சுடச்சுட

  

  புதுக்கோட்டை மாவட்டம், லெனாவிலக்கு செந்தூரான் பொறியியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற வழிகாட்டி கருத்தங்கில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று அவர் பேசியது:

  மாணவர்கள் தங்களிடம் இருந்துதான் குறிக்கோள்களை தேடவேண்டும்.

  அப்படி தேடினால், இந்த சமுதாயம் எதிர்நோக்கும் வளர்ச்சியை நாம் பெற முடியும். நல்ல நண்பர்களையும், நல்ல சுற்றுச்சூழலையும் ஏற்று, அதற்கேற்ப நம்மை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும். ஆசை இல்லையேல் பிடிப்பு இல்லை, பசி இல்லையேல் தேடுதல் இல்லை, தேடல் இல்லையேல் வாழ்க்கை அர்த்தமற்றது.

  விட்டுக்கொடுக்கும் தன்மை இருந்தால் மட்டுமே, நல்ல நிலையை அடையலாம். வளைந்து கொடுக்கும் தன்மை மாணவர்களுக்கு அதிகம் தேவை. நாம் எங்கே இருக்கிறோம் என்பதைவிட, அந்த இடத்திலிருந்து இந்த சமுதாயத்துக்கு என்ன செய்யப் போகிறோம் என்பதுதான் முக்கியம். மாணவர்கள், தங்களின் உணர்வுகள், எண்ணங்களுக்கு பெற்றோர், ஆசிரியர், நண்பர்களை வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும்.

  எந்த நோக்கத்துக்காக பெற்றோர் படிக்க அனுப்புகிறார்களோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதை மாணவர்கள் முதல் கடமையாக நினைக்க வேண்டும். தேசவிரோத, சமூகவிரோத செயல்களில் மாணவர்கள் எப்போதும் ஈடுபடக் கூடாது என்றார் அவர்.

  கல்லூரித் தலைவர் ஆர். வயிரவன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் எஸ். நடராஜன், எம். பாண்டிகிருஷ்ணன், மனிதவள இயக்குநர் மீனா வயிரவன், முதல்வர் அ. நவீன்சேட், முதன்மைச் செயல் அலுவலர் எஸ். கார்த்திக் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai