• Tag results for மழை

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை

சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்தது வருகிறது. இந்நிலையில் முகப்பேர், அம்பத்தூர், ஆவடி, திருவல்லிக்கேணி, ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, பெசன்ட் நகர், கோடம்பாக்கம்,  கிண்டி, போரூர், வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர், தாம்பரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்னனர்.

published on : 17th October 2019

சென்னயில் பலத்த மழை

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் பலத்த மழை பெய்ததால் குளிர்ச்சியான காலநிலை நிலவியது. சென்னையின் திருவல்லிக்கேணி, வடபழனி, கிண்டி, தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், ராயபுரம், ஐஸ்ஹவுஸ், பூந்தமல்லி, தாம்பரம், மேடவாக்கம், பெருங்களத்தூர், அயப்பாக்கம், ஆவடி, கந்தன்சாவடி உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால் சாலைகளிலும், நகரிலுள்ள சுரங்கப் பாதைகளிலும் மழை நீர் தேங்கியது. இதனால், பல்வேறு பகுதிகளில்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், வாகனங்கள் சாலையில் ஊர்ந்து சென்றன.

published on : 22nd September 2019

மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு

சென்னை தீவுத்திடலில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மழைநீர் சேகரிப்பு, நெகிழி ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தைத் தொடக்கி வைத்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள்.

published on : 14th September 2019

சென்னையில் இடியுடன் கனமழை

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கன மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. படங்கள்: ஏ.எஸ். கணேஷ்

published on : 30th August 2019

அமேசான் காட்டுத் தீ

நாம் வாழும் உலகின் 20 சதவீத ஆக்சிஜன் தேவையை உற்பத்தி செய்து வாரி வழங்கிக்கொண்டிருந்தது இந்த அமேசான் காடுகள். பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படும் இந்த மழைக்காடுகள் பல்லுயிரினங்களுக்கு தாய்வீடு. அமேசான் மழைக்காடுகளில் உள்ள ஈரப்பதம், தீயையே அணைத்துவிடும் ஆற்றல் வாய்ந்தவை என்று ஒரு சொல்லப்பட்ட நிலையில் இன்றோ அமேசான் மழைக்காடுகள் பற்றி எரிந்து கொண்டிருப்பதுதான் ஆச்சிரியத்தில் ஆச்சரியம். படங்கள் : AP/PTI

published on : 30th August 2019

சேத்துப்பட்டு ஏரி

சென்னையில் 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சேத்துப்பட்டு ஏரியில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக நீர்மட்டம் அதிகரித்து ஏரியில் படகு சவாரி செய்யும் பொதுமக்கள்.  மேலும் இங்கு தூண்டில் மீன்பிடி தளம், 1.5 கிலோ மீட்டர் நடைப்பயிற்சி பாதை, மீன்கள் கண்காட்சி கூடம், குழந்தைகள் விளையாட்டு பூங்கா, அடுக்குமாடி வாகன நிறுத்தும் இடம், பெரிய ஹோட்டல் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

published on : 30th August 2019

அபாய நீர்மட்டத்தை தாண்டி ஓடும் யமுனை நதி

வட இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் ஒன்றான யமுனை ஆறு இமயமலையில் உற்பத்தியாகி,  தில்லி, ஹரியானா மாநிலங்கள் வழியாக செல்லும் இந்த ஆறு உத்தரப்பிரதேசம் அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது. இந்நிலையில் தில்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக யமுனை யமுனா நதியின் நீர்மட்டம் அதிகரித்துக் கொண்டே வருவதால், மாவட்ட நிர்வாகம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. 

published on : 23rd August 2019

புத்துயிர் பெறும் தாமரை குளம்

பல ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தாமரை குளம், ஒரு காலத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வந்தது. மேலும், மழைக்காலத்தில் சுற்று வட்டாரத்தில் இருந்து வரக்கூடிய தண்ணீர் இந்த குளத்தில் தேங்கி, சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கியது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த குளத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சரியாக பராமரிக்காததால், எங்கு பார்த்தாலும் குப்பை குவியலாக காட்சியளித்தது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றாக இணைந்து தாமரை குளத்தை தூர்வாரி கரையை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

published on : 22nd August 2019

வானில் ஏற்பட்ட மாற்றம்

சென்னை திடீரென வானிலை மாறி மழை மேகங்கள் சூழ வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. காலையில் வெயில் காய்ந்த நிலையில் தற்போது திடீரென வானம் இருட்டிக் கொண்டு இருப்பதால் இதமான சூழல் நிலவுகிறது. மேலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

published on : 14th August 2019

தில்லியில் கனமழை

கடந்த சில நாட்களாக தில்லியில் தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இடம்: தில்லி பார்லிமென்ட்.

published on : 6th August 2019

வெள்ளத்தில் சிக்கிய ரயில்

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் கன மழை காரணமாக தண்டவாளத்தில் பெருமளவு தண்ணீர் தேங்கியிருந்ததால் தொடர்ந்து ரயிலை இயக்க முடியவில்லை. இதனால் நடுவழியில் சிக்கிய மஹாலஷ்மி விரைவு ரயிலில் இருந்து 1050  பயணிகளை பத்திரமாக மீட்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர்.

published on : 28th July 2019

கனமழையால் தத்தளிக்கும் மும்பை

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழையால், மும்பை மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. ரயில்வே தண்டவாளங்கள் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்தில் ஓடு தளத்தினுள் வெள்ள நீர் புகுந்து பாதையை மூழ்கடித்துள்ளது.  இதை ஒட்டி அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. தொடர் மழையால் சாலைகளில் மழை நீர் சேர்ந்து ஆறுபோல் காட்சியளித்தது. 

published on : 2nd July 2019

மும்பையில் கன மழை

மும்பையில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில், தற்போது பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக குர்லா உள்ளிட்ட பகுதிகளிலும், தானே உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. மழை நீரால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

published on : 29th June 2019

சென்னையில் கனமழை

தண்ணீர் தட்டுப்பாட்டால் தவித்து வந்த நிலையில் சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகப்பேர், அம்பத்தூர், ஆவடி, தேனாம்பேட்டை, ஆழ்வார்ப்பேட்டை, தியாகராய நகர், கிண்டி, ஈக்காட்டுத் தாங்கல், அசோக் நகர், வளசர வாக்கம், ராமாபுரம், கே.கே. நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வேளச்சேரி, குரோம்பேட்டை, தரமணி, திருவான்மியூர், எழும்பூர் உள்ளிட்ட சென்னையின் பெரும்பாலான பகுதியில் கனமழை வெளுத்து வாங்கியது. பலத்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

published on : 27th June 2019

சென்னையில் மழை 

சென்னையில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென நேற்று மதியம் சென்னையில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி, தரமணி, பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. மழை நீரைக் கண்ட சிறுவர்கள், உற்சாகத்தில் ஆட்டம் போட்டனர்.

published on : 21st June 2019
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை