• Tag results for லால்

சாஹோ

பெரும் பொருட்ச்செலவில் உருவாகியுள்ள பிரபாஸின் 'சாஹோ' படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என 4 மொழிகளில் ரிலிஸாக உள்ளது. பிரபாஸின் 19-வது படமான இதனை சுஜீத் இயக்கியுள்ளார்.  இதில் பிரபாஸுக்கு நாயகியாக ஷர்தா கபூர் நடித்துள்ளார். மேலும், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், சங்கி பாண்டே, ஜாக்கி செராஃப், டினு ஆனந்த், மகேஷ் மஞ்சரேகர், மந்திரா பேடி, ஈவ்லின் ஷர்மா, லால், வெண்ணிலா கிஷோர் ஆகியோர் நடித்து உள்ளனர்.

published on : 29th August 2019

காப்பான்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் 'காப்பான்'. இந்தப் படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் மோகன்லால் பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளார்.

published on : 23rd July 2019

தொடரும் போக்குவரத்து நெரிசல்

சென்னை மற்றும் புற நகர்களை இணைக்கும் முக்கிய சாலையாக வேளச்சேரி சாலை ஒட்டி பெரும்பாலான குடியிருப்புகள், கல்லூரிகள் மற்றும் ஐ.டி. நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் தத்தளிக்கும் வேளச்சேரி மெயின் சாலை.

published on : 19th June 2019

குப்பத்து ராஜா

எஸ் ஃபோகஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் சரவணன்.எம், எஸ்.சிராஜ், சரவணன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `குப்பத்து ராஜா'. ஜி.வி.பிரகாஷ்குமார், பார்த்திபன் இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தில் பல்லக் லால்வானி, பூனம் பாஜ்வா, நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் எம். எஸ். பாஸ்கர், யோகி பாபு, ஆர்.என்.ஆர்.மனோகர், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

published on : 6th April 2019

எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா

மதுரை தோப்பூரில் சுமார் 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  சுமார் 202 ஏக்கரில், 750 படுக்கை வசதியுடன் அமைய உள்ளது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும் மதுரை – பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, தஞ்சாவூர் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, திருநெல்வேலியில் அமைக்கப்பட்ட அரசு மருத்துவமனையின் சிறப்பு பிரிவுகளையும் திறந்து வைத்தார். இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

published on : 27th January 2019

தேசத்தந்தையின் 71வது நினைவு நாள் அனுசரிப்பு

இந்திய நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டு இன்னுயிரை ஈந்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அவர்களது தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாகவும் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 71வது நாளையொட்டி கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையொட்டி நாடு முழுவதிலும் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப்படங்களுக்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் சென்னை மெரினாவில் போக்குவரத்தை நிறுத்தி 2 நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

published on : 31st January 2018

69வது குடியரசு தினம் அனுசரிப்பு

நாட்டின் 69வது குடியரசு தினத்தையொட்டி சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக்கொடியை ஏற்றினார். தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றார். விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குடியரசு தின விழாவை பொதுமக்கள் வெகுவாக கண்டுகளித்தனர்.

published on : 26th January 2018

கொல்கத்தா கட்டிடத்தில் தீ விபத்து

கொல்கத்தா நகரின் மையப்பகுதியில் ஜவாஹர் லால் நேரு சாலையில் உள்ள 19 மாடிக் கட்டத்தில் ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலகமும், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களும் இயங்கி வரும் நிலையில், கட்டடத்தின் 16-ஆவது தளத்தில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கியின் கணினி கட்டுப்பாட்டு அறையில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். கட்டடத்தில் இருந்து வெளியேறும் கரும்புகை.

published on : 20th October 2017

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்

தமிழகத்தின் புதிய கவர்னராக பன்வாரிலால் புரோகித் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்கள், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

published on : 6th October 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை