• Tag results for பூஜை

விநாயகர் சதுர்த்தி - பகுதி II

விநாயகரின் பிறந்த தினமாக கருதப்படும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. பக்தர்களுக்கு பிடித்த வகையில் யானைமுக விநாயகர், வெற்றி விநாயகர், வீர விநாயகர், சித்தி விநாயகர், சிம்மாசன விநாயகர், பாகுபலி விநாயகர், தாமரை விநாயகர், யானை வாகனர், மூஷிக, வெற்றி விநாயகர்,  ராஜ விநாயகர், சுயம்பு விநாயகர், கற்பக விநாயகர், பைக் விநாயகர்,  எலி-புலியின் மேல் அமர்ந்திருக்கும் விநாயகர் என பல்வேறு வகையிலான சிலைகள் தயாரிக்கப்பட்டு, பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

published on : 3rd September 2019

விநாயகர் சதுர்த்தி விழா - அலைமோதிய கூட்டம்

இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றானது விநாயகர் சதுர்த்தி. இதையொட்டி பூஜை பொருட்கள் வாங்க நேற்று கடைவீதியில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. மேலும் சிறிய மற்றும் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை பொதுமக்கள் பார்வையிட்டு வாங்கி சென்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  உலகம் முழுவதும் விழா கோலம் பூண்டது.

published on : 3rd September 2019

விஜய் 63 படத்தின் பூஜை விழா

விஜய் 63 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. பிரமாண்ட பொருட்செலவில் ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் இப்படத்தை தயாரிக்கிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்தராஜ், யோகிபாபு, டேனியல் பாலாஜி, கதிர், விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

published on : 22nd January 2019

களைகட்டும் ஆயுதபூஜை வியாபாரம்

நவராத்திரி பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகைகள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பூக்கள் பழங்கள் விற்பனை, பூஜை பொருட்களின் விற்பனை களைகட்டியுள்ளது. இதையொட்டி கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பொதுமக்கள் திரண்டு ஆர்வத்துடன் பூ, பூசணிக்காய் மற்றும் பழங்கள் வாங்கி சென்றனர்.  கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை அதிகரித்துள்ளதாகவும் அதிக அளவிலான மக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கி வருவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதேபோல் வாழை கன்று, மாவிலை தோரணம் மற்றும் பூஜை சாமன்கள் உள்ளிட்டவற்றின் விற்பனையும் சூடு பிடித்துள்ளது.

published on : 18th October 2018

ஆயுத பூஜை கோலாகலம்

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பழங்களும், பூக்களும் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. பூஜை பொருட்களான பொரி, மஞ்சள் கொத்து, பூசணிக்காய், மாவிலைத் தோரணம், வாழைக் கன்று உள்ளிட்ட பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது.

published on : 17th October 2018

துர்கா பூஜைக்கு தயாராகும் சிலைகள்

புரட்டாசி மாதம், அமாவாசைக்கு அடுத்த நாள் அதாவது பிரதமை திதியில் இருந்து நவராத்திரி துவங்குகிறது. தொடர்ந்து வரும் ஒன்பது நாட்களும் நவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது. முப்பெரும் தேவியரை வணங்கும் நவராத்திரி பண்டிகை இன்று முதல் ஆரம்பமாகிறது. நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் லட்சுமி உரியவை. அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கு உகந்தவை. கடைசி மூன்று நாட்களும் சரஸ்வதியின் நாட்கள்.  துர்கை சிலைக்கு வர்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி.

published on : 10th October 2018

தயாரிப்பு எண் 3

சித்தார்த் - கேதரின் தெரசா நடிக்கும் புது படம் தயாரிப்பு எண் 3 பூஜை ஆல்பம் ஸ்டில்ஸ்.

published on : 10th July 2018

ஜிப்ஸி படத்தின் பூஜை விழா

ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா சிங் நடிக்கும் படம் 'ஜிப்ஸி'. இமாச்சல பிரதேஷின் மிஸ் பட்டம் வென்ற நடாஷா சிங். மாடலிங் துறையில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். 'ஒலிம்பியா மூவீஸ்' நிறுவனம் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கவுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில், இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

published on : 19th June 2018

ஐல படத்தின் பூஜை ஸ்டில்ஸ் 

'சாந்தினி' நடிக்கவிருக்கும் ஹாரர் த்ரில்லர் ‘ஐல’. ஹாரர் த்ரில்லர் படங்களிலேயே புதிய பாணியில் உருவாக உள்ளது. இப்படம் ரியங்கா பிலிம் புரொடக்சன்ஸ் சார்பில் தம்பி உன்னி கிருஷ்ணன் மற்றும் ஜே.ரவீந்திரன் தயாரிக்க உள்ளனர். படத்தின் பூஜை நேற்று விழா ராஜேஷ் தாஸ் I.P.S. குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

published on : 13th May 2018

மாரி 2 படத்தின் பூஜை விழா

பாலாஜி மோகன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகும் படம் ‘மாரி 2’. நாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். மேலும் கிருஷ்ணா, வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். படத்தின் பூஜை விழா சென்னையில் நடைபெற்றது.

published on : 5th January 2018

ஜெயா டிவி - தினகரன் வீடுகளில் ஐ.டி ரெய்டு

ஜெயா டி.வி., ஜாஸ் சினிமாஸ், மிடாஸ் கம்பெனி, தினகரன் வீடு, அலுவலகம், உறவினர்கள் வீடு, கர்நாடக மாநிலத்தில் உள்ள கட்சி அலுவலகம் என சசிகலா, தினகரனுக்குத் தொடர்பு உள்ள 150க்கும் இடங்களில், வருமான வரித் துறையினர் ரெய்டு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பரபரப்புக்கு உள்ளான நிலையில், தினகரன் தன் வீட்டில் மனைவி அனுராதாவுடன் சேர்ந்து, கோ பூஜை நடத்தினார். அலங்கரிக்கப்பட்ட பசுவுக்கும் கன்றுக்கும் அவர்கள் வாழை பழங்களை கொடுத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் தினகரன்.

published on : 9th November 2017

ஆயுத பூஜை கோலாகலம்

ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட் மலர் அங்காடி வளாகத்தில் பூஜை பொருட்களான பொரி, மஞ்சள் கொத்து, பூசணிக்காய், மாவிலைத் தோரணம், வாழைக் கன்று உள்ளிட்ட பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது.

published on : 28th September 2017

அகோரி படத்துவக்க விழா

அறிமுக இயக்குனர் டி.எஸ்.ராஜ்குமார் இயக்கும் படம் ‘அகோரி’.  இதில் நாயகனாக சித்து நடித்து உள்ளார், இவருடன் பல முன்னணி நடிகர்-நடிகைகளும் நடித்து உள்ளனர். பிரசாத் இசையில், பூஜையுடன் படத்துவக்க விழா ஏவி.எம். ஸ்டுடியோவில் சமீபத்தில் நடைபெற்றது.

published on : 19th July 2017

தடம்

மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் 'தடம்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் படப்பூஜையுடன் தொடங்கியது. இந்தர்குமார் தயாரிக்கவுள்ள இப்படத்தில் 2 நாயகிகள் நடிக்கவுள்ளனர். இதற்கான தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

published on : 12th July 2017

96 படத்தின் பூஜை விழா ஸ்டில்ஸ்

விஜய் சேதுபதி, திரிஷோ முதல் முறையாக இணைந்து நடிக்கும் ‘96’ படத்தின் துவக்க விழா பூஜை சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் விஜய் சேதுபதி, திரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டதோடு, இயக்குநர்கள் லஷ்மன், பாலாஜி தரணிதரன், தியாகராஜா குமாரராஜா, இசையமைப்பாளர் பைசல், ஒளிப்பதிவாளர் சுகுமார் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

published on : 14th June 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை