• Tag results for பனி

எனை சுடும் பனி பூஜை விழா

எஸ்.என்.எஸ்.பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் ‘எனை சுடும் பனி’. இதில் வெற்றி கதாநாயகனாகவும், நாயகியாக உபாசனா ஆர்சி, சுமா பூஜாரி நடிக்க, கே.பாக்யராஜ் சி.ஐ.டி அதிகாரியாக வருகிறார். இப்படத்தின் துவக்கவிழா சென்னையில் படப்பிடிப்புடன் துவங்கியது. படப்பிடிப்பு சென்னை, கேரளா, பொள்ளாச்சி, நெல்லியம்பதி மற்றும் அம்பாசமுத்திரம் போன்ற இடங்களில் நடக்க உள்ளது என தெரியவந்துள்ளது.

published on : 7th May 2019

இயற்கையின் மகிமையை பறைசாற்றும் சிம்லா

சிம்லாவில் கடும் பனிப்பொழிவால் மலைப்பகுதிகள் வெள்ளித்தகட்டால் மூடியது போல் காட்சியளிக்கின்றன. மேலும் பனியானது மரங்கள் மீதும், வீடுகள், கட்டடங்களின் கூரைகளின் மீதும் உறைந்துள்ளதால் அவை வெள்ளித்தகட்டால் மூடியதுபோல் காணப்படுகின்றன.

published on : 9th February 2019

காஷ்மீரில் கடும் பனிப்பொழி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பகுதியில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள், சாலைகள், மலைகள், மரம், செடி, கொடிகள் என அனைத்தும் இடங்களிலும் பனி படர்ந்துள்ளது. தொடர் பனிழ்பொழிவால் ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

published on : 5th January 2019

சிம்லாவில் கடும் உறை பனி

வட மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வதைத்து வந்த நிலையில், எங்கு பார்த்தாலும் உறை பனி சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கும் சிம்லா. பனிமூட்டம் காரணமாக போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ரயில் மற்றும் விமான போக்குவரத்தும் அங்கு பாதிக்கப்பட்டுள்ளது.

published on : 25th January 2018

சென்னையில் பனிமூட்டம்

பனி காலம் தொடங்கியுள்ளதை அடுத்து, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் அதிகாலை முதல் பனிமூட்டமாகக் காட்சியளிக்கிறது. தொடர்ந்து சில நாட்களாக பனிமூட்டம் அதிகரித்ததை அடுத்து வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எதிரில் வரும் வாகனங்களை அடையாளம் காண முடியாத அளவுக்கு பனி இருப்பதால், பெரும்பாலான வாகனங்களில் முகப்பு விளக்கு போட்டபடியே வாகங்களை இயக்கி வருகின்றனர்.

published on : 23rd December 2017

புகைமண்டலமான சென்னை

தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிக்கப்பட்டதால் சென்னை நகரில் செயற்கையான மூடுபனி போன்ற தோற்றம் காணப்பட்டது. எங்கு நோக்கினும் புகைமண்டலமாக காட்சியளித்தது. புகை மூட்டத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இருமல், கண் எரிச்சல் போன்ற உபாதைகள் ஏற்ப்பட்டது. மேலும் தெருக்கள், சாலைகள் எங்கும் குப்பை, கூளங்களாக காட்சியளித்தன.

published on : 20th October 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை