• Tag results for . பதவியேற்பு

காங்கிரஸ் கட்சியின் தலைவரானார் ராகுல் காந்தி

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி, கடந்த 19 ஆண்டுகளாக பதவி வகித்து வந்த நிலையில், சோனியா காந்திக்கு தீடீர் உடல் நலக்குறைவு காரணமாக, அவரால் அரசியலில் முழு வீச்சில் ஈடுபட முடியவில்லை. இதையடுத்து புதிய தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டு, முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். பதவியேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி, ராபர்ட் வதேரா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முன்னிலையில் இப்பதவியை ஏற்றார் ராகுல். காங்கிரஸ் கட்சியின் 87-வது தலைவராகவும் நேரு குடும்பத்தில் இருந்து 6-வது காங்கிரஸ் தலைவராகவும் ராகுல் காந்தி தேர்வாகியுள்ளார்.

published on : 17th December 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை