சுடச்சுட

  

  பள்ளி மாணவர்களுக்கான  அறிவுத் தேடல் போட்டிகள்

  By குமாரபாளையம்,  |   Published on : 26th May 2016 06:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குமாரபாளையம் எஸ்எஸ்எம் பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரிகள் இணைந்து மாணவ, மாணவியரிடையே மறைந்திருக்கும் பொது அறிவு, அறிவுத் தேடல் திறனை வெளிக்கொணரும் வகையில் திறன் காணும் போட்டிகளை திங்கள்கிழமை நடத்தின.
   இப்போட்டிகளில் ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட பள்ளிளில் இருந்து 102 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். வினாடி வினா போட்டியில் 34 குழுக்களும், அறிவுத் தேடல் போட்டியில் 182 பேரும் பங்கேற்றனர்.
   கல்லூரித் தலைவர் எம்.எஸ்.மதிவாணன் தலைமை வகித்தார்.
   மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் சி.ராஜமாணிக்கம் போட்டிகளைத் தொடக்கி வைத்தார்.
   வினாடி வினாப் போட்டியில் முதல் இரண்டு இடங்களை மேட்டூர் மால்கோ வித்யாலயா பள்ளியும், மூன்றாமிடத்தை பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளியும் பெற்றது.
   அறிவுத் தேடலில் எலவமலை கிரேஸ் மெட்ரிக் பள்ளி மாணவன் பி.லோகநாதன், செம்புளிச்சாம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.கலாமணி, அவல் பூந்துறை லயன்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவி ஈ.திவ்யா ஆகியோர் முதல் மூன்றிடங்களைப் பெற்றனர். கல்வி இயக்குநர் எஸ்.பாலமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai