• Tag results for விருது

ரேடியோ மிர்ச்சி இசை விருது விழா

மும்பையில் நடைபெற்ற 12வது ரேடியோ மிர்ச்சி இசை விருது விழாவில் கலந்துக் கொண்ட திரையுலக நட்சத்திரங்கள்.

published on : 20th February 2020

92ஆவது ஆஸ்கர் விருது விழா

ஹாலிவுட்டில் வெளியான படங்களையும், கலைஞர்களையும் கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது. அந்த வகையில் 92ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. ஆஸ்கர் விருதை வென்ற படங்கள், கலைஞர்கள் குறித்த முழுவிவரம் வருமாறு: சிறந்த படம் -  பாராசைட், சிறந்த இயக்குநர் -  போங் ஜூன் ஹோ (பாராசைட்), சிறந்த நடிகர் -  ஜாக்குயின் பீனிக்ஸ் (ஜோக்கர்), சிறந்த நடிகை -  ரெனீ ஜெல்வேகர் (ரூடி), சிறந்த ஆவணப்படம் -  அமெரிக்கன் பேக்டரி, சிறந்த வெளிநாட்டு படம் -  பாராசைட் (கொரியன்), சிறந்த அனிமேஷன் திரைப்படம் -  டாய் ஸ்டோரி-4, சிறந்த அனிமேஷன் குறும்படம் - ஹேர் லவ், சிறந்த ஆவண குறும்படம் -  லேர்னிங் டு ஸ்கேட்போர்ட் இன் ஏ வார்ஜோன், சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் -  தி நெய்பர்ஸ் விண்டோ, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் -  குய்லூம் ரோச்செரோன், கிரெக் பட்லர் மற்றும் டொமினிக் டுஹோய் (1917), சிறந்த ஒளிப்பதிவாளர் -  ரோஜர் டீக்கின்ஸ் (1917), சிறந்த படத்தொகுப்பாளர் -  மைக்கேல் மெக்கஸ்கர் மற்றும் ஆண்ட்ரூ பக்லேண்ட் (ஃபோர்டு வெர்சஸ் ஃபெராரி), சிறந்த திரைக்கதை -  போங் ஜூன் ஹோ, ஹான் ஜின் வான் (பாராசைட்), தழுவல் திரைக்கதை -  டைகா வெயிட்டி (ஜோஜோ ராபிட்), சிறந்த பின்னணி இசை -  ஹில்தூர் குனாடாட்டிர் (ஜோக்கர்), சிறந்த பாடல் -  லவ் மீ அகெய்ன் (ராக்கெட் மேன்), சிறந்த துணை நடிகர் - பிராட் பிட் (ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்), சிறந்த துணை நடிகை -  லாரா டெர்ன் (மேரேஜ் ஸ்டோரி), சிறந்த ஒப்பனை -  கசு ஹிரோ, அன்னே மோர்கன் மற்றும் விவியன் பேக்கர் (பாம்ஷெல்), ஆடை வடிவமைப்பு -  ஜாக்லின் டூரான் (லிட்டின் வுமன்), தயாரிப்பு வடிவமைப்பு -  பார்பரா லிங் மற்றும் நான்சி ஹை (ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்), சிறந்த ஒலி படத்தொகுப்பு -  டொனால்டு சில்வஸ்டர் (ஃபோர்டு வெர்சஸ் ஃபெராரி), ஒலி கோர்ப்பு -  மார்க் டெய்லர் (1917).

published on : 11th February 2020

நடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது

சுவிட்சா்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டில் ‘கிரிஸ்டல்’ விருதை பெற்றார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். மக்களிடையே மனநலம் சாா்ந்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதில் அவரது செயல்பாட்டை கெளரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

published on : 21st January 2020

2018 பிசிசிஐ விருதுகள்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2018-19-ஆம் ஆண்டின் விருதுகள் வழங்கப்பட்டன. ஜஸ்ப்ரீத் பும்ரா, பூனம் யாதவ் சிறந்த வீரர்களுக்கான பாலி உம்ரிகர் விருது பெற்றனர். முன்னாள் வீரா் கே.ஸ்ரீகாந்த், மகளிா் பிரிவில் அன்ஜும் சோப்ரா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

published on : 13th January 2020

தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவிப்பு

66-வது இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தில்லி விக்யான் பவனில் நடைபெற்றது. இந்த விழாவில் திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு இந்த ஆண்டு நடிகர் அமிதாப் பச்சன் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருதை வழங்கி கவுரவிக்கப்பட்டார். 

published on : 29th December 2019

66-வது தேசிய விருதுகள் விழா

66-வது தேசிய  விருது வழங்கும் விழா தில்லி உள்ல விக்யான் பவனில்  நடைபெற்றது. விருதுகளை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார். விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சா் பிரகாஷ் ஜவடேகா் பங்கேற்றார். இந்த ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. திரைப்படத் துறையில் அளிக்கப்படும் உயா்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருது இந்த ஆண்டு பாலிவுட் நடிகா் அமிதாப் பச்சன் தேர்வு செய்யப்பட்டாா். சிறந்த தமிழ் படமாக 'பாரம்' தேர்வானது. கீர்த்தி சுரேஷ் நடித்த 'மகாநடி' படம் சிறந்த தெலுங்குப் படம் என்கிற தேசிய விருதைப் பெற்றது.

published on : 24th December 2019

வோக் எக்ஸ் நிகா ஃபேஷன்

தி பவர் லிஸ்ட் 2019 விருது விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்.

published on : 19th December 2019

எட்டயபுரத்தில் பாரதி விழா: தினமணி சார்பில் இளசை மணியனுக்கு விருது 

மகாகவி பாரதியாரின் 138-ஆவது பிறந்த நாளையொட்டி, தினமணி சார்பில் மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா எட்டயபுரத்தில் இன்று நடைபெற்றது.  இதில், தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு மூத்த ஆய்வாளா் இளசை மணியனுக்கு விருதை வழங்கினார்.

published on : 11th December 2019

20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா

20வது சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா மும்பையில் கோலாகலமாக துவங்கி நடைபெற்றது. விழாவின் பாலிவுட் நடிகர் - நடிகைகள் கலந்து கொண்டு ஹிட் பாடல்களுக்கு நடனமாடினார். இதனால் ரசிகர்கள், பார்வையாளர்கள் மெய்மறந்து கைதட்டி மரியாதை செலுத்தினர்.

published on : 20th September 2019

தேசிய விளையாட்டு மற்றும் சாதனை விருது 2019

விளையாட்டு வீரர்களுக்கான தேசிய விருது வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் வீரர் - வீராங்கனைகளுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் மாற்றுத்திறனாளி தடகள வீராங்கனை தீபா மாலிக் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து அர்ஜூனா விருதை  தஜிந்தேர் சிங்- தடகளம், முகமது அனாஸ் - தடகளம், பாஸ்கரன் - பாடிபில்டிங், ப்ரமோத் பகத்- பேட்மின்டன், அஞ்சும் மோட்கில் - துப்பாக்கிச்சுடுதல், ஹர்மீத் ரஜுல் தேசாய் - டேபிள்,  பூஜா தண்டா - மல்யுத்தம், சோனியா லாதர்- குத்துச்சண்டை, ரவீந்திர ஜடேஜா- கிரிக்கெட், சிங்லென்சனா சிங் - ஹாக்கி, அஜய் தாக்கூர்- கபடி, கவுரவ் சிங் - மோட்டார் விளையாட்டு, சிம்ரன் சிங் - போலோ, பாமிதிபடி சாய் ப்ரனித் - பேட்மின்டன், ஸ்வப்னா பர்மன் - தடகளம்,  ஃபவுத் மிர்சா - குதிரைச்சவாரி, குர்பீத் சிங் - கால்பந்து, பூனம் யாதவ் - கிரிக்கெட், சுந்தர் சிங் - தடகளம் ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டது.

published on : 29th August 2019

சைமா விருதுகள் 2019 - பகுதி II

சைமா எனப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி கத்தாரில் நடைபெற்றது. நான்கு மொழி திரை பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி இரண்டு நாட்களாக பிரிக்கப்பட்டு, ஆகஸ்ட் 15-ஆம் தேதி தெலுங்கு மற்றும் கன்னடம் படங்களுக்கும், ஆகஸ்ட் 16-ஆம் தேதி தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கு விருது வழங்கப்பட்டது. இவ்விழாவில் சிரஞ்சீவி மற்றும் மோகன்லால் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொன்டனர்.

published on : 16th August 2019

சைமா விருது 2019 - பகுதி I

சைமா எனப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி கத்தாரில் நடைபெற்றது. நான்கு மொழி திரை பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி இரண்டு நாட்களாக பிரிக்கப்பட்டு, ஆகஸ்ட் 15-ஆம் தேதி தெலுங்கு மற்றும் கன்னடம் படங்களுக்கும், ஆகஸ்ட் 16-ஆம் தேதி தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கு விருது வழங்கப்பட்டது. இவ்விழாவில் சிரஞ்சீவி மற்றும் மோகன்லால் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொன்டனர்.

published on : 16th August 2019

௭டிசன் விருது விழா

சென்னையில் நடைபெற்ற 12-வது ௭டிசன் விருது விழாவில் கலந்து கொண்ட திரை பிரபலங்கள். 

published on : 10th March 2019

ஆஸ்கர் விருது 2019 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 91வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, தொகுப்பாளர் இன்றி நடைபெற்றது. இதில் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது ரெஜினா கிங்குக்கும், சிறந்த ஆவணப்படம் ஃப்ரீ சோலோவுக்கும், சிறந்த ஒப்பனைக்கான ஆஸ்கர் விருது வைஸ் படத்திற்கும், சிறந்த துணை நடிகர் விருது கிரீன் புக் படத்தில் நடித்த மாஹர்ஷெலா அலிவுக்கும், சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது தி ஃபேவரைட் படத்தில் நடித்த ஒலிவியா கால்மனிற்கும், போஹிமியான் ராஃப்சோடி படத்தில் நடித்த ரமி மாலிக்கிற்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதும், இந்திய பெண் குறித்த பீரியட் எண்ட் ஆஃப் சென்டன்ஸ் என்ற ஆவண குறும்படத்துக்கு ஆஸ்கர் விருதும், சிறந்த இசைக்கான விருது Bohemian Rhapsody படத்திற்கும், சிறந்த வெளிநாட்டு படத்துகான விருது ரோமா படத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.

published on : 26th February 2019

எம்ஜிஆர்-சிவாஜி விருது விழா

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற  எம்.ஜி.ஆர். - சிவாஜி அகாடமியின் சினிமா விருதுகள் வழங்கும் விழாவில், சினிமா துறையைச் சேர்ந்த பலருக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

published on : 4th January 2019
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை