• Tag results for பேட்ட

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை சிந்தாதிரிப்பேட்டை சத்தியவானி நகரில் உள்ள ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடிக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து வந்தனர். பிறகு மாநகராட்சி அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து தரைமட்டமாக்கினர்.

published on : 29th December 2019

குடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள் 

ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்குக் குடிநீர் கொண்டு வரப்பட்டது. குடிநீரை சென்னைக்கு விநியோகம் செய்யும் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, பி. பென்ஜமின், க.பாண்டியராஜன் உள்ளிட்டோர்.

published on : 13th July 2019

ரஜினியின் பேட்ட வெளியானது - திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி உள்ள பேட்ட படத்தில் இளமையான தோற்றத்தில் ரஜினி தோன்றியதை அடுத்து திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், பால் அபிஷேகம் செய்து கொண்டாடினர். இதில் சிம்ரன், திரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சின்ஹா, நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

published on : 11th January 2019

ரஜினி - அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம், திக்குமுக்காடும் திரையரங்கம்

ரஜினி நடித்த பேட்ட படமும் அஜித்தின் விஸ்வாசம் படமும் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளன. அதிகாலை 4 மணிக்கு சிறப்புக் காட்சியாக பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், பேட்ட படம் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க இருக்க, சென்னை ராயப்பேட்டையில் உள்ள திரையரங்கு வளாகத்தில் வைத்து காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்தைத் தொடர்ந்து தென் சென்னை கிழக்கு மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் மணமக்களுக்கு சீர்வரிசை வழங்கப்பட்டது.

published on : 10th January 2019

பேட்ட

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘பேட்ட’. இதில் ரஜினியுடன் இணைந்து நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா, மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி, ராம்தாஸ், ராமச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர்.

published on : 23rd December 2018

பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா ஸ்டில்ஸ்.

published on : 10th December 2018

களைகட்டிய தீபாவளி ஷாப்பிங் கூட்டம்

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் தி.நகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை, பிராட்வே, பாடி உள்ளிட்ட பகுதிகளில் புத்தாடைகள், பட்டாசு வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதனால் வர்த்தக பகுதியான தி.நகர், புரசைவாக்கம், பழைய வண்ணாரப்பேட்டை, பிராட்வே, பாடி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் கூடுவதால், கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.

published on : 31st October 2018

அதிமுக 47வது ஆண்டு விழா

அதிமுக 47-வது ஆண்டு விழா தொடக்க நிகழ்ச்சி முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சிக் கொடியேற்றி வைத்தனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். தொடங்கினார்.  எம்.ஜி.ஆர். அடுத்து 30 ஆண்டுகள் அந்த இயக்கத்தை ஜெயலலிதா வழிநடத்தினார். 

published on : 17th October 2018

பேட்ட

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந் நடிக்கும் படம் 'பேட்ட'. இதில் த்ரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். இந்நிலையில் பேட்ட படத்தில் ரஜினிகாந்த் நடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

published on : 13th September 2018

கோமுக்தீஸ்வரர் ஆலயம்

சிவன், பார்வதிதேவியை பசுவாக போகும் படி சாபமிட்டார். பசு வடிவம் கொண்ட உமாதேவி, திருவாவடுதுறை காட்டில் மேய்ந்து அங்கிருந்த சிவலிங்கம் மீது பாலை சொரிந்தார். இதையடுத்து உமாதேவியின் பசு வடிவ சாபத்தை நீக்கிய சிவபெருமான், அந்தத் தலத்தில் பார்வதிதேவியை அணைத்தபடி எழுந்தருளினார். 'கோ'வாகிய பசுவிற்கு விமோட்சனம் தந்தவர் என்பதால் கோமுக்தீஸ்வரர் என பெயர் பெற்றது இத்தலம். கோவிலுக்கு செல்ல மயிலாடுதுறையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறை - கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள நரசிங்கன்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 3 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள திருவாலங்காடு என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 1 கிலோமீட்டர் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம். படங்கள் உதவி: வசந்த்குமார்.

published on : 4th January 2018

வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் சுரங்கப் பணி நிறைவு

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, ரூ. 20 ஆயிரம் கோடி முதலீட்டில் 45 கிலோ மீட்டர் தொலைவுக்கு, மெட்ரோ ரயில் போக்குவரத்து பணிகள் ராட்சத டனல் போரிங் இயந்திரம் முலம் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதில் வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் சுரங்கப் பணி இடையே நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகளில் 2.2 கி.மீ. தூரத்துக்கான சுரங்கம் அமைக்கும் பணி நிறைவடைந்தது, விரைவில் மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளது.

published on : 25th September 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை