• Tag results for தில்லி

புதிய கெட்டப்பில் தல அஜித்

தில்லியில் உள்ள டாக்டர் கர்னிசிங் துப்பாக்கி சுடும் மையத்திற்கு அஜித் சென்றுள்ளார். அங்கு அவர் துப்பாக்கி சுடும் பயிற்சியாளர்களுடன் ஆலோசனை செய்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

published on : 6th October 2019

அபாய நீர்மட்டத்தை தாண்டி ஓடும் யமுனை நதி

வட இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் ஒன்றான யமுனை ஆறு இமயமலையில் உற்பத்தியாகி,  தில்லி, ஹரியானா மாநிலங்கள் வழியாக செல்லும் இந்த ஆறு உத்தரப்பிரதேசம் அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது. இந்நிலையில் தில்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக யமுனை யமுனா நதியின் நீர்மட்டம் அதிகரித்துக் கொண்டே வருவதால், மாவட்ட நிர்வாகம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. 

published on : 23rd August 2019

எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களில் அவசர சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து தொடர்ந்து சம்பவ இடத்துக்கு 34 தீயணைப்பு வாகங்களுடன் வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

published on : 18th August 2019

மூவர்ணக் கொடியேற்றினார் பிரதமர் மோடி

நாட்டின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் முப்படை வீரர்களின் மரியாதையை ஏற்று கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள், முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

published on : 15th August 2019

தில்லியில் கனமழை

கடந்த சில நாட்களாக தில்லியில் தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இடம்: தில்லி பார்லிமென்ட்.

published on : 6th August 2019

அசத்தலான வெற்றி பெற்ற சென்னை அணி

முதலில் ஆடிய தில்லி 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய சென்னை 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை எடுத்து வென்றது. தில்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது சென்னை அணி. நன்றி: ஐ.பி.எல். டி-20.காம்

published on : 27th March 2019

பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸின் திருமண வரவேற்பு

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா திருமணம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் அரண்மனையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதையடுத்து, தில்லியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் மோடி உள்பட பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.  இந்நிலையில், பாலிவுட் பிரபலங்களுக்காக மும்பையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே, அனில் கபூர், அனுஷ்கா சர்மா, சல்மான் கான், அனுபம் கெர் என பலக் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

published on : 21st December 2018

அதிபர் புடின் - பிரதமர் மோடி சந்திப்பு

தில்லியில் நடைபெறும் இந்தியா -ரஷ்யா 19-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார். வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் அதிகாரிகள் அவரை தில்லி விமான நிலையத்தில் அவரை நேரில் வரவேற்றனர். தொடர்ந்து பிரதமர் மோடியை, புடின் நேரில் சந்தித்து பேசினார். 

published on : 5th October 2018

கோலி - அனுஷ்கா திருமண வரவேற்பு

இந்திய அணி கேப்டன் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 11ஆம் தேதி இத்தாலியில் உள்ள டுஸ்கேனியில் உள்ள சொகுசு விடுதியில் திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நெருங்கிய உறவினர்களும், குடும்ப நண்பர்களும் மட்டுமே பங்கேற்றனர். இந்நிலையில், தில்லி தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் பிரதமர் மோடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். 

published on : 22nd December 2017

கார்கில் போர் வெற்றி தினம்

கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, தில்லி இந்தியா கேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கார்கில் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி, முப்படை தளபதிகள். கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களின் உயிர் தியாகத்தை நினைவு கூறும்வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 27ஆம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

published on : 26th July 2017

64வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா

64வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தில்லி விக்யான் பவனில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். இதில் சிறந்த சினிமா விமர்சகருக்கான விருதை தனஞ்செயனுக்கும், சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருது ஜோக்கர் படத்திற்கும், சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது ஜோக்கர் படத்திற்காக ராஜூமுருக்கும், சிறந்த பாடலாசியருக்கான தேசிய விருதை கவிஞர் வைரமுத்து தர்மதுரை திரைப்படத்தில் எந்தப்பக்கம் பாடலுக்காகவும், சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை சுந்தர ஐயருக்கும், சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருதை ராஜூசுந்தரமுக்கும், சிறந்த சண்டை பயிற்சியாளருக்கான தேசிய விருதை பீட்டர் ஹெயினுக்கும், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை திருநாவுக்கரசும் வழங்கப்பட்டது.

published on : 3rd May 2017

தமிழக விவசாயிகள் நிர்வாணப் போராட்டம்

தமிழக விவசாயிகள் தேசிய வங்கிகளில் பெறப்பட்ட பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராடி வந்த நிலையில், தில்லி ராஜ்பாத் சாலையில் பழனிவேல், ராமலிங்கம், சரவணக்குமார் வாசுதேவன் ஆகியோர் திடீரென முழு நிர்வாணத்துடன் தரையிலும் கைகூப்பியபடி முன்னும் பின்னுமாக தரையில் உருளினர். இந்நிலையில் நிர்வாணப் போராட்டம் நடத்திய மூன்று விவசாயிகளை போலீஸார் சமாதானப்படுத்தி ஆடைகளை அணிய செய்த பிறகு கைது செய்தனர்.

published on : 11th April 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை