சுடச்சுட

  

  தில்லி கோவிந்தபுரியில் முன் விரோதம் காரணமாக இளைஞரை  கொலை செய்ததாக 6 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில், அவரது இரு நண்பர்கள் படுகாயமடைந்தனர். இது குறித்து, தில்லி போலீஸார் வியாழக்கிழமை கூறியதாவது:

  தில்லியைச் சேர்ந்த லால்து சௌத்ரி, வினோத், பிரவீன் என்ற மூவரும் கோவிந்தபுரியில் உள்ள நண்பர் சேத்தனின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.  அப்போது அங்கு வந்த 6 பேர் கும்பல் அவர்களை கட்டையாலும், ஆயுதங்களாலும் தாக்கியதில் சௌத்ரி உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்தனர்.

  இரு தரப்புக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. கொலை குறித்து, விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸார் கூறினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai