• Tag results for மீனா

அண்ணாத்த: ரஜினிகாந்த் - நயன்தாரா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'அண்ணாத்த'. நயன்தாரா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், மீனா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த திரைப்படம்  தீபாவளி தினத்தில் வெளியாக உள்ளது.

published on : 9th October 2021

ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் - புகைப்படங்கள்

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் சனிக்கிழமை நடைபெற்றது.

published on : 24th April 2021

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் - புகைப்படத் தொகுப்பு

சித்தரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. காலை 6 மணிக்கு தொடங்கி விக்னேஸ்வர பூஜை, புண்யாஹ வாசனம், பஞ்சகவ்யம், பாலிகை பூஜை, ரஷ்பந்தன பூஜை, கலச பூஜை, அக்னி காரியம், சுவாமி அம்பாள் காப்பு கட்டுதல், மாலை மாற்றுதல், மங்கள நாண் அணிவித்தல், பொரியிடுதல், பூர்ணாஹுதி, விசேஷ தீபாராதனை, மந்திர புஷ்பம், சதுர்வேதம், பஞ்சபுராணம், ஆசீர்வாதம், பிரசாதம் என 15 நடைமுறைகளின் படி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

published on : 4th May 2020

ஓவியாவை விட்டா யாரு

இயக்குநர் ராஜதுரை இயக்கத்தில், ஓவியா, அறிமுக நாயகன் சஞ்சீவ், செந்தில், சஞ்சீவி, பவர் ஸ்டார் சீனிவாசன், ராதாரவி, மீனா கிருஷ்ணன், கஞ்சா கருப்பு ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஓவியாவை விட்டா யாரு'. மதுரை செல்வம் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் ராஜதுரை இயக்கி உள்ளார்.

published on : 25th May 2019

கோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த எட்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நிலையில் 10ஆம் நாள் விழாவான நேற்று மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் காலை 9:05 மணி முதல் 9:29 மணிக்குள் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. திருக்கல்யாணத்தை காண திருப்பரங்குன்றத்தில் இருந்து ஸ்ரீ சுப்பிரமணியர், வள்ளி தெய்வானை சமேதராக திருக்கல்யாண மேடையில் தோன்றினார். திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெண்கள், தங்கள் கழுத்தில் புதுத் தாலி அணிந்தனர். திருமணம் முடிந்த ஸ்ரீ மீனாட்சி – சுந்தரேஸ்வரர், திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

published on : 18th April 2019

 உழவாரப்பணி

மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் 12 நாள் தெப்பத்திருவிழா வரும் 21 ம்தேதி வண்டியூர் மாரியம்மன் கோவில் மற்றும் முக்தீஸ்வரர் கோவில் எதிரில் உள்ள 22 ஏக்கர் தெப்பத்தில் நடைபெறுகிறது. மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த நட்சத்திரமான பூசம் தினத்தன்று. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் நடைபெறுகிறது. அன்று,  சுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சி ஆகியோர் கோவிலில் இருந்து முக்தீஸ்வரர் கோவில் வந்து, அங்கு பூஜை முடிந்து பின் மைய மண்டபத்தில் எழுந்தருளி, பிறகு அலங்கரிக்கப்பட்ட மிதவையில் 3 முறை காலை‌ மாலை இரவில் சுற்றி வந்து, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலித்தபின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் இரவில் கோவிலுக்குத் திரும்புவார்கள்.  மைய மண்டபத்திற்கு மீனாட்சி - சுந்தரேஸ்வரர் வருகையை முன்னிட்டு ஜனவரி 6ஆம் தேதி  அன்று  மதுரை அன்னை மீனாட்சி உழவாரப்பணி குழுவின் தலைவர் முருகானந்தம் சுவாமிகள் (ராமகிருஷ்ணா மடம்‌) மற்றும் ஓம் நமசிவாய உழவாரப்பணி குழு தலைவர் வெள்ளியம்பலம் இணைந்து  சண்முகம் சாமி தலைமையில் மைய மண்டபத்தை சுத்தம் செய்யும்  உழவாரப்பணி மிக சிறப்பாக நடைபெற்றது. உழவாரப்பணி தொடர்புக்கு : முருகதாஸ் 7373730396.

published on : 8th January 2019

அண்ணாமலையார் கோவிலில் உழவாரத்தொண்டு

அன்னை மீனாட்சி உழவாரப்பணிக்குழு சார்பில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உழவாரத்தொண்டு சிறப்பாக நடைபெற்றது.  மதுரையில் உள்ள அன்னை மீனாட்சி உழவாரப்பணிக்குழு கடந்த 18 வருடங்களாக திரு.சண்முகம் குருநாதர் தலைமையில் தமிழக  கோவில்களை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்யும் உழவாரப்பணி தொண்டு செய்கிறார்கள். அன்பர்கள் தங்கள் ஊரில் உள்ள கோவிலை சுத்தம் செய்ய விரும்பினால் தொடர்புக்கு சண்முகம் 9894360258, ஜீவா 9629229666, முருகதாஸ் 7373730396. தகவல்: ஹரி 9841267823

published on : 31st October 2018

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கல்யாண விருந்து

மதுரையில் ஸ்ரீ மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தையொட்டி, 'பழமுதிர் சோலை திருவருள் முருகன் பக்த சபை' ஏற்பாடு செய்திருந்த கல்யாண விருந்தில், லட்சக்கணக்கான பக்தர்களுக்கு விருந்து உபசாரம் செய்யப்பட்டது. படங்கள் உதவி - சசிகுமார், மலேசியா.

published on : 5th June 2018

மீனாட்சி தீட்சித்

நடிகை மீனாட்சி தீட்சித் புகைப்படங்கள்.

published on : 19th May 2018

பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

சிறப்புமிக்க சித்திரை திருவிழா இந்த ஆண்டு கடந்த 18-ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மீனாட்சி அம்மன் கோவில் 25ம் தேதி பட்டாபிஷேகமும், 26ம் தேதி திக்விஜயமும் நடந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடந்தது. அதைத் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து, அழகர் மலையிலிருந்து மதுரையை நோக்கி கிளம்பிய கள்ளழகர், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்துகொண்டு ஆற்றுக்கு வந்த கள்ளழகரை வீரராகவப்பெருமாள் எதிர்கொண்டு வரவேற்றார். அப்போது அங்கு கூடிநின்ற பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் கோஷமிட்ட, கள்ளழகர் பச்சைப் பட்டுடுத்தி‌ வைகை ஆற்றில் இறங்கி, பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

published on : 1st May 2018

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தேரோட்டம்

மதுரை மீனாட்சி கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்.18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளியபடி மாசி வீதிகளில் உலா வந்தனர். மீனாட்சி அம்மனுக்கு 25ஆம் தேதி பட்டாபிஷேகம், மறுநாள் திக் விஜயம், 27ஆம் தேதி திருக்கல்யாணம் என அடுத்தடுத்து விமரிசையாக உற்சவங்கள் நடைபெற்றன. இந்நிலையில் நேற்று மதுரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கிடையே மாசி வீதிகளில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரர், பிரியாவிடையும் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான தனித் தனி தேர்களில் பவனி வந்தனர். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கலெக்டர் வீரராகவராவ் உள்ளிட்ட பிரமுகர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

published on : 29th April 2018

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண மண்டபத்தில் சரியாக காலை 9.22 மணியளவில் மிதுன லக்னத்தில் வேத மந்திரங்கள் முழங்க, தேவர்கள் வாழ்த்த மேளதாளத்துடன் நாதஸ்வரம் இசைக்க மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி-சுந்தரேசுவரர் திருமண கோலத்தில், பிரியாவிடை அம்மனுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது பல்லாயிரக்கணக்கான பெண் பக்தர்கள் புதுதாலி அணிந்து கொண்டனர். திருக்கல்யாணம் முடிந்ததும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று தரிசனம் செய்தனர்.

published on : 28th April 2018

மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மீனாட்சியம்மனுக்கான பட்டாபிஷேக பூஜைகள் தொடங்கின. மீனாட்சி திருக்கல்யாண வைபவத்துக்கு முதல் நாள், திக்விஜயம் செய்து தேசம் முழுவதையும் தன்னுடைய ஆட்சிக்கு உட்படுத்திய இளவரசி மீனாட்சியை, மதுரையின் அரசியாக முடிசூட்டி பட்டாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். இரவு 7.50 மணி முதல் 8.04 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் அம்மனுக்கு வைரக்கிரீடம் சாற்றி, செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடந்தேறியது. படங்கள் உதவி: குண அமுதன், புகைப்படக் கலைஞர், மதுரை. தொடர்புக்கு: 9843221319  

published on : 26th April 2018
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை