• Tag results for பண்டிகை

கோலாகலமாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - புகைப்படங்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது தமிழர்களின் பண்பாடு. உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியதும், வாடிவாசலில் இருந்து வெளியே சீறி பாயும் காளைகளை அடக்க காளையர்கள் வீரத்துடன் நின்றனர்.

published on : 17th January 2022

தசரா திருவிழா: நாடு முழுவதும் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

நவராத்திரி நிறைவைத் தொடர்ந்து தசரா பண்டிகை நாட்டின் பல்வேறு இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

published on : 16th October 2021

ஓணம் கொண்டாடிய நடிகைகள் - புகைப்படங்கள்

நடிகைகள் பலரும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து கூறி தங்களின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்.

published on : 21st August 2021

ஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்

தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு உழவுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் விழா கோவை ஈஷா யோகா மையத்தில் கொண்டாடப்பட்டது. விழாவில், பழங்குடி மக்கள், விவசாயிகள், வெளிநாட்டினர் உட்பட, பலர் பங்கேற்று பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.

published on : 17th January 2020

சென்னையில் பனிமூட்டத்துடன் புகைமூட்டம்

சென்னையில் போகி பண்டிகையை முன்னிட்டு அதிகாலையில் பழைய பொருட்கள் எரித்ததால் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. அதிகாலை முதல் சாலையே தெரியாத அளவுக்கு பனிமூட்டம் மற்றும் புகை மூட்டம்  சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணித்தனர். பனிமூட்டத்துடன் இந்த புகையும் சேர்ந்ததால் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது.

published on : 14th January 2020

மகளிர் கல்லூரிகளில் பொங்கல் விழா கொண்டாட்டம்

பெங்கள் பண்டிகை வெகு விமரிசையாக மஞ்சள், கரும்புகளை சுற்றி வைத்து பொங்கல் பண்டிகையை மாணவியர் கொண்டாடினர். மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலைகளை அணிந்து வந்து பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கல்லூரி வளாகத்தில் கீற்றுக் கொட்டகைகள் அமைத்து மாக்கோலமிட்டு, மாவிலை தோரணங்கள் கட்டி, செங்கற்கள் கொண்ட அடுப்பில் விறகுகளால் தீ மூட்டி மண்பானையில் பச்சரிசி வெல்லத்துடன் பொங்கலிட்டு பொங்கலோ பொங்கல் என மாணவியர் உற்சாக குரல் எழுப்பினர். இதை தொடர்ந்து உறியடி, கோலப் போட்டி, மருதாணி போடுதல், இயல் இசை, நடனம், ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது.

published on : 14th January 2020

ராம்லீலா மைதானத்தில் ராவண வதம்

தசரா பண்டிகை நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பண்டிகையின் இறுதி நாளன்று ராம்லீலா மைதானத்தில் ராவண வதம் நடைபெறுவதையொட்டி அங்கு 80 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட ராவணனின் உருவ பொம்மைக்கு மோடி அம்பு எய்தி தீ வைத்து எரிக்கப்பட்டது. இவ்வாறு செய்தால், தீய சக்திகள் அழிந்து நாட்டுக்கு நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். 

published on : 8th October 2019

கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி

சென்னை பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி பண்டிகையையொட்டி கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி தொடங்கியது. இதில் ராமர்பாலம், சுக்ரீவர் பட்டாபிஷேகம், கீதா உபதேசம், மோட்டு பட்லு என பல வகையான பொம்மை செட்டுகள் இந்த கண்காட்சியில் இடம் பெற்று உள்ளன.

published on : 4th September 2019

களைகட்டும் மன் பானை உற்பத்தி

பொங்கல் பண்டிகை வருவதையொட்டி பொங்கல் பானை, அடுப்பு உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றனர். காலமாற்றத்தால் மண்பானை மீது மோகம் குறைந்தாலும், இன்றும் கிராமப்புறங்களில் பொங்கல், மாட்டுப்பொங்கல் தினங்களில் பழங்கால் முறைப்படி புத்தம் புதிய மண்பானைகளில் பொங்கல் வைத்து வழிபடுவது தமிழர்களின் பண்பாடு .

published on : 9th January 2019

தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடங்கியது

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக கையாளப்பட்டு தீயணைப்பு வண்டி, ஆம்புலன்சுகள், தீயணைப்பு கருவிக ஆகியவற்றுக்கான தனி இடங்கள் ஒதுக்கப்பட்டன.  அனைத்து பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் பட்டாசு விற்பனை தொடங்கியது.  பண்டிகையையொட்டி, தீவுத்திடலில் சுமார் 70 கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

published on : 31st October 2018

களைகட்டும் ஆயுதபூஜை வியாபாரம்

நவராத்திரி பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகைகள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பூக்கள் பழங்கள் விற்பனை, பூஜை பொருட்களின் விற்பனை களைகட்டியுள்ளது. இதையொட்டி கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பொதுமக்கள் திரண்டு ஆர்வத்துடன் பூ, பூசணிக்காய் மற்றும் பழங்கள் வாங்கி சென்றனர்.  கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை அதிகரித்துள்ளதாகவும் அதிக அளவிலான மக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கி வருவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதேபோல் வாழை கன்று, மாவிலை தோரணம் மற்றும் பூஜை சாமன்கள் உள்ளிட்டவற்றின் விற்பனையும் சூடு பிடித்துள்ளது.

published on : 18th October 2018
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை