• Tag results for நடிகர் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் - கமல் கட்சியின் பெயர்

நடிகர் கமல்ஹாசன், தனது அரசியல் பயணத்தை தான் பிறந்த ராமநாதபுரம் மாவட்டத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து துவங்கி, தொடர்ந்து மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்ட மைதானத்தில் தனது கட்சி கொடியை ஏற்றிய கமல்ஹாசன், தனது கட்சியின் பெயர் "மக்கள் நீதி மையம்" என அறிவித்தார். பொதுக்கூட்ட மேடையில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சோம்நாத் பாரதி மற்றும் பி.ஆர். பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

published on : 21st February 2018

கமல் ரஜினி சந்திப்பு

நட்பு ரீதியாக நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த்தின் போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் ரீதியானது இல்லை என்றும், ஒரு முக்கிய பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், அதற்காகத்தான் ரஜினியை சந்தித்ததாகவும், தொடர்ந்து மதுரை கூட்டத்தில் பங்கேற்க ரஜினிகாந்த்திற்கு அழைப்பு விடுத்தார். 

published on : 18th February 2018

கமல் - கேஜரிவால் சந்திப்பு

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்துக்கு வந்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், நடிகர் கமல்ஹாசனை சந்தித்தார். ஊழல், மதவாதத்தை எதிர்க்கும் தைரியமும், நேர்மையும் கொண்ட நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வர வேண்டும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அழைப்பு விடுத்தார்.

published on : 22nd September 2017

முரசொலி பவளவிழா

பவள விழாவை முன்னிட்டு முரசொலி அலுவலக வளாகத்தில் ‘முரசொலி காட்சி அரங்கம்’ திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பார்வையாளராகக் கலந்துகொண்டார். நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தனராகப் பங்கேற்றுள்ளார். இதில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் சு. திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்தியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், இந்து ஆசிரியர் ராம், விகடன் குழும தலைவர் ஸ்ரீநிவாசன், தினத்தந்தி தலைமைப் பொது மேலாளர் சந்திரசேகரன், நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

published on : 11th August 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை