• Tag results for பிரதமர்

ரியாத்தில் பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக சவுதி அரேபியா சென்றடைந்தார்.  அந்நாட்டு மன்னரின் அழைப்பை ஏற்று அங்கு சென்றுள்ள அவர், மன்னர் சல்மான் பின் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்து பேசினார். இதில் சந்திப்பில் பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

published on : 30th October 2019

கடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி

மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் 30 நிமிடம் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அவர் நடை பயணம் மேற்கொண்ட இடங்களில் சிதறி கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை வெறும் கைகளால் அகற்றினார். சுத்தம் செய்யும் படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

published on : 12th October 2019

கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங்   

மாமல்லபுரம் கடற்கரை கோயிலின் சிற்பங்களை  குறித்து சீன அதிபருக்கு பிரதமர் மோடி விளக்கினார். பிறகு கடற்கரை கோயிலில் லிங்க வடிவில் சோமாஸ்கந்தர், பள்ளிக்கொண்ட நிலையில் உள்ள ஜலசயன பெருமாள், வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்து ரதம் பகுதியில் சிற்ப வேலைப்பாடுகள் குறித்தும்,  குடைவரைக் கோயில்களின் தொன்மை குறித்தும் விளக்கினாா். இதனை முன்னிட்டு மாமல்லபுரத்தில் ஒரு வரலாற்று நிகழ்வு நடைபெற்றது.

published on : 12th October 2019

கடற்கரை கோயிலில் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த பிரதமர் மற்றும் சீன அதிபர்

பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணெய் உருட்டி பாறையை பார்த்த பிறகு, ஐந்து ரதம் பகுதியை சுற்றிப்பார்த்தனர், பிறகு கடற்கரை கோவில் பகுதிக்கு சென்றனர். அப்போது குடைவரை கோவில்களின் தொன்மைகள் குறித்து சீன அதிபருக்கு பிரதமர் மோடி எடுத்துரைத்தார். இதையடுத்து, கடற்கரை கோவில் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசித்தனர்.

published on : 11th October 2019

சீன அதிபர் வருகையை முன்னிட்டு இறுதிக்கட்ட பாதுகாப்பு பணிகள்

பிரதமர், சீன அதிபர் வருகையை முன்னிட்டு இன்று மாமல்லபுத்தில் சந்தித்து இருநாட்டு நல்லுறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கும் வேலையில், சென்னையில் உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிழக்கு கடற்கரை சாலையை புதுமையாக்கும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

published on : 11th October 2019

மோடியிடம் வாழ்த்து பெற்ற பி.வி.சிந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜப்பான் நாட்டின் நொசோமி ஒகுஹாராவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார் பி.வி. சிந்து. இதனையடுத்து தில்லு விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடியை சந்தித்து ஆசிபெற்றார்.

published on : 27th August 2019

வாஜ்பாய் முதலாம் ஆண்டு நினைவு தினம்

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். இதில் வாஜ்பாய் அவர்களின் வளர்ப்பு மகளான நமிதா கவுல் பட்டாச்சார்யா மற்றும் பேத்தி நிஹாரிக்காவும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

published on : 16th August 2019

மூவர்ணக் கொடியேற்றினார் பிரதமர் மோடி

நாட்டின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் முப்படை வீரர்களின் மரியாதையை ஏற்று கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள், முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

published on : 15th August 2019

ஜி20 மாநாட்டில் மோடி

ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்துப் பேசினார். அதன்பின் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரை சந்தித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு ஈரான் பிரச்னை, 5ஜி தொலைத்தொடர்பு நெட்வொர்க், வர்த்தக உறவுகள் மற்றும் தேசப் பாதுகாப்பு குறித்து ட்ரம்ப் உடன் ஆலோசனை நடத்தியுள்ளார். 

published on : 28th June 2019

மகாத்மா காந்தி - வாஜ்பாய் நினைவிடத்தில் மோடி மரியாதை

நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்க இருக்கும் நரேந்திர மோடி தில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.  அதனைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்திலும் மோடி மரியாதை செலுத்தினார். மோடியுடன் அமித்ஷா உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.  தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்க இருக்கிறார். அவருடன் மத்திய அமைச்சர்களும், வெளிநாட்டுத் தலைவர்கள், உள்நாட்டு அரசியல் தலைவர்கள், மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், பல்துறை வல்லுநர்கள், திரைப்படத் துறை பிரபலங்கள் என பலர் பங்கேற்கின்றனர். 

published on : 30th May 2019

கேதார்நாத் பனிக்குகையில் மோடி தியானம்

உத்தரகாண்ட்டிற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, கடல் மட்டத்தில் இருந்த 11,755 அடி உயரத்தில் அமைந்துள்ள கேதார்நாத் கோவிலில் வழிபாடு செய்தார். பிரதமர் மோடி, அங்குள்ள குகைக்கோயிலுக்குள் தியானத்தில் நாளை காலைவரை தியானம் மேற்கொள்ள உள்ளதாக தெரியவந்துள்ளது. பிரதமர் வருகையையொட்டி, அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

published on : 18th May 2019

எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா

மதுரை தோப்பூரில் சுமார் 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  சுமார் 202 ஏக்கரில், 750 படுக்கை வசதியுடன் அமைய உள்ளது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும் மதுரை – பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, தஞ்சாவூர் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, திருநெல்வேலியில் அமைக்கப்பட்ட அரசு மருத்துவமனையின் சிறப்பு பிரிவுகளையும் திறந்து வைத்தார். இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

published on : 27th January 2019

மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் மறைவு

நுரையீரல் புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெற்றுவந்த மத்திய உரம், ரசாயனம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எச்.ஆனந்த்குமார் உடல் நலக்குறைவால் பெங்களூருவில் காலமானார். இதைதொடர்ந்து அனந்த் குமார் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

published on : 13th November 2018

ஜப்பானில் பிரதமர் மோடி

இந்தியா - ஜப்பான் இடையேயான உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று டோக்கியோ சென்ற பிரதமர் மோடி ஜப்பானின் யாமனாஷி நகரில் உள்ள 'ஃபேனக் கார்ப்பரேஷன்' ரோபோ தயாரிப்பு தொழிற்சாலையை அந்நாட்டு பிரதமர் ஷின்ஸோ அபேவுடன் பார்வையிட்டார்.

published on : 29th October 2018

கருணாநிதி உடலுக்கு மோடி அஞ்சலி

மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்துவந்த, திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். இந்நிலையில் இன்று காலை சென்னை வந்து பிரதமர் மோடி கருணாநிதி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரையுலகினர் மற்றும் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

published on : 8th August 2018
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை