• Tag results for விழா

மதராஸப்பட்டினம் உணவுத் திருவிழா

சென்னை தீவுத் திடலில், தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை மற்றும் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து இந்த கலாசார விழாவை ஏற்பாடு செய்துள்ளது. இந்த கண்காட்சியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.  விழாவில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், விஜயபாஸ்கர், சரோஜா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த திருவிழாவானது இன்று முதல் 15ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. 

published on : 14th September 2019

விநாயகர் சதுர்த்தி - பகுதி II

விநாயகரின் பிறந்த தினமாக கருதப்படும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. பக்தர்களுக்கு பிடித்த வகையில் யானைமுக விநாயகர், வெற்றி விநாயகர், வீர விநாயகர், சித்தி விநாயகர், சிம்மாசன விநாயகர், பாகுபலி விநாயகர், தாமரை விநாயகர், யானை வாகனர், மூஷிக, வெற்றி விநாயகர்,  ராஜ விநாயகர், சுயம்பு விநாயகர், கற்பக விநாயகர், பைக் விநாயகர்,  எலி-புலியின் மேல் அமர்ந்திருக்கும் விநாயகர் என பல்வேறு வகையிலான சிலைகள் தயாரிக்கப்பட்டு, பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

published on : 3rd September 2019

விநாயகர் சதுர்த்தி விழா - அலைமோதிய கூட்டம்

இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றானது விநாயகர் சதுர்த்தி. இதையொட்டி பூஜை பொருட்கள் வாங்க நேற்று கடைவீதியில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. மேலும் சிறிய மற்றும் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை பொதுமக்கள் பார்வையிட்டு வாங்கி சென்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  உலகம் முழுவதும் விழா கோலம் பூண்டது.

published on : 3rd September 2019

100 வது பிறந்தநாள்... இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை விக்ரம் சாராபாய் நினைவுகள்!

இந்திய இயற்பியலாளரான விக்ரம் சாராபாய் அகமதாபாத்தில் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர். அவர் நினைத்திருந்தால் ஒரு தொழிலதிபராகி இருக்கக் கூடும் ஆனால், அவரது ஆர்வம் கணிதம் மற்றும் இயற்பியலில் இருந்ததால் அதை நோக்கி ஈர்க்கப்பட்டார். இன்று இந்திய விண்வெளித்திட்டத்தின் தந்தை யார் எனக் கேட்டால் யார் வேண்டுமானாலும் சொல்வார்கள் அது விக்ரம் சாராபாய் என்று! அந்த அளவுக்கு அத்துறையில் சாதனைகள் பல புரிந்து விருதுகள் பலவற்றைக் குவித்தவர் அவர். அவரது 100 ஆவது பிறந்த நாளை கடந்த ஆகஸ்டு 12 ம் தேதி டூடுல் வெளியிட்டுச் சிறப்பித்து கொண்டாடியது கூகுள்... அவரது அரிய புகைப்படங்களில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்.

published on : 16th August 2019

ஈரானியர்களின் திர்கான் கோடைவிழா கொண்டாட்டப் புகைப்படங்கள்!

திர்கான் ஃபெஸ்டிவல் என்பது கனடாவில் வருடம் தோறும் நடத்தப்படும் ஒரு கோடை விழா. இந்த விழா கொண்டாடப்படுவதற்கான முக்கிய காரணம்... ஈரானிய மற்றும் பாரசீக(பெர்ஷியன்) கலைச் செல்வங்களை கனடாவில் புகழிடம் தேடி செட்டிலாகி விட்ட இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே. 1979 ஆம் ஆண்டைய இஸ்லாமியப் புரட்சிக்குப் பின் ஈரானை விட்டு நீங்கி கனடாவில் புகழிடம் தேடிக் கொண்ட ஈரானியர்கள் தங்களது கலை, கலாசாரம், பண்பாடு, வாழ்வியல் முறைகள் உள்ளிட்டவற்றை மீட்டெடுக்கும் பெருவிழா இது. கனடாவின் டொராண்டோ நகரில் இருக்கும் ஹார்பர் ஃப்ரண்ட் செண்ட்டர் எனும் இடத்தில் சுமார் 400 தன்னார்வலர்கள் முன்னெடுக்க சி இ ஓ மெஹர்தாத் அரியனெஜாத் தலைமையுரை நிகழ்த்த இந்த ஆண்டின் கலைவிழா நடந்தேறியது.

published on : 10th August 2019

மகளிர் கல்லூரியில் ஆடிப்பெருக்கு விழா

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்-ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் பண்பாடு, பாரம்பரியத்தை வலியுறுத்தும் நோக்கத்தில் மாணவிகள் பாவாடை, தாவணி, சேலை அணிந்து ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர். முன்னோர் விட்டுச் சென்ற கலாசாரத்தை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் முயற்சியாகவே இந்த விழா கொண்டாடப்பட்டது.

published on : 1st August 2019

அருள்பாலிக்கும் ஸ்ரீ ஆதி அத்திவரதர்

காஞ்சிபுரத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த, திவ்ய தேசங்களில் ஒன்றாக வரதராஜப்பெருமாள் கோயில் திகழ்கிறது. இங்கு மூலவர் வரதர் மேற்கு பார்த்தவாறு திருநின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். தாயார் பெருந்தேவியார் கிழக்கு நோக்கிஎழுந்தருளியுள்ளார். பக்தர்கள் கேட்கும் வரங்கள் அனைத்தையும் அளிப்பவராகையால் இந்தப் பெருமாள், `வரதர்’ என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் மிகச்சிறப்பாக போற்றப்படுவது அத்தி வரதர். அனந்தசரஸ் திருக்குளத்தின் அடியில் வீற்றிருக்கும் அத்திவரதர் பெருமாளை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். வெள்ளித் தகடுகள் பதித்த பெட்டியில் சயனக் கோலமாக அனந்தசரஸ் திருக்குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேலே வந்து, சயன மற்றும் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிப்பார்.  ஐராவதம் யானையே மலைவடிவம் கொண்டு நாராயணனைத் தாங்கி நின்றமையால் இத்தலம் அத்திகிரி என்றும் அழைக்கப்படுகிறது. தங்கப்பல்லி, வெள்ளிப்பல்லி தரிசனம் இக்கோயிலின் மற்றுமொரு சிறப்பாக உள்ளது. 1979-ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி எழுந்தருளிய அத்திவரதர், இந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிப்பார். 

published on : 25th July 2019

இசை கொண்டாடும் இசை விழா - பாகம் II

இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி, சென்னையை அடுத்த பூந்தமல்லி ஈவிபி ஃபிலிம் சிட்டியில், இளையராஜாவின் 'இசை கொண்டாடும் இசை' என்ற பெயரிலான பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. பின்னணிப் பாடகர்கள் கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதுப், மனோ உள்ளிட்டோர் பங்கேற்று பாடி அசத்தினர். மெர்குரி சார்பில் நடைபெறும் இந்த விழாவுக்கு 'தினமணி' மற்றும் 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ்கள் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு மீடியா பார்ட்னர்களாக இருந்தனர்.

published on : 4th June 2019

ஏற்காட்டில் 44-வது கோடைவிழா மலர்க் கண்காட்சி

ஏற்காட்டில் 44-வது கோடைவிழா மலர் கண்காட்சி தொடங்கியது. தோட்டக்கலைத்துறை சார்பில் ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்காவில் ரோஜா, டேலியா, சால்வியா, மேரிகோல்டு, அஸ்டர், பெண்டஸ், கேலக்ஸ், ஜெனியா, கோழிக்கொண்டை உள்ளிட்ட 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மலர்கள் மூலம் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி பணிகளை மாவட்ட கலெக்டர் ரோகிணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

published on : 31st May 2019

மான்ஸ்டர் படத்தின் வெற்றி விழா

மான்ஸ்டர் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மான்ஸ்டர் படத்தின் படக்குழுவினர் புகைப்படத் தொகுப்பு.

published on : 29th May 2019

கொரில்லா படத்தின் ஆடியோ விழா

ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் ராகவேந்திரா தயாரிப்பில், டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா - ஷாலினி பாண்டே நடிப்பில் குழந்தைகள் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரையும் திருப்தி படுத்தும் விதமாக உருவாகி இருக்கும் படம் `கொரில்லா'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்.

published on : 28th May 2019

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்

நடிகை ஐஸ்வர்யா ராய் 72வது கேன்ஸ் திரைப்பட விழாவில் தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். ஐஸ்வர்யா ராய் பல ஆண்டுகளாக இத்திரைப்பட விழாவுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

published on : 20th May 2019

மான்ஸ்டர் படத்தின் இசை விழா

எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானிசங்கர் உள்பட படக்குழுவினர் கலந்து கலந்து கொண்ட 'மான்ஸ்டர்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா புகைப்படங்கள்.

published on : 11th May 2019

தேரோட்டம்

108 வைணவ திவ்ய தேசங்களில் 61வது திவ்ய தேசமாக போற்றப்படும் சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி கோயிலின் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை நடைபெற்ற தேரோட்டம். நாச்சியார்கள் சமேதராய் அருள்பாலிக்கும் பார்த்தசாரதி.

published on : 25th April 2019

அழகர் மலையில் கள்ளழகர்

மதுரையில் சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை 2.30 மணிக்கு கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி மதுரை நகரில் விடிய, விடிய பக்தர்களுக்குக் காட்சியளித்தார். பிறகு தல்லாகுளத்தில் இருந்து பெருமாள் கோயில் சென்றார். அங்கு பக்தர்களுக்கு அருள்பாலித்து விட்டு, மீண்டும் மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர் என்று போற்றப்படும் சுந்தரராஜப் பெருமாள்.

published on : 23rd April 2019
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை