• Tag results for பிரதமர் மோடி

லடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

எல்லையில் இந்திய-சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதலுக்கு பிறகு பதற்றம் அதிகரித்து வரும் நிலையில்,  பிரதமர் மோடி இன்று லடாக்கில் உள்ள லே பகுதிக்கு பயணம் மேற்கொண்டு அங்கு ஆய்வு செய்தார்.

published on : 3rd July 2020

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதும், ராமர் கோயில் கட்டுவதற்கு வழிவகை செய்தது மற்றும் முத்தலாக்கை தடை செய்தது உள்ளிட்ட அரசின் பெரிய முடிவுகள் பலவற்றையும் குறிப்பிட்டு பிரதமர் பேசிய போது பல்வேறு முக பாவனைகளுடன் பிரதமர் மோடி உரையாற்றினார்.

published on : 6th February 2020

முப்படைகள் அணிவகுப்புடன் கோத்தபாயவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ மூன்று நாள் அரசுமுறை பயணமாக, இந்தியா வருகை தந்துள்ள நிலையில் அவருக்கு முப்படைகள் அணிவகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடியை கோத்தபாய ராஜபக்சே ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தார்.   

published on : 29th November 2019

கடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி

மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் 30 நிமிடம் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அவர் நடை பயணம் மேற்கொண்ட இடங்களில் சிதறி கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை வெறும் கைகளால் அகற்றினார். சுத்தம் செய்யும் படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

published on : 12th October 2019

கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங்   

மாமல்லபுரம் கடற்கரை கோயிலின் சிற்பங்களை  குறித்து சீன அதிபருக்கு பிரதமர் மோடி விளக்கினார். பிறகு கடற்கரை கோயிலில் லிங்க வடிவில் சோமாஸ்கந்தர், பள்ளிக்கொண்ட நிலையில் உள்ள ஜலசயன பெருமாள், வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்து ரதம் பகுதியில் சிற்ப வேலைப்பாடுகள் குறித்தும்,  குடைவரைக் கோயில்களின் தொன்மை குறித்தும் விளக்கினாா். இதனை முன்னிட்டு மாமல்லபுரத்தில் ஒரு வரலாற்று நிகழ்வு நடைபெற்றது.

published on : 12th October 2019

கடற்கரை கோயிலில் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த பிரதமர் மற்றும் சீன அதிபர்

பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணெய் உருட்டி பாறையை பார்த்த பிறகு, ஐந்து ரதம் பகுதியை சுற்றிப்பார்த்தனர், பிறகு கடற்கரை கோவில் பகுதிக்கு சென்றனர். அப்போது குடைவரை கோவில்களின் தொன்மைகள் குறித்து சீன அதிபருக்கு பிரதமர் மோடி எடுத்துரைத்தார். இதையடுத்து, கடற்கரை கோவில் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசித்தனர்.

published on : 11th October 2019

மோடியிடம் வாழ்த்து பெற்ற பி.வி.சிந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜப்பான் நாட்டின் நொசோமி ஒகுஹாராவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார் பி.வி. சிந்து. இதனையடுத்து தில்லு விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடியை சந்தித்து ஆசிபெற்றார்.

published on : 27th August 2019

எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா

மதுரை தோப்பூரில் சுமார் 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  சுமார் 202 ஏக்கரில், 750 படுக்கை வசதியுடன் அமைய உள்ளது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும் மதுரை – பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, தஞ்சாவூர் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, திருநெல்வேலியில் அமைக்கப்பட்ட அரசு மருத்துவமனையின் சிறப்பு பிரிவுகளையும் திறந்து வைத்தார். இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

published on : 27th January 2019

கருணாநிதி உடலுக்கு மோடி அஞ்சலி

மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்துவந்த, திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். இந்நிலையில் இன்று காலை சென்னை வந்து பிரதமர் மோடி கருணாநிதி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரையுலகினர் மற்றும் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

published on : 8th August 2018

சீனாவில் பிரதமர் மோடி

அதிபர் ஷின் ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று சீனா சென்ற பிரதமர் மோடி, அங்கு ஷின் ஜின்பிங்கை சந்தித்தார். இந்தியா-சீனா இடையிலான வர்த்தகம், எல்லைப் பிரச்சினை, போன்றவற்றுக்கு சுமுகத்தீர்வு காணும் வகையில் இப்பயணம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடி பிரதமரான பின் 4-வது முறையாக சீனா செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

published on : 28th April 2018

அம்மா ஸ்கூட்டர் திட்டம் தொடங்கி வைப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் அம்மா ஸ்கூட்டர் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. தமிழகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

published on : 24th February 2018

சபர்மதி ஆசிரமத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமர் மோடியும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் விமான நிலையத்திலிருந்து  சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றனர். பிரதமர் மோடியுடன் சபர்மதி ஆசிரமத்தை சுற்றிப் பார்த்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அங்கிருந்த காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு ஆசிரமத்தில் இருந்த ராட்டையையும் இஸ்ரேல் பிரதமர் சுழற்றிப் பார்த்தார். தொடர்ந்து சபர்மதி ஆசிரமத்தில் பட்டம் விட்டு மகிழ்ந்தனர்.

published on : 17th January 2018

கருணாநிதியை சந்தித்தார் பிரதமர் மோடி

தினத்தந்தியின் பவள விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவும், பொருளாதார ஆலோசகர் சோமநாதன் மகள் இல்லத் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க  சென்னை வந்த பிரதமர் மோடி, கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். பிரதமர் மோடியுடன் ஆளுநர் பன்வாரிலாலும் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன், திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

published on : 7th November 2017

பெல்ஜியம் மன்னர் - ராணி இந்தியா வருகை

பெல்ஜியம் நாட்டு மன்னர் பிலிப் மற்றும் ராணி மதில்டே தம்பதியினர் ஏழு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளனர். இந்நிலையில் மன்னர் பிலிப் மற்றும் ராணி மதில்டே ஆகியோர் ராஜ் காடில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பிறகு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடியையும் நேரில் சந்தித்து பேசுவார். அதன்பின்னர் மும்பைக்கு சென்று 2008ல் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பலியானவர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்துகின்றனர்.

published on : 7th November 2017

துணை ஜனாதிபதியாக வெங்கய்ய நாயுடு பதவியேற்பு

நாட்டின் 13-வது துணை ஜனாதிபதியாக வெங்கய்ய நாயுடு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, அமித்ஷா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

published on : 11th August 2017
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை