- Tag results for பத்மஸ்ரீ
![]() | பத்ம விருதுகள் 2022 - புகைப்படங்கள்நாட்டின் குடியரசு தினத்தையொட்டி ஆண்டுதோறும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. நிகழாண்டு மொத்தம் 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் 4 பத்ம விபூஷண் விருதுகளும், 17 பத்ம பூஷண் விருதுகளும், 107 பத்மஸ்ரீ விருதுகளும் அடங்கும். முதல்கட்டமாக 54 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. தமிழகத்திலிருந்து கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம், திருச்சி விராலிமலையைச் சேர்ந்த சதிர் நடனக் கலைஞர் முத்துகண்ணம்மாள், திருச்சியைச் சேர்ந்த கிளாரினெட் கலைஞர் ஏ.கே.சி. நடராஜன், பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. |
![]() | பத்ம விருது வழங்கி கெளரவிப்பு2018ஆம் ஆண்டுக்கான நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கி கெளரவித்தார். இதில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டது. அதன்படி இசைஞானி இளையராஜா உட்பட மூன்று பேருக்கு பத்ம விபூஷண் விருதும், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி உட்பட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண் விருதும் தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்