• Tag results for மு.க.ஸ்டாலின்

திமுகவில் இணைந்தார் தங்கத்தமிழ் செல்வன்

அமமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தங்க தமிழ்செல்வன், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டாா். 

published on : 29th June 2019

கருணாநிதியின் 96-வது பிறந்த நாள்

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதிக்கு இன்று 96வது பிறந்த நாளையொட்டி  அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் திமுக முதன்மை செயலாளர் டி.ஆர் பாலு, பொருளாளர் துரைமுருகன், ஆ.ராசா எம்.பி. ஜெ.அன்பழகன், பொன்முடி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.  

published on : 4th June 2019

அம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், அம்பேத்கரின் 129வது பிறந்த நாளை முன்னிட்டு ஆம்பூரில் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.

published on : 14th April 2019

காங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை தொகுதிப் பங்கீடு  ஒப்பந்தத்தை பரிமாறிக்கொள்ளும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்-  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

published on : 21st February 2019

விமான நிலையத்திற்கு வந்து வரவேற்ற ஸ்டாலின்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் இருந்து விடுதலையான கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் தில்லியிலிருந்து விமானத்தின் முலம் சென்னைக்கு திரும்பினர். தங்கை கனிமொழியை தி..மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து வரவேற்றார். தொடர்ந்து ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் திமுக தலைவர் கலைஞரை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து ஆசிபெற்றனர். 

published on : 23rd December 2017

ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலை

சென்னை, கொளத்தூர் லட்சுமிபுரத்தில், நகைக் கடையில் தங்க நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கி இருந்தவரை கைது செய்ய முயற்சித்தபோது , தமிழக காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். பெரியபாண்டியனின் இல்லத்தில் அவரது தாய் ராமத்தாய், சகோதரர் ஜோசப், சகோதரி சுந்தரழகு மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்த அமைச்சர் க.பாண்டியராஜன், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அ.க.விசுவநாதன்.

published on : 14th December 2017

சென்னையில் ஸ்டாலின் ஆய்வு

கொடுங்கையூரில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்த 2 சிறுமிகளின் உடலுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். பிறகு மழை வெள்ளத்தால் சூழப்பட்டு தனித்தீவாக காட்சியளிக்கும் பி.எஸ்.என்.எல் குடியிருப்புப் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். இதனையடுத்து, ஓட்டேரி பகுதியில் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த மூதாட்டி ஒருவரின் வீட்டுக்கு நேரில் சென்று, அவரது உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

published on : 2nd November 2017

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்

தமிழகத்தின் புதிய கவர்னராக பன்வாரிலால் புரோகித் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்கள், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

published on : 6th October 2017

அண்ணாவின் 109வது பிறந்தநாள் விழா

அண்ணாவின் 109-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் க.அன்பழகன், சட்டப்பேரவை திமுக துணைத் தலைவர் துரைமுருகன்.

published on : 16th September 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை