த பெட்டியில் சயனக் கோலமாக அனந்தசரஸ் திருக்குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேலே வந்து, சயன மற்றும் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிப்பார்.  ஐராவதம் யானையே மலைவடிவம் கொண்டு நாராயணனைத் தாங்கி நின்றமையால் இத்தலம் அத்திகிரி என்றும் அழைக்கப்படுகிறது. தங்கப்பல்லி, வெள்ளிப்பல்லி தரிசனம் இக்கோயிலின் மற்றுமொரு சிறப்பாக உள்ளது. 1979-ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி எழுந்தருளிய அத்திவரதர், இந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிப்பார். 

published on : 25th July 2019

அழகர் மலையில் கள்ளழகர்

மதுரையில் சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை 2.30 மணிக்கு கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி மதுரை நகரில் விடிய, விடிய பக்தர்களுக்குக் காட்சியளித்தார். பிறகு தல்லாகுளத்தில் இருந்து பெருமாள் கோயில் சென்றார். அங்கு பக்தர்களுக்கு அருள்பாலித்து விட்டு, மீண்டும் மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர் என்று போற்றப்படும் சுந்தரராஜப் பெருமாள்.

published on : 23rd April 2019

மலேசியாவில் தைப்பூச திருவிழா

மலேசியா பத்து மலை ஸ்ரீ சுப்பிரமணியர் திருத்தலத்தில் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பக்தர்கள் அலகு குத்துதல், பால், பன்னீர், புஷ்பம் என விதவிதமான முறையில் காவடி எடுத்து முருக பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

published on : 30th January 2019

விழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா

தமிழர் திருநாளான பொங்கல் நன்னாளில் புத்தாடை அணிந்தும், பொங்கலிட்டு, சூரியனை வணங்கி பிறகு நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தான் உலக பிரசித்தி பெற்றவை. இதில் வாடிவாசல் வழியாக சீறிவரும் காளைகளை பிடிக்க வீரர்கள் போட்டிபோட்டு வருகின்றனர். மொத்தம் 691 காளைகளும், 594 மாடு பிடி வீரர்களும் இதில் பங்கேற்றுள்ளனர். 

published on : 15th January 2019

சர்வதேச காற்றாடி திருவிழா

சர்வதேச காற்றாடி திருவிழா குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்றது.  காற்றாடி திருவிழாவில் கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா போன்ற பகுதிகளிலிருந்தும், சர்வதேச அளவிலும் மட்டுமன்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் சாதனையாளர்களும் திரளான பார்வையாளர்களும் பங்கேற்றனர். 

published on : 7th January 2019

பலூன் திருவிழா

அமெரிக்காவிலுள்ள யூடா மாகானத்தின், சால்ட் லேக் சிட்டி என்ற இடத்தில் நடைபெற்ற பலூன் திருவிழா. Photo Courtesy: Srikar Canchi

published on : 30th October 2018

திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்கியது

தமிழகத்தின் மிகப்பெரிய ஆன்மிக திருவிழாவாக போற்றப்படும் திருப்பதி திருக்குடை ஊர்வலம், சென்னையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன்  புறப்பட்டது.  திருமலை திருப்பதியில் நடக்கும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஏழுமலையான் சேவைக்காக, ஆண்டுதோறும் தமிழக மக்கள் சார்பில் 11 அழகிய வெண்பட்டுக் குடைகள் ஊர்வலமாக சென்று ஏழுமலையான் கருடசேவைக்காக பாரம்பரியமிக்க திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படும்.

published on : 11th September 2018

பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

சிறப்புமிக்க சித்திரை திருவிழா இந்த ஆண்டு கடந்த 18-ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மீனாட்சி அம்மன் கோவில் 25ம் தேதி பட்டாபிஷேகமும், 26ம் தேதி திக்விஜயமும் நடந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடந்தது. அதைத் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து, அழகர் மலையிலிருந்து மதுரையை நோக்கி கிளம்பிய கள்ளழகர், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்துகொண்டு ஆற்றுக்கு வந்த கள்ளழகரை வீரராகவப்பெருமாள் எதிர்கொண்டு வரவேற்றார். அப்போது அங்கு கூடிநின்ற பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் கோஷமிட்ட, கள்ளழகர் பச்சைப் பட்டுடுத்தி‌ வைகை ஆற்றில் இறங்கி, பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

published on : 1st May 2018

மதுரை சித்திரைத் திருவிழா 

மதுரையில் 17-04-2018 முதல் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் முதல் புகைப்படத் தொகுப்பு. படங்கள் உதவி: குண அமுதன், புகைப்படக் கலைஞர், மதுரை. தொடர்புக்கு: 9843221319  

published on : 24th April 2018

மயிலையில் அறுபத்து மூவர் திருவிழா

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் பங்குனி திருவிழாவின் 8ஆம் நாளன்று அறுபத்து மூவர் வீதியுலா கோயிலின் கிழக்கு கோபுர வாயிலில் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் 63 நாயன்மார்கள் புடை சூழ உற்சவர்கள் விநாயகர் பெருமான், கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர், வள்ளி, தெய்வானை, முருகப்பெருமான் வீதி உலா நடைபெற்றது. இதில் 63 நாயன்மார்கள் தனித்தனி சப்பரத்தில் கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, வடக்கு மாடவீதி வழியாக கிழக்கு வலம் வந்தபோது பக்தர்கள் பரவசத்துடன் பக்தி கோஷம் எழுப்பினர்.

published on : 30th March 2018

திருவையாறு ஆடி அமாவாசை திருவிழா 2017

ஹேவிளம்பி வருடம், ஆடி மாதம், ஜூலை 23ஆம் தேதி அருள்மிகு அறம் வளர்த்த நாயகி அருள்மிகு ஐயாறப்பருடன் நடைபெற்ற அப்பர் திருக்கயிலாயக் காட்சி திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது. படங்கள் உதவி: திருவையாறு சிவ சேவா சங்கம். கைபேசி என்: 9976253220.

published on : 16th August 2017

வெறிச்சோடிய கோயம்பேடு மார்கெட்

பருவநிலை மாற்றம், சாதகமற்ற தட்பவெப்பநிலை நிலமை போன்ற காரணங்களால் தாவரங்களின் வளர்ச்சி விதங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த 10 நாட்களாக தமிழகம் மம்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து கிலோ ரூ.45 முதல் ரூ.60வரை விற்பனை செய்யப்படுகிறது.

published on : 30th June 2017
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை