• Tag results for மெட்ராஸ்

வந்தாரை வாழ வைக்கும் சென்னை - பகுதி IV

தமிழகத்தின் தலைநகரம். இந்தியாவின் நான்காவது பெரிய நகரம். உலகின் 35 பெரிய மாநகரங்களில் ஒன்று என எண்ணற்ற பெருமைகளை தன்னகத்தே கொண்டது இன்றைய சென்னை. இது, 1996-ஆம் ஆண்டுக்கு முன்புவரை 'மெட்ராஸ்' என்றே அழைக்கப்பட்டு வந்தது. இப்படி வந்தோரை வாழ வைக்கும் சென்னையின் பெருமைகளை ஒருசில நிமிடங்களில் சொல்லிவிட முடியாது. கடந்த 1963ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை உருவாக்கப்பட்ட நாளை நினைவூட்டும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ம் தேதி மெட்ராஸ் டே கொண்டாடப்பட்டு வருகிறது.

published on : 23rd August 2019

வந்தாரை வாழ வைக்கும் சென்னை - பகுதி III

தமிழகத்தின் தலைநகரம். இந்தியாவின் நான்காவது பெரிய நகரம். உலகின் 35 பெரிய மாநகரங்களில் ஒன்று என எண்ணற்ற பெருமைகளை தன்னகத்தே கொண்டது இன்றைய சென்னை. இது, 1996-ஆம் ஆண்டுக்கு முன்புவரை 'மெட்ராஸ்' என்றே அழைக்கப்பட்டு வந்தது. இப்படி வந்தோரை வாழ வைக்கும் சென்னையின் பெருமைகளை ஒருசில நிமிடங்களில் சொல்லிவிட முடியாது. கடந்த 1963ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை உருவாக்கப்பட்ட நாளை நினைவூட்டும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ம் தேதி மெட்ராஸ் டே கொண்டாடப்பட்டு வருகிறது.

published on : 23rd August 2019

வண்டலூர் உயிரியல் பூங்கா

1855ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 'மெட்ராஸ் பூங்கா' என்ற பெயரில், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டது. பின்னர் 1985ல் வண்டலூருக்கு மாற்றப்பட்டது. 1490 ஏக்கர் பரப்பளவில் பூங்கா மிகப் பிரம்மாண்டமாக விரிந்துள்ளது அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா. இங்கு சுமார் 1,675 வகையான உயிரினங்கள் உள்ளன. அவற்றில் பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, இருவாழ் உயிரிகள், மீன்கள் உள்ளிட்டவை அடங்கும். குறிப்பாக நீர்யானை, வெள்ளைப் புலிகள், சிங்கவால் குரங்கு, நீள வால் குரங்கு, மனிதக்குரங்கு, புள்ளி மான், இமாலயக் கறுப்புக் கரடி, செந்நாய், வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி, சாம்பல் நாரை, கரண்டிவாயன், வாலற்ற பெருங்குரங்கு ஆகிய விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன.

published on : 15th October 2018

கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் பூஜை ஸ்டில்ஸ்

மாயவன் படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமான தயாரிப்பாளர் சி.வி.குமார். தொடர்ந்து மீண்டும் இயக்குநராக 'கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' என்ற படத்தைத் தொடங்கியிருக்கிறார். இப்படம் வட சென்னை பின்னணியில் உருவாகவுள்ளது. இதில் வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், அசோக் குமார், பகவதி பெருமாள் ஆகியோர் நடிக்கின்றனர்.

published on : 25th July 2018

378வது பிறந்தநாள் காணும் சென்னை மாநகரம்

தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை இன்று 378வது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இன்று சென்னை என அழைக்கப்படும் மதராஸ் நகரம் 1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி உருவாக்கப்பட்டது. வந்தோரை வாழ வைத்த தமிழகத்தின் தலைநகரான சென்னையின் வரலாறு மிகவும் பழமையானது. தென்னிந்தியாவின் வாசலான சென்னை ஆரம்ப காலத்தில் மதராஸ் பட்டணம், மதராஸ் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. கடந்த 1996ஆம் ஆண்டு தான் அதிகாரப்பூர்வமாக சென்னை என்று மாற்றப்பட்டுள்ளது. 1835ல் சென்னை மருத்துவப்பள்ளி தொடங்கப்பட்டது. 1871ல் சென்னையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. 1876ல் சென்னை துறைமுகத்தின் கட்டுமானப்பணிகள் தொடங்கின. 1888ல் இந்தியாவின் முதல் கிரிக்கெட் கிளப்பான மதராஸ் கிரிக்கெட் கிளப் தொடங்கப்பட்டது. 1900ல் மூர்மார்க்கெட் திறக்கப்பட்டது. 1913ல் சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டடம் திறக்கப்பட்டது. 1947ம் ஆண்டு இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது. சென்னை மாகாணம் 1969ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

published on : 22nd August 2017

சென்னையில் பழைமையான கார்கள் காட்சி

மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப் சார்பில் சென்னை, திருவான்மியூரில் நடத்தப்பட்ட பழைமையான கார்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள் காட்சியை நடிகர் விக்ரம் பிரபு தொடங்கி வைத்தார். 1920 ஆண்டில் இருந்து 1970 வரையிலும் புழக்கத்திலிருந்த "ஜாக்குவார்', "எம் ஜி டாட்ஜ் பிரதர்ஸ்', "செவரலே'," ஃபோர்ட்', "பியுகோ', "ஆஸ்டின்', "மெர்சிடெஸ் போன்ற புகழ் பெற்ற நிறுவனங்களின் பழங்கால வாகனங்கள் காட்சியில் இடம்பெற்றன.

published on : 21st August 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை