• Tag results for திறப்பு

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு

தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் மதுபானம் வாங்க பல்வேறு மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கானோர் கூடினர். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். கடைக்கு வரும் அனைவரும் முகக் கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும், என்ற அறிவிப்பை வெளியிட்டது டாஸ்மாக் நிர்வாகம்.

published on : 16th May 2020

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு கண்டனம்

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு கண்டனம் தெரிவித்து தோழமைக் கட்சிகள் மற்றும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கருப்பு சட்டை அணிந்து குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

published on : 7th May 2020

 ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு

அதிமுக அலுவலகத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலையை கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.இந்த நிகழ்ச்சியில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இச்சிலையானது, 8 அடி உயரத்தில் 800 கிலோ எடையில் வெண்கலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

published on : 15th November 2018

திருவல்லிக்கேணி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு

108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலையில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷம் முழுங்க பரமபத வாசலில் பார்த்தசாரதி பெருமாள் எழுந்தருளி நம்மாழ்வாருக்கு எதிர்சேவையில் காட்சித் தந்தார்.

published on : 29th December 2017

விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறைக்கு பிறகு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு 14 வகையான இலவசப் பொருட்கள் இன்றே வழங்கப்பட்டன.

published on : 7th June 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை