• Tag results for தொகுதி

ஹிமாசல பிரதேச முதல்வராக சுக்விந்தா் சிங் பதவியேற்பு - புகைப்படங்கள்

ஹிமாசல பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் அந்த கட்சி 40 இடங்களை கைப்பற்றியது. 

published on : 11th December 2022

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு  - புகைப்படங்கள்

குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு  பலத்த பாதுகாப்புடன் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. 182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட தோ்தல் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு டிச. 5-ஆம் தேதி நடைபெறுகிறது.

published on : 1st December 2022

பாஜக முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்

மக்களவைத் தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே மாதம் 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில்  வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் தனிப்பெரும்பான்மை பெரும் வகையில் பாஜக சுமாா் 350 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த வெற்றியை முன்னிட்டு நாடுமுழுவதும் பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

published on : 23rd May 2019

வேட்பு மனு தாக்கல் செய்தார் ராகுல்

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டதால் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி, வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக தங்கை பிரியங்காவுடன் வந்தார். வேட்டி, சட்டை அணிந்து வந்த ராகுலுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகம் நோக்கி ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்றார். ஊர்வலத்தில் பிரியங்கா மற்றும் உம்மன்சாண்டி, ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட மூத்த தலைவர்களும் பங்கேற்றனர். 

published on : 4th April 2019

தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை அடையாற்றில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற போது காரிலேயே குண்டு வெடித்ததில் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.   போலீஸ் விசாரணையில், சேதமடைந்த கார், காஞ்சிபுரத்தை சேர்ந்த புல்லட் பரிமளம் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. 

published on : 30th July 2018

ரஜினிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் வந்த ரஜினிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரஜினிகாந்த் பேசுகையில் நான் அரசியலுக்கு வருவது உறுதி. தனி கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன். தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், பதவி, புகழுக்காக நான் அரசியலுக்கு வரவில்லை என்றார். நல்லதே நினைப்போம், நல்லதே செய்வோம், நல்லதே நடக்கும் என்பதே எங்கள் கொள்கை என்றார்.

published on : 31st December 2017

ஆர்.கே.நகரில் ஸ்டாலின் பிரச்சாரம்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21ஆம் நடைபெற உள்ள நிலையில்,  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். மேலும் கொளத்தூர் தொகுதி என்னுடைய செல்லப் பிள்ளையாக இருந்தாலும் ஆர்.கே.நகர் தொகுதியை தனது வளர்ப்புப் பிள்ளையாக கருதி பேணிப் பாதுகாப்போம் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

published on : 18th December 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை