• Tag results for நவராத்திரி

கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி

சென்னை பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி பண்டிகையையொட்டி கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி தொடங்கியது. இதில் ராமர்பாலம், சுக்ரீவர் பட்டாபிஷேகம், கீதா உபதேசம், மோட்டு பட்லு என பல வகையான பொம்மை செட்டுகள் இந்த கண்காட்சியில் இடம் பெற்று உள்ளன.

published on : 4th September 2019

நவராத்திரி கொண்டாட்டம்

நவம் என்றால் ஒன்பது என்று பொருள். ராத்திரி என்றால் இரவு என்று பொருள். ஒன்பது இரவுகளில் அம்பிகையைக் கொண்டாடி, விரதம் இருந்து வழிபட்டு வந்தால் பொன், பொருள்கள் குவியும் என்கிறது  சாஸ்திரம்.  மலை மகள், அலை மகள், கலை மகள் என்று துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரை வணங்குகின்றனர். இதில்  துர்க்கை வீரத்தை அளிப்பவளாகவும், திருமகள் செல்வத்தை அருள்பவளாகவும், சரஸ்வதி கல்வியை அருள்பவளாகவும் விளங்குகின்றனர். தேவியை வணங்க நவராத்திரியே ஏற்ற காலமாகக் கருதப்படுகிறது.

published on : 18th October 2018

களைகட்டும் ஆயுதபூஜை வியாபாரம்

நவராத்திரி பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகைகள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பூக்கள் பழங்கள் விற்பனை, பூஜை பொருட்களின் விற்பனை களைகட்டியுள்ளது. இதையொட்டி கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பொதுமக்கள் திரண்டு ஆர்வத்துடன் பூ, பூசணிக்காய் மற்றும் பழங்கள் வாங்கி சென்றனர்.  கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை அதிகரித்துள்ளதாகவும் அதிக அளவிலான மக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கி வருவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதேபோல் வாழை கன்று, மாவிலை தோரணம் மற்றும் பூஜை சாமன்கள் உள்ளிட்டவற்றின் விற்பனையும் சூடு பிடித்துள்ளது.

published on : 18th October 2018

கும்பகோணத்தில் நவராத்திரி  விழா

கோயில் நகரமான கும்பகோணம் பகுதியில் அமைந்துள்ள திருக்கோயில்களில் நவராத்திரி விழாவை ஒட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் உற்சவமூர்த்திகள் மற்றும் ஆலயங்களில் மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளின் கொலுக்காட்சி. படங்கள் உதவி: குடந்தை ப. சரவணன் - 9443171383  

published on : 16th October 2018

நவராத்திரி  விழா  

கோயில் நகரமான கும்பகோணம் பகுதியில் அமைந்துள்ள திருக்கோயில்களில் நவராத்திரி விழாவை ஒட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் உற்சவமூர்த்திகள் மற்றும் ஆலயங்களில் மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளின் கொலுக்காட்சி. படங்கள் உதவி: குடந்தை ப. சரவணன் - 9443171383  

published on : 13th October 2018

நவராத்திரி கொலு ஆரம்பம்

புரட்டாசி மாத, அமாவாசைக்கு அடுத்த நாள் அதாவது பிரதமை திதியில் இருந்து நவராத்திரி துவங்குகிறது. தொடர்ந்து வரும் ஒன்பது நாட்களும் நவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது. இதில் சிறுமிகள் முதல் வயது முதிர்ந்த பாட்டிகள் வரை மாலை நேரத்தில் அம்பிகையின் திருக்கதைகளையும், அவளைப் போற்றும் துதிப்பாடல்களையும் பாடி வழிபடுவார்கள். 

published on : 10th October 2018

துர்கா பூஜைக்கு தயாராகும் சிலைகள்

புரட்டாசி மாதம், அமாவாசைக்கு அடுத்த நாள் அதாவது பிரதமை திதியில் இருந்து நவராத்திரி துவங்குகிறது. தொடர்ந்து வரும் ஒன்பது நாட்களும் நவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது. முப்பெரும் தேவியரை வணங்கும் நவராத்திரி பண்டிகை இன்று முதல் ஆரம்பமாகிறது. நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் லட்சுமி உரியவை. அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கு உகந்தவை. கடைசி மூன்று நாட்களும் சரஸ்வதியின் நாட்கள்.  துர்கை சிலைக்கு வர்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி.

published on : 10th October 2018

வஸந்த நவராத்திரி

ஸ்ரீமாதா புவனேஸ்வரி அம்பிகை ஆலயத்தில் நடைபெற்ற வஸந்த நவராத்திரி உத்ஸவம் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. காலையில் அம்பிகைக்கு ஸகல திரவிய மஹாபிஷேகமும், மாலையில் ஒவ்வொரு நாளிலும் சிறப்பு அலங்காரங்களும், நவாவரண பூஜையும், நடைபெற்றது.

published on : 3rd April 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை