• Tag results for மும்பை

ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்

நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு காரணமாக பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே முடங்கியதால், நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பை சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. இதனால் காற்று மாசு அளவு வெகுவாக குறைந்துள்ளது.

published on : 6th April 2020

லக்மே பேஷன் வீக் 2019

மும்பையில் நடைபெற்ற லக்மே பேஷன் வீக் குளிர்கால ஃபேஷன் ஷோ 2019 தொடக்க நிகழ்ச்சியில் வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ரா உடை உடுத்தி ஒய்யாரமாக நடந்து வரும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் மாடல் அழகிகள்.

published on : 21st August 2019

100 ஆண்டுகள் பழைமையான கட்டிடம் இடிந்து விபத்து

மும்பையில் 100 ஆண்டுகள் பழைமையான 4 மாடி குடியிருப்பு திடீரென இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 4 போ் உயிரிழந்தனா். இந்நிலையில் தீயணைப்புப் படை வீரா்களும், தேசியப் பேரிடா் மீட்புப் படையினரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இவ்விபத்தில் மேலும், 40 போ் வரை இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

published on : 16th July 2019

கனமழையால் தத்தளிக்கும் மும்பை

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழையால், மும்பை மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. ரயில்வே தண்டவாளங்கள் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்தில் ஓடு தளத்தினுள் வெள்ள நீர் புகுந்து பாதையை மூழ்கடித்துள்ளது.  இதை ஒட்டி அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. தொடர் மழையால் சாலைகளில் மழை நீர் சேர்ந்து ஆறுபோல் காட்சியளித்தது. 

published on : 2nd July 2019

மும்பையில் கன மழை

மும்பையில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில், தற்போது பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக குர்லா உள்ளிட்ட பகுதிகளிலும், தானே உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. மழை நீரால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

published on : 29th June 2019

ஐபிஎல் 2019 - மும்பை சாம்பியன்

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2019 இறுதி ஆட்டம் ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. ஐபிஎல் 2019 இறுதி ஆட்டத்தில் சென்னையை 1 ரன்னில் வீழ்த்தி 4-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி.  

published on : 14th May 2019

மும்பையில் வாக்களித்த திரை நட்சத்திரங்கள்

ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய பாலிவுட் நட்சத்திரங்கள், தங்களின் ட்விட்டர், பேஸ்புக் இணையதளப் பக்கங்களின் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கருத்து தெரிவித்திருந்தனர்.

published on : 30th April 2019

முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை அணி

டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது.  முதலில் ஆடிய மும்பை 187/8 ரன்களை குவித்தது. இறுதியில் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா அதிரடியாக ஆடி 3 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 32 ரன்களை குவித்து அவுட்டாகாமல் இருந்தார். 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 187 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய பெங்களூரு அணி 181/5 ரன்களை எடுத்து தோல்வியைத் தழுவியது. இதனையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தனது வெற்றியை பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ்.

published on : 29th March 2019

பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸின் திருமண வரவேற்பு

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா திருமணம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் அரண்மனையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதையடுத்து, தில்லியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் மோடி உள்பட பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.  இந்நிலையில், பாலிவுட் பிரபலங்களுக்காக மும்பையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே, அனில் கபூர், அனுஷ்கா சர்மா, சல்மான் கான், அனுபம் கெர் என பலக் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

published on : 21st December 2018

மழையால் ஸ்தம்பித்த மும்பை

நாட்டின் நிதி மையமான மும்பையில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் ரயில், சாலை மற்றும் விமான போக்குவரத்துகள் முற்றிலுமாக முடங்கியது. இதில் டோம்ப்விலி, தானே, கட்கோபர், குர்லா, சியான் மற்றும் தாதர் ரயில் நிலையங்களில் மழை நீர் தேங்கியது. தொடர் மழை காரணமாக மும்பையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

published on : 4th July 2018

மும்பையில் கனமழை

கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில், நேற்று இரவு முதல் இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஒடியது. சில இடங்களில் மரங்கள் விழுந்தன. கிழக்கு மற்றும் மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகளின் சில பகுதிகளில் நீரில்மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில்கள்  போக்குவரத்து தாமதமாகியுள்ளது.

published on : 25th June 2018

மும்பையில் கனமழை

பருவமழை தொடங்கியதையொட்டி, மும்பையில் கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்ன, ரயில்கள் சேவை தாமதமாகியுள்ளன. பருவமழை முன்கூட்டியே தொடங்கியிருப்பதால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

published on : 11th June 2018

மும்பை கமலா மில்ஸ் வளாகத்தில் தீ விபத்து

மும்பையில் லோயர் பேரல் பகுதியில் அமைந்துள்ள கமலா மில்ஸ் வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்ப்பட்டது. நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இதுவரை 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

published on : 29th December 2017

அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி

சீனாவில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற 2017 ஆண்டுக்கான உலக அழகிப் போட்டியில் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவியான மானுஷி சில்லர் உலக அழகிப் பட்டம் வென்றார். மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சுட்டுரையில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தாய் நாடு திரும்பியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

published on : 26th November 2017

மும்பையில் கன மழை

மும்பையில் பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கியது. கனமழை நீடிப்பதால் புறநகர் மற்றும் தொலைதூர ரயில் சேவையும் அடியோடு ஸ்தம்பித்து. இதையடுத்து வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் பணி துரிதப்படுத்தப்பட்டது.

published on : 20th September 2017
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை