சுடச்சுட

  

  காங்கிரஸýடனான தொகுதிப் பங்கீடு இன்னும் 10 நாள்களில் முடிவாகும்; அதுகுறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கூறினார்.

  இரு கட்சிகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், வரும் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரு தரப்பினரும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

  இதுகுறித்து மத்திய வேளாண் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான சரத் பவார், டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

  வரும் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸýடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் 10 நாள்களில் தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்படும்.

  தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது.

  இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பிரஃபுல் படேல் காங்கிரஸýக்கு எவ்விதக் கெடுவும் விதிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

  தீர்ப்பை விவாதிக்கக் கூடாது: மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சரத் பவார் அளித்த பேட்டியின்போது, குஜராத் கலவர வழக்கில் மோடியை நீதிமன்றம் விடுவித்திருப்பது பற்றி பிரஃபுல் படேல் தெரிவித்த கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

  அதற்கு, "ஒரு வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டால், அந்தத் தீர்ப்பை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, அதைப்பற்றி விவாதிக்கக் கூடாது' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai