• Tag results for மறைவு

‘பாஜக’வின் சுடர்மிகு பெண் முகம் சுஷ்மா சுவராஜ் மறைவு! (புகைப்பட அஞ்சலி)

பாஜகவின் பொலிவு மிக்க முகங்களில் ஒருவரான மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் நேற்று இரவு தில்லியில் காலமானார். அவருக்கு வயது 67. தமது 25 வயதில் மந்திரி சபையில் இடம் பெற்றவர் எனும் பெருமைக்குரிய சுஷ்மா, 7 முறை பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய சிறப்புக்குரியவர் என்பதோடு அதில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். 

published on : 7th August 2019

ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவு

நாட்டின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடல் நலக்குறைவால் காலமானார். கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த பெர்னாண்டஸ் வாஜ்பாய் அமைச்சரவையில் 1998-2004 வரை ராணுவ அமைச்சராக பதவி வகித்த போது பாகிஸ்தானுடன் கார்கில் போரை எதிர்கொண்டு இந்தியா வெற்றியடைந்தது. 

published on : 30th January 2019

மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் மறைவு

நுரையீரல் புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெற்றுவந்த மத்திய உரம், ரசாயனம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எச்.ஆனந்த்குமார் உடல் நலக்குறைவால் பெங்களூருவில் காலமானார். இதைதொடர்ந்து அனந்த் குமார் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

published on : 13th November 2018

கருணாநிதி உடலுக்கு மோடி அஞ்சலி

மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்துவந்த, திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். இந்நிலையில் இன்று காலை சென்னை வந்து பிரதமர் மோடி கருணாநிதி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரையுலகினர் மற்றும் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

published on : 8th August 2018

நடராஜன் உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி

உடல் நலக்குறைவால் குலோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் கணவர் நடராஜன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அவரது உடலுக்கு திமுக கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிடக் கழகம் தலைவர் கி. வீரமணி, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகன்னு, தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

published on : 20th March 2018

மார்ஷல் அர்ஜன் சிங் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

தில்லியில் இந்திய விமானப்படை முன்னாள் தலைமைத் தளபதி அர்ஜன் சிங்கின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி. இதையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். இந்திய விமானப் படையில் 5 ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட ஒரே அதிகாரியாகவும்,  பின்னர் ஸ்விட்சர்லாந்து மற்றும் வாடிகனுக்கான இந்தியத் தூதராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.

published on : 18th September 2017

நடிகை ரீமா லாகு மறைவு

1958ஆம் ஆண்டு பிறந்த ரீமா லாகு இந்தி, மாரத்தி திரையுலகில் பெரும் பங்கு ஆற்றியவர். திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து வந்த ரீமா லாகு மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் முன்னனி இந்தி நடிகர்களான ஷாருக் கான், சல்மான் கான் மற்றும் சஞ்சாய் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார்.

published on : 18th May 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை