சுடச்சுட

  

  வெற்றிக்கு இன்றியமையாதது தேடல் மனப்பான்மை என்று, கர்நாடக விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கே.பாலவீர ரெட்டி தெரிவித்தார்.

  கோவை குமரகுரு பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. 13 பாடப் பிரிவுகளில் மொத்தம் 1100 மாணவ, மாணவியர் பட்டம் பெற்றனர்.

  மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி, கே.பாலவீர ரெட்டி பேசியது: தொலைநோக்குப் பார்வை, குறிக்கோளுடன் கூடிய முயற்சி, அயராத உழைப்பு வெற்றிக்கு வழிவகுக்கின்றன. ஓய்வில்லாத கடிகாரம்போல இளைஞர்கள் முனைப்புடன் இருக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் சுய தொழில்முனைவோராகவும் தொழில் துறைத் தலைவர்களாகவும் முன்னேறி நாட்டின் விதியை மாற்றியமைக்க வேண்டும்.

  நாட்டை வல்லரசாக்குவதே லட்சியமாக இருக்க வேண்டும். இதற்குத் தேவையான அனைத்து சக்திகளும் நம்மிடம் குவிந்துள்ளன. இவற்றைச் சரியான முறையில் தேசத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும். சோதனைகள் நிறைந்தது இன்றைய சூழல். இச் சூழலில் புதுமையும் தேடல் மனப்பான்மையும் வெற்றிக்கு இன்றியமையாதது. இந்திய கல்வி நிறுவனங்கள், உலக கல்வி நிறுவனங்களுக்கு இணையான ஆக்கப்பூர்வமான செயல்முறை கல்வித் திட்டத்துக்கு மாற வேண்டும் என்றார்.

  குமரகுரு பொறியியல் கல்லூரி துணைத் தலைவர்கள் கிருஷ்ணராஜ் வாணவராயர், என்.மாணிக்கம் ஆகியோர் விழாவுக்குத் தலைமை வகித்தனர். இந்தியா எண்டர்பிரைசஸ் முதன்மை ஆலோசகர் சங்கர் அண்ணாசாமி, துணைத் தாளாளர் சங்கர் வாணவராயர் ஆகியோர் பேசினர். முதல்வர் ஆர்.எஸ்.குமார் கல்வி அறிக்கை வாசித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai