• Tag results for ரஜினி

ரஜினியின் பேட்ட வெளியானது - திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி உள்ள பேட்ட படத்தில் இளமையான தோற்றத்தில் ரஜினி தோன்றியதை அடுத்து திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், பால் அபிஷேகம் செய்து கொண்டாடினர். இதில் சிம்ரன், திரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சின்ஹா, நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

published on : 11th January 2019

ரஜினி - அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம், திக்குமுக்காடும் திரையரங்கம்

ரஜினி நடித்த பேட்ட படமும் அஜித்தின் விஸ்வாசம் படமும் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளன. அதிகாலை 4 மணிக்கு சிறப்புக் காட்சியாக பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், பேட்ட படம் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க இருக்க, சென்னை ராயப்பேட்டையில் உள்ள திரையரங்கு வளாகத்தில் வைத்து காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்தைத் தொடர்ந்து தென் சென்னை கிழக்கு மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் மணமக்களுக்கு சீர்வரிசை வழங்கப்பட்டது.

published on : 10th January 2019

ரஜினிகாந்த்

தென்னிந்தியாவின் சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த்தின் முக பாவனை.

published on : 26th December 2018

பேட்ட

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘பேட்ட’. இதில் ரஜினியுடன் இணைந்து நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா, மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி, ராம்தாஸ், ராமச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர்.

published on : 23rd December 2018

அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அண்ணா அறிவாலயத்தில் 9 அடி உயரத்தில் வெண்கல சிலையை, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் நடிகர் ரஜினிகாந்த், பிரபு, வடிவேல், விவேக் உள்பட பலரும் பங்கேற்றனர். திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில், பொதுச்செயலாளர் க.அன்பழகன் வரவேற்றார். துரைமுருகன், ஜெ.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

published on : 17th December 2018

பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா ஸ்டில்ஸ்.

published on : 10th December 2018

ரஜினி ரசிகர்கள் ஆரவாரக் கொண்டாட்டம்

2.0 படம் இன்று வெளியானதை அடுத்து ரஜினியின் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், கற்பூரம் காட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

published on : 30th November 2018

ரஜினியின் 2.0

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் 2.0. எந்திரன் படத்தின் 2ம் பாகமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன், கலாபவன் சஜான், ரியாஸ் கான், சுதன்சூ பாண்டே உள்பட பலர் நடித்துள்ளனர்.

published on : 21st November 2018

2.0 டிரைலர் வெளியீட்டு விழா

2.0 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், அக்‌ஷய்குமார்,  ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் 2.0 படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

published on : 7th November 2018

கருணாநிதி உடல்நலம் விசாரித்த நடிகர் ரஜினி - விஜய்

வயது முதிர்வு காரணமாகக் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஓய்வெடுத்து வந்த தி.மு.க தலைவர் கருணாநிதி, திடீர் ரத்த அழுத்தக் குறைவு காரணமாகச் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, காவேரி மருத்துவமனை நேரில் சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினி, விஜய் மற்றும்  திரையுலகத்தை சேர்ந்தோர் கேட்டறிந்த வண்ணம் உள்ளனர்.

published on : 1st August 2018

காலா

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 'காலா' திரைப்படம் ஜூன் 7ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், காலா திரைப்படத்திலிருந்து சில காட்சிகள். இதில் நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, அருள்தாஸ், அஞ்சலி பட்டேல், சாக்‌ஷி அகர்வால் உள்பட பலர் நடித்துள்ளனர்.

published on : 3rd June 2018

ஜெயலலிதா நினைவிடத்தில் கவுதமி அஞ்சலி

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடதிதில் தனது மகளுடன் வந்த நடிகை கவுதமி, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பிறகு பேட்டி அளித்த கவுதமி, தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த வெற்றிடத்தை ரஜினி, கமலால் உடனடியாக நிரப்பிவிட முடியாது என்றார்.

published on : 13th March 2018

எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்தார் ரஜினிகாந்த்

சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆரின் வெண்கல சிலையை ரஜினிகாந்த் திறந்து வைத்தார். நான் எம்.ஜி.ஆர் ஆக முடியாது, ஆனால் எம்.ஜி.ஆர் போல் ஆட்சியைத் தருவேன், இனிமேல் தான் ஆன்மிக அரசியலை பார்க்கப்போகிறீர்கள், நம் பக்கம் ஆண்டவனே இருக்கிறான் என்றார். இவ்விழாவில் நடிகர்கள் பிரபு, விஜயகுமார், கலைப்புலி தாணு, கே.எஸ்.ரவிகுமார், விக்ரமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

published on : 7th March 2018

காலா டீஸர் ஸ்டில்ஸ்

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'காலா'. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தனுஷ் தயாரிக்க, லைகா நிறுவனம் வெளியிடும் இப்படத்தில், நானா படேகர், சமுத்திரக்கனி, 'வத்திக்குச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். 

published on : 2nd March 2018
1 2 3 > 
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை