சுடச்சுட

  

  பணப் பரிமாற்ற அலுவலகத்தில் ரூ.9 லட்சம் திருட்டு

  By புதுச்சேரி  |   Published on : 29th September 2015 04:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் அன்னியச் செலாவணி பணப் பரிமாற்ற அலுவலகத்தில் ரூ.9 லட்சம் திருடப்பட்டது.

  புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள தனியார் கட்டடத்தில் 2-வது தளத்தில் தங்கம் மற்றும் அந்நியச் செலாவணி பணப் பரிமாற்ற அலுவலகம் உள்ளது.

  இங்கு கடந்த 18-ம் தேதி அலுவலகத்தில் உள்ள மின்சாதனத்தில் சிறிய தீ விபத்து ஏற்பட்டது. அப்போது மின் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு பழுதை சரி செய்தனர். அந்த நேரத்தில் கண்காணிப்பு கேமிரா நிறுத்தப்பட்டது.

  மறுநாள் பார்த்தபோது அலுவலக பீரோ திறக்கப்பட்டு, அதிலிருந்த ரூ. 9 லட்சம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது. பீரோவில் கள்ளச்சாவி போட்டு பணத்தை மர்ம நபர்கள் திருடியிருப்பது தெரிந்தது.

  இதையடுத்து, அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் மேலாளர் ஜெய்ட்டன் விசாரித்தார். பின்னர், பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

  அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ஜிந்தா கோதண்டராமன் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai