- Tag results for வாஜ்பாய்
![]() | முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு நாள் - புகைப்படங்கள்முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 4-ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி டெல்லியில் அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர், பிரதமர் நரேந்திர் மோடி, அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். |
![]() | வாஜ்பாய் பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதைமறைந்த பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் 97-ஆவது பிறந்த நாளையொட்டி, அரசியல் தலைவர்கள் பலரும் அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். |
![]() | வாஜ்பாய் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள் |
![]() | முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95-வது பிறந்த நாள்மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக மூத்த தலைவர் அத்வானி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினார். |
![]() | வாஜ்பாய் முதலாம் ஆண்டு நினைவு தினம்முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். இதில் வாஜ்பாய் அவர்களின் வளர்ப்பு மகளான நமிதா கவுல் பட்டாச்சார்யா மற்றும் பேத்தி நிஹாரிக்காவும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். |
![]() | மகாத்மா காந்தி - வாஜ்பாய் நினைவிடத்தில் மோடி மரியாதைநாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்க இருக்கும் நரேந்திர மோடி தில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்திலும் மோடி மரியாதை செலுத்தினார். மோடியுடன் அமித்ஷா உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்க இருக்கிறார். அவருடன் மத்திய அமைச்சர்களும், வெளிநாட்டுத் தலைவர்கள், உள்நாட்டு அரசியல் தலைவர்கள், மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், பல்துறை வல்லுநர்கள், திரைப்படத் துறை பிரபலங்கள் என பலர் பங்கேற்கின்றனர். |
![]() | வாஜ்பாய் நினைவாக 100 ரூபாய் நாணயம் வெளியீடுமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை வெளியிட்டார். இந்த 100 ரூபாய் நாணயம், 35 கிராம் எடையுள்ளது. அடல் பிகாரி வாஜ்பாயின் பெயர் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில் நான்கு சிங்கங்கள் உடைய இந்திய அரசு முத்திரையுடன் 'ஸத்யமேவ ஜெயதே' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. |
![]() | விடை பெற்றார் வாஜ்பாய்தில்லியில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ஜனாதிபதி, பிரதமர், துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவருடைய இறுதி ஊர்வலம் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ராணுவ இசை மற்றும் வேத மந்திரங்கள் முழங்க இறுதிச்சடங்குகள் நடைபெற்ற பின்னர், முப்படையை சேர்ந்த தளபதிகள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். இதையடுத்து, ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமித் கர்சாய் மற்றும் பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் உள்ளிட்ட வெளிநாட்டு பிரமுகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். இறுதியாக, 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் அமித்ஷா, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட தலைவர்கள், பல்வேறு மாநில முதல் மந்திரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். |
![]() | வாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலிபா.ஜ.க-வின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் வயது மூப்பின் காரணமாகவும், சிறுநீர்த்தொற்று நோய் ஏற்பட்டதாலும் தில்லியில் உள்ள எம்ய்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து அவரது உடலிலுக்கு தேசியக்கொடி போர்த்தப்பட்டு அஞ்சலிக்காக கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டுள்ளது. முதலில் குடும்ப உறுப்பினர்கள் முதலில் அஞ்சலி செலுத்திய பிறகு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வேங்கையா நாயுடு, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். படங்கள் உதவி: ஏஎன்ஐ |
![]() | வாஜ்பாய் காலமானார் (1924 - 2018)பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் வயது மூப்பின் காரணமாகவும், சிறுநீர்த்தொற்று நோய் ஏற்பட்டதாலும் தில்லியில் உள்ள எம்ய்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இதைதொடர்ந்து அவரது உடலுக்கு பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தில்லி முதல்வர் கெஜ்ரிவால், பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி, காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்ட பலர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாயின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்